Monday, October 29, 2018

`தகாத உறவு மனரீதியாக துன்புறுத்திய குற்றமல்ல’ - சென்னை உயர்நீதிமன்றம்!


கலிலுல்லா.ச

தகாத உறவு மனரீதியாகத் துன்புறுத்திய குற்றமாகக் கருத முடியாது எனச் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், தகாத உறவு காரணமாக மனைவியைத் தற்கொலைக்கு தூண்டியதாகச் சேலத்தைச் சேர்ந்தவருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது.



சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த மாணிக்கம் என்பவருக்கும், சங்கீதா என்பவருக்கும் 2000-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ரோஷினி என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், மாணிக்கத்துக்கு, சரசு என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதைப் பலமுறை கண்டித்தும் மாணிக்கம் கேட்காததால், தனது ஒன்றரை வயது மகளுடன் கிணற்றில் குதித்து சங்கீதா தற்கொலை செய்துகொண்டார். கடந்த 2003 ம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் தொடர்பாக வரதட்சணை கொடுமை, தற்கொலைக்குத் தூண்டியது ஆகிய குற்றச்சாட்டில் மாணிக்கம் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்த சேலம் மகளிர் சிறப்பு நீதிமன்றம், மாணிக்கத்துக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து 2007-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை ரத்து செய்யக் கோரி மாணிக்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், ``தகாத உறவு மனரீதியாகத் துன்புறுத்திய குற்றமாகக் கருத முடியாது. தற்கொலை தூண்டிய குற்றச்சாட்டுகளைக் காவல்துறை நிரூபிக்கத் தவறிவிட்டது. எனவே, மாணிக்கத்துக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்து, அவரை விடுதலை செய்கிறேன்” எனத் தீர்ப்பளித்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 13.11.2024