Saturday, October 27, 2018

கெடு!

சி.பி.ஐ., இயக்குனர் மீதான
விசாரணையை 2 வாரத்தில் முடியுங்க
லஞ்ச ஒழிப்பு ஆணையத்துக்கு உத்தரவு


புதுடில்லி,:கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட, சி.பி.ஐ., இயக்குனர், அலோக் வர்மா மீதான புகார்கள் குறித்து, இரண்டு வாரங்களில், சி.வி.சி., எனப்படும் மத்திய ஊழல் கண் காணிப்பு ஆணைம் விசாரணை நடத்த வேண்டும்; தற்காலிக இயக்குனராக நியமிக் கப்பட்டுள்ள, நாகேஷ்வர ராவ், கொள்கை முடிவுகளை எடுக்கக் கூடாது' என, உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.



முக்கிய புலனாய்வு வழக்குகளை விசாரித்து வரும், சி.பி.ஐ., அமைப்பின் இயக்குனராக, அலோக் வர்மா பதவி வகித்து வந்தார். இவருக்கு அடுத்து, இரண்டாம் நிலையில், சி.பி.ஐ., சிறப்பு இயக்குனராக, ராகேஷ் அஸ்தானா பதவி வகித்தார்.டில்லியைச் சேர்ந்த, மாட்டிறைச்சி ஏற்றுமதியாளர், மொயின் குரேஷி தொடர்பான வழக்கை, அஸ்தானா உத்தரவுப்படி, சி.பி.ஐ.,யில், டி.எஸ்.பி., யாக உள்ள தேவேந்திர குமார் விசாரித்தார்.

இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு தொழில் அதிபரான, சதீஷ் ஸனாவிடம், சிறப்பு இயக்குனர் அஸ்தானா, 3 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது.லஞ்சம் வாங்கினார் இது குறித்து, அஸ்தானா கூறுகையில், 'லஞ்சம் தரப்பட்டது உண்மை; அந்த பணத்தை, அலோக் வர்மா தான் வாங்கினார்' என, குற்றம் சாட்டி னார்.அதிகார போட்டியால், அலோக் வர்மாவும், அஸ்தானாவும், பரஸ்பரம் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டினர்.

இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, அமைச்சரவையின் நியமன குழு, சி.பி.ஐ., இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர் அஸ்தானா ஆகியோரை கட்டாய விடுப்பில் அனுப்ப உத்தரவிட்டது. சி.பி.ஐ., தற்காலிக இயக்குனராக, நாகேஷ்வர ராவ் நியமிக்கப்பட்டார்.

இதற்கிடையே, தன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில், அலோக் வர்மா மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய், நீதிபதிகள், எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில்

ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல், துஷார் மேத்தா, ''அலோக் வர்மா, ராகேஷ் அஸ்தானா மீதான புகார்கள் குறித்த விசாரணை நடந்து வருகிறது. விசாரணை நடத்த போதிய அவகாசம் தரப்பட வேண்டும்,'' என்றார்.

மீறுவது முறையாகுமா?

அலோக் வர்மா சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர், பாலி எஸ்.நாரிமன், கூறியதாவது:சி.பி.ஐ., இயக்குனர் பதவியில், அலோக் வர்மா இரண்டு ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்டோர் அடங்கிய தேர்வு குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதை மீறுவது முறையாகுமா?இவ்வாறு அவர் கூறினார்.

இரு தரப்பு வாதங்களுக்கு பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:அலோக் வர்மா மீது, மத்திய அமைச்சரவை செயலர், ஆக., 24ல், புகார்கள் தெரிவித்து, குறிப்பு எழுதியுள்ளார். அது தொடர்பாக, சி.வி.சி., நடத்தும் விசாரணையை, உச்ச நீதிமன்றத் தின் ஓய்வு பெற்ற நீதிபதி, ஏ.கே.பட்நாயக் கண் காணிப்பார். இந்த விசாரணையை, இரு வாரங் களில் முடிக்க வேண்டும். சி.பி.ஐ., தற்காலிக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ள நாகேஷ்வர ராவ், கொள்கை முடிவு மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த முடிவு எடுக்கக் கூடாது.

அவர், சி.பி.ஐ.,யில் வழக்கமான பணிகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.அக்., 23 முதல், இன்று வரை, நாகேஷ்வர ராவால் எடுக்கப்பட்ட, பணி இடமாற்றம் உள்ளிட்ட அனைத்து முடிவுகள் குறித்த பட்டியல், மூடிய உறையில், அடுத்த விசாரணை நடக்கும் நாளான, நவ., 12ல், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். பின், வழக்கு குறித்து தக்க உத்தரவு பிறப்பிக்கப் படும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

உச்ச நீதிமன்ற நடவடிக்கையால் உண்மை, நிலை நாட்டப்பட்டு உள்ளது. பின்வாசல் வழியாக, சி.பி.ஐ.,யை கைப்பற்ற முயன்ற, மோடி அரசின் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. சி.பி.ஐ.,யின் சுதந்திரத்தில் தலையிட முயன்றோர் முகத்தில் பலமான அடி விழுந்துள்ளது. மோடி அரசின் கைப்பொம்மையாக, சி.வி.சி., செயல்பட முடியாது.
ரந்தீப்சுர்ஜேவாலாகாங்., செய்தி தொடர்பாளர்'

சி.பி.ஐ.,யின் புகழை காப்பாற்ற நடவடிக்கை'

சி.பி.ஐ., விவகாரம் தொடர்பாக, மத்திய நிதிய மைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, அருண் ஜெட்லி நேற்று கூறியதாவது:சி.பி.ஐ., அமைப்பில்,

சமீபத்தில் நிகழ்ந்த சம்பவங்களால், அதன் நம்பகத்தன்மைக்குஇழுக்கு ஏற்பட்டுள்ளது. தனியொரு நபருக்காக, ஆதரவாகவோ, எதிராகவோ அரசு செயல்படாது. சி.பி.ஐ.,க்கு உள்ள நற்பெயரை காப்பாற்ற வேண்டும் என்பதில் தான், அரசு அக்கறை காட்டுகிறது.

சி.வி.சி., அளித்த பரிந்துரை அடிப்படையில், சி.பி.ஐ., இயக்குனர்கள் மீதான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்தது.அலோக் வர்மா மீதான புகார்கள் குறித்து, இரு வாரங்களில், சி.வி.சி., விசாரணையை முடிக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது, மிக நல்ல முடிவு.இவ்வாறு அவர் கூறினார்.

டில்லியில் போராட்டம்:

காங்., தலைவர் கைது

சி.பி.ஐ., இயக்குனராக பதவி வகித்த அலோக் வர்மாவிடம் இருந்து அதிகாரங்கள் பறிக்கப் பட்டதை கண்டித்து, டில்லியில் நேற்று, சி.பி.ஐ., தலைமையகம் அருகே, காங்., தலைவர் ராகுல், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அவரை, போலீசார் கைது செய்து, வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.நிருபர்களிடம் ராகுல் கூறியதாவது:

ரபேல் விமான ஒப்பந்தம் வாயிலாக கிடைத்த, 30 ஆயிரம் கோடி ரூபாயை, அனில் அம்பானியின் பாக்கெட்டில், பிரதமர், 'டிபாசிட்' செய்துள்ளார்.இதிலிருந்து அவர் தப்பியோட லாம். ஆனால், உண்மையை மறைக்க முடியாது. சி.பி.ஐ., இயக்குனரை நீக்குவதால் எதுவும் ஆகிவிடாது. உண்மை ஒரு நாள் கட்டாயம் வெளிவரும்.இவ்வாறு அவர் கூறினார்.

ராகுலை, லோதி ரோடில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்ற போலீசார், அங்கு சிறிது நேரம் அமர வைத்திருந்தனர்; பின், அவரை விடுவித்தனர். இதுபோல், நாட்டின் பல்வேறு நகரங்களில் உள்ள, சி.பி.ஐ., அலுவலகங்கள் முன், காங்கிரசார் நேற்று போராட்டம் நடத்தினர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 13.11.2024