அரசு மருத்துவமனையில் இனி பிறப்பு, இறப்பு பதிவு
Added : அக் 24, 2018 22:28
ராமநாதபுரம், :அரசு மருத்துவமனைகளில் நேற்று முதல் பிறப்பு, இறப்பு பதிவு மேற்கொள்ளப்படுகிறது.சென்னை தவிர்த்து 11 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 528 பேரூராட்சிகளில் நகர் பகுதிகளில் பிறப்பு, இறப்பு பதிவு செய்வதை நகராட்சி, பேரூராட்சி நிர்வாகம் செய்தது. சான்றிதழும் வழங்கினர்.
பதிவேடுகளை நகராட்சி சுகாதார அலுவலர்கள் பராமரித்தனர்.இந்த பணி பொது சுகாதாரத்துறைக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், நகர்புறங்களில் பிறப்பு, இறப்பு பதிவு செய்ய அரசு மருத்துவமனைகளில் நேற்று முதல் பதிவாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.அரசு மருத்துவமனைகளில் உள்ள பிறப்பு, இறப்பு பதிவுகளை இவர்கள்செய்வார்கள். இதற்கான பதிவேடுகளையும் பராமரிப்பார்கள். ஆண்டுக்கு ஒரு முறை, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, நிர்வாகங்களிடம் இதனை ஒப்படைப்பர்.சான்றிதழ் திருத்தம் செய்யும் போது உள்ளாட்சி நிர்வாகங்களில் உள்ள பதிவேடுகளின் மூலம் உறுதி செய்யப்பட்ட பின் திருத்த சான்றிதழை அரசு மருத்துவமனையில் நியமிக்கப்பட்டுள்ள பதிவாளர்களே வழங்குவார்கள்.பிறப்பு, இறப்பு மாநில பதிவாளராக பொது சுகாதாரத்துறைஇயக்குனரும், சுகாதார மாவட்டங்களில் உள்ள சுகாதாரத்துறை துணை இயக்குனர்கள் கூடுதல் பிறப்பு, இறப்பு பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment