1 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ காப்பீடு அமல்
Added : அக் 26, 2018 23:36
ஒரு லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு, மின் வாரியம், மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்திஉள்ளது.மின் வாரியத்தில், உதவி பொறியாளர், இளநிலை உதவியாளர் என, 86 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். ஓய்வுபெற்ற ஊழியர்களின் எண்ணிக்கை, ஒரு லட்சத்தை எட்டியுள்ளது. மாதம் ரூ.180நிரந்தர ஊழியர்களுக்கு, மின் வாரியம் சார்பில், மருத்துவ காப்பீட்டு திட்டம் உள்ளது. அத்திட்டம், ஓய்வூதியதாரர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது.இதுகுறித்து, மின் வாரிய தொழிலாளர், பொறியாளர், ஐக்கிய சங்க பொதுச்செயலர், சுப்ரமணியன் கூறியதாவது:மருத்துவ காப்பீட்டிற்காக, பணியில் உள்ள ஊழியர்கள் சம்பளத்தில் இருந்து, மாதம், 180 ரூபாயை, நிர்வாகம் பிடித்தம் செய்கிறது. இதன் வாயிலாக, ஊழியர்கள் மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்கள், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை, 4 லட்சம் ரூபாய் வரை, மருத்துவ சிகிச்சைகளுக்கு காப்பீடு பெறலாம்.சிக்கலான அறுவை சிகிச்சைகளுக்கு, 7.50 லட்சம் ரூபாய் வரை காப்பீடு பெறலாம். தமிழக அரசு, பணியில் உள்ள ஊழியர்களை போல், ஓய்வூதியதாரர்களுக்கும், சமீபத்தில், மருத்துவ காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தியது.பிடித்தம்அதை ஏற்று, மின் வாரியமும், தற்போது, ஓய்வூதியதாரர்களுக்கு, மருத்துவ காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. இது, நவ., முதல் அமலுக்கு வரும். இதற்காக, ஓய்வூதியத்தில், மாதம், 380 ரூபாய் பிடித்தம் செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
நமது நிருபர் -

No comments:
Post a Comment