Wednesday, October 31, 2018

நிர்மலாதேவி 'வலையில்' விழுந்தவர்கள் யார் : வாக்குமூலத்தில் அதிர்ச்சி தகவல்

Added : அக் 31, 2018 03:46



மதுரை: பேராசிரியை நிர்மலாதேவி தனது வலையில் விழுந்தவர்கள் பற்றி போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லுாரி உதவி பேராசிரியையாக இருந்தவர் நிர்மலா தேவி. மாணவியர் சிலரை தவறான பாதைக்கு அழைத்ததாக எழுந்த புகாரில் போலீசார் அவரை கைது செய்தனர்.

 இவ்வழக்கில் மதுரை காமராஜ் பல்கலை உதவி பேராசிரியர் முருகன், முன்னாள் ஆய்வு மாணவர் கருப்பசாமி கைது செய்யப்பட்டனர். வழக்கை சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரிக்கின்றனர்.போலீசில் நிர்மலாதேவி அளித்த வாக்குமூலம்:

 எனக்கும் அருப்புக்கோட்டை சரவணபாண்டியனுக்கும் 1996 ல் திருமணம் நடந்தது. 2 பெண் குழந்தைகள் பிறந்தனர். கணவர் பி.இ., சிவில் படித்தவர். தெற்கு ரயில்வேயில் கர்நாடகா, கேரளாவில் பணிபுரிந்தார். 2003 ல் சென்னைக்கு மாறுதலானார். கிழக்கு தாம்பரத்தில் வசித்தோம். பக்கத்து வீட்டு பெண்ணுடன், எனது கணவருக்கு பழக்கம் ஏற்பட்டது. மன உளைச்சலால் தற்கொலைக்கு முயன்றேன்.கணவரின் முயற்சியால் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லுாரியில் 2008 ல் கணிதத்துறை உதவி பேராசிரியர் பணி கிடைத்தது. 2009 ல் கணவர் ரயில்வேயில் நீண்ட விடுப்பில் சவுதி அரேபியா சென்றார்.

மதுரை காமராஜ் பல்கலையில் 2013 ல் பிஎச்.டி., முடித்தேன். கணவரின் தம்பி மகனுக்கு மொட்டைபோட சங்கரன்கோவில் சென்றோம். திருநெல்வேலி மாவட்ட அறநிலையத்துறை இணை கமிஷனராக இருந்த 'அன்பானவரின்' அறிமுகம் கிடைத்தது. அவருடன் நெருக்கமானேன். அவருக்கும், மனைவிக்கும் பிரச்னை இருந்தது. அவர் என்னை திருமணம் செய்ய விரும்பினார். பிரச்னையால், சென்னைக்கு இடமாறுதலில் சென்றார்.எனது கணவர் சவுதியில் பணியை விட்டுவிட்டு அருப்புக்கோட்டை வந்தார். நகராட்சியில் கான்டராக்ட் பணி செய்தார். நஷ்டத்தால் பண நெருக்கடி ஏற்பட்டது. இதனால் கல்லுாரியின் முன்னாள் செயலருடன் நெருங்கி பழகினேன். அவர் 'சவுண்டானவர்' அடிக்கடி பணம் கொடுப்பார்.எனக்கும், கணவருக்கும் இடையிலான பிரச்னையை தீர்க்க வந்த பிஜூ, ரவிச்சந்திரன் மற்றும் சிலருடன் நெருங்கி பழகினேன். இதனால் கல்லுாரியில் யாரும் என்னிடம் சரியாக பேசமாட்டார்கள்.கோயில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து நாங்கள் பராமரித்த போது பிரச்னை ஏற்பட்டது.

அப்போது அருப்புக்கோட்டையில் அறநிலையத்துறை ஆய்வாளராக இருந்த 'ஆனந்தமானவருடன்' நெருக்கம் ஏற்பட்டது.பணி தொடர்பாக மதுரை காமராஜ் பல்கலைக்கு சென்றபோது, கட்டுப்பாட்டாளராக இருந்த 'விஜயமானவருடன்' பழகி நெருக்கமாக இருந்தேன். அதே பல்கலையில் 2017 ல் புத்தாக்கப் பயிற்சியில் சேர்வதற்காக வணிகவியல்துறை உதவி பேராசிரியராக இருந்த முருகனை சந்தித்தேன். அவர் அருப்புக்கோட்டைக்கு என் வீட்டுக்கு வந்தார். அப்போது என்னுடன் 'நெருக்கமாக' இருந்தார். பல்கலை புத்தாக்க பயிற்சியில் சேர்ந்தேன்.அப்போது முருகன், 'கல்லுாரி பெண்களிடம் பேசி ஏற்பாடு செய்ய முடியுமா?' என்றார்; 'செய்கிறேன்' என்றேன். அவர் கருப்பசாமியின் தொலைபேசி எண்ணை கொடுத்து, 'பல்கலையில் எந்த உதவி வேண்டுமானாலும் அவரை தொடர்பு கொள்ளலாம்' என்றார்.

நான் புத்தாக்கப் பயிற்சிக்கு சென்றபோது, கருப்பசாமியின் அறிமுகம் கிடைத்தது. அவரது சொந்த ஊரான திருச்சுழிக்கு எனது காரில் சென்றோம். வழியில் நிறுத்தி காருக்குள் இருவரும் 'நெருக்கமாக' இருந்தோம்.அப்போது அவர், 'சென்னை செல்கிறோம். அங்கு ஒரு அசைமென்ட் உள்ளது. கல்லுாரி மாணவிகளை ரெடி பண்ணி தருவீர்களா?' என்றார். 'முயற்சிக்கிறேன்' என்றேன்.முருகன், கருப்பசாமி தொடர்ந்து கேட்டு வந்ததால் எனது அலைபேசியிலிருந்து ஒரு மாணவியிடம் பேசினேன். மேலும் சில மாணவியரை மூளைச்சலவை செய்தேன். மாணவிகள் சம்மதிக்கவில்லை. நான் சஸ்பெண்ட் செய்யப்பட்டேன்.

இதை முருகனிடம் தெரிவித்தபோது, 'கவலைப்படாதீர்கள். உதவி செய்கிறேன்' என்றார். பல்கலையின் எச்.ஆர்.டி.சி., இயக்குனராக இருந்த 'கலையானவர்' எனக்கு போன் செய்தார்.அவரிடம், 'கல்லுாரியில் படிக்கும் பெண்கள் வேண்டும் என முருகன், கருப்பசாமி கேட்டதால்தான் இவ்வாறு பேசி மாட்டிக் கொண்டேன்' என்றேன். அவரை எனது காரில் அவரை ஏற்றிக் கொண்டு விருதுநகர் நோக்கிச் சென்றபோது, காரை நிறுத்தி இருவரும் 'நெருக்கமாக' இருந்தோம்.மதுரை காமராஜ் பல்கலையில் எனக்கு துணைவேந்தர், பதிவாளர் என யாரையும் தனிப்பட்ட முறையில் தெரியாது. அவர்களிடம் பேசியது இல்லை. நான் இந்த மாணவிகளைத் தவிர, இதற்கு முன் வேறு எந்த மாணவியையும் இவ்வாறு அழைத்தது இல்லை.இவ்வாறு வாக்குமூலம் அளித்துள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 28.12.2024