தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு: 3-வது நீதிபதி சத்ய நாராயணன் வெளியிடுகிறார்
Updated : அக் 25, 2018 01:53 | Added : அக் 25, 2018 00:25
சென்னை: 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது.
முதல்வர் பழனிசாமிக்கு எதிராக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கவர்னரை சந்தித்து கடிதம் அளித்தனர். இதையடுத்து, கட்சி தாவல் சட்டத்தின் கீழ், 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து, சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். கடந்த, 2017 செப்டம்பரில், இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.
18 தொகுதிகளும் காலியானதாக, தேர்தல் ஆணையம் அறிவித்தது. தகுதி நீக்கத்தை எதிர்த்து, 18 பேரும், சென்னை உயர் நீதிமன்றத்தில், மனுக்கள் தாக்கல் செய்தனர். 18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் வழக்கில் சபாநாயகர் உத்தரவு செல்லும் என தலைமை நீதிபதியும், செல்லாது என நீதிபதி சுந்தரும் தங்களின் தீர்ப்பில் கூறியுள்ளனர். நீதிபதிகள் இவ்வாறு மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் மேலும் இந்த வழக்கில் புதிர் எழுந்துள்ளது.
இந்த வழக்கு 3வதாக ஒரு நீதிபதி விசாரித்து தீர்ப்பு வழங்கலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.அதன்படி மூன்றாவது நீதிபதி சத்ய நாராயணன் கடந்த 12- நாட்களாக வழக்கை விசாரித்து வந்தார். இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று காலை 10.30 மணிக்கு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment