Wednesday, October 24, 2018

மகா புஷ்கரத்தில் நீராடிய தகுதி நீக்க எம்.எல்.ஏ., க்கள்

Added : அக் 24, 2018 06:22 |



திருநெல்வேலி: தகுதி நீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு முன்னாள் எம்.எல்.ஏ., க்கள் எட்டு பேர் மற்றும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., பிரபு ஆகியோர் திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில் தங்கியுள்ளனர்.அ.தி.மு.க.,வில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ., க்கள் 18 பேரை பதவி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். 'நீக்கம் செல்லாது' என உத்தரவிடக்கோரி அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கில் இரு நீதிபதிகள் மறுபட்ட தீர்ப்பு வழங்கியதால், மூன்றாவது நீதிபதி நியமிக்கப்பட்டார்.

 தீர்ப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில், தகுதி நீக்கப்பட்டவர்கள் குற்றாலத்தில் தங்க வைக்கப்படுவதாக நேற்று முன்தினம் தகவல் வெளியானது. நான்கு பேர் அன்று இரவே குற்றாலம் வந்தனர். அ.தி.மு.க., முன்னாள் அமைச்சரும், அ.ம.மு.க., அமைப்பு செயலருமான இசக்கி சுப்பையாவுக்கு சொந்தமான, பழைய குற்றாலத்தில் உள்ள 'இசக்கி ரிசார்ட்ஸ்'ல் தங்கினர்.மகா புஷ்கரத்தில் நீராடல்தாமிரபரணியில் மகாபுஷ்கர விழா நேற்றுடன் நிறைவடைந்தது. ஆண்டிபட்டி முன்னாள் எம்.எல்.ஏ., தங்க தமிழ்ச்செல்வன் உட்பட ஏழு பேர், நேற்று காலையில் பாபநாசம் கோயில் அருகே நீராடினர்.10 பேர் வரவில்லைதகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களில் ஆண்டிப்பட்டி தங்க தமிழ்ச்செல்வன், பாப்பிரெட்டிபட்டி பழனியப்பன், பெரியகுளம் கதிர்காமு, மானாமதுரை மாரியப்பன் கென்னடி, ஓட்டப்பிடாரம் சுந்தர்ராஜ், தஞ்சாவூர் ரெங்கசாமி, ஆம்பூர் பாலசுப்பிரமணியன், சாத்துார் சுப்பிரமணியன் ஆகிய எட்டு பேரும், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., பிரபுவும் குற்றாலத்தில் தங்கியுள்ளனர். 

விருத்தாச்சலம் எம்.எல்.ஏ., கலைச்செல்வன் வருவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் நேற்று அவர் வரவில்லை.'மாபியா' அல்ல... மாமியார்!புனித நீராடியபின் தங்க தமிழ்ச்செல்வன் கூறியதாவது:எங்களுடன் 20 பேர் உள்ளனர். தற்போது 13 பேர் வந்துள்ளோம். மற்றவர்கள் விரைவில் வருவர். அக்.,24 வரை குற்றாலத்தில் தங்கியிருப்போம். நாங்கள் கடத்தப்படவோ, மைசூரு, பெங்களூரு என வெளி மாநிலங்களிலோ தங்கவில்லை. புஷ்கர விழாவிற்காக பாபநாசம் வந்தோம். குற்றாலத்தில் ஓய்வ எடுக்கிறோம். அமைச்சர் ஜெயக்குமாருக்கு குழந்தை பிறந்ததாக கூறப்படும் ஆடியோவை வெளியிட்டது 'மாபியா' கும்பல் அல்ல. ஜெயக்குமாரின் மாமியார்தான். விரைவில் அதில் உண்மைகள் வெளிவரும், என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 28.12.2024