Wednesday, October 31, 2018


தீபாவளி சிறப்புப் பேருந்துகள்: முன்பதிவு இன்று தொடக்கம்

By DIN | Published on : 31st October 2018 01:43 AM |

சென்னையில் தீபாவளிப் பண்டிகைக்காக, இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகளுக்கான முன் பதிவு புதன்கிழமை (அக்டோபர் 31) தொடங்குகிறது.
தீபாவளிப் பண்டிகையையொட்டி, சென்னை உள்ளிட்ட மாநகரங்களில் இருந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல, 20, 567 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. நவம்பர் 3, 4, 5 ஆகிய தேதிகளில் சென்னையிலிருந்து மட்டும் 4,542 சிறப்புப் பேருந்துகள் உள்பட 11,367 பேருந்துகளும், பிற மாவட்டங்களிலிருந்து 9,200 பேருந்துகளும் என மொத்தம் 20,567 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இதேபோல, தீபாவளிப் பண்டிகை முடிந்த பின்பு பயணிகள், சென்னை மற்றும் பிற ஊர்களுக்கு செல்ல ஏதுவாக நவம்பர் 7 முதல் 10 -ஆம் தேதி வரை சென்னைக்கு 4,207 பேருந்துகள், பிற மாவட்டங்களிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு 7,635 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 11,842 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

30 முன்பதிவு மையங்கள்: சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவு மையங்கள் அக்டோபர் 31-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 5 -ஆம் தேதி வரை செயல்படும். இதற்காக, கோயம்பேட்டில் 26, தாம்பரம் சானட்டோரியம் (மெப்ஸ்) பேருந்து நிலையத்தில் 2, பூவிருந்தவல்லி, மாதவரம் பேருந்து நிலையங்களில் தலா ஒன்று என மொத்தம் 30 சிறப்பு முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த சிறப்பு முன்பதிவு மையங்களை மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சென்னை கோயம்பேட்டில் புதன்கிழமை காலை 11 மணிக்கு திறந்து வைக்கிறார்.

இங்கு பயணிகள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு, அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

NEWS TODAY 28.12.2024