Thursday, June 4, 2020

ஆயுள் சான்று வழங்க ஓய்வூதியர்களுக்கு சலுகை


ஆயுள் சான்று வழங்க ஓய்வூதியர்களுக்கு சலுகை

Added : ஜூன் 04, 2020 00:18

சென்னை; 'ஓய்வூதியதாரர்கள், தாங்கள் ஓய்வூதியம் பெறும் வங்கி கிளைகளில், ஆயுள் சான்றை, வரும் செப்டம்பர் மாதம் வரை வழங்கலாம்' என, தமிழக மின் வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழக மின் வாரியத்தில் பணிபுரிந்து, ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் ஓய்வு பெற்றுள்ளனர். ஓய்வுபெற்ற ஊழியர்கள் மற்றும் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பத்தினர், மாதம்தோறும் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். அவர்கள், உயிருடன் இருப்பதற்கான, ஆயுள் சான்றை, ஆண்டுதோறும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில், வங்கி கிளைகளுக்கு, நேரடியாக சென்று வழங்க வேண்டும்.

ஜூன், 30ம் தேதிக்குள் வழங்காதவர்களின் விபரங்கள், சம்பந்தப்பட்ட வங்கி கிளைகளில் இருந்து, மின் வாரியத்திற்கு அனுப்பப்படும். அவர்களுக்கு ஓய்வூதியம் நிறுத்தப்படும். பின், ஆயுள் சான்று வழங்கியதும், மீண்டும் ஓய்வூதியம் வழங்கப்படும்.மார்ச் இறுதியில் இருந்து, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், ஓய்வூதியதாரர்களால், தங்களின் ஆயுள் சான்றை, ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதம் வரை, வங்கி கிளைகளில் வழங்கலாம் என, மின் வாரியம் தெரிவித்துள்ளது. அதன்படி, வழங்காதவர்களுக்கு, நவம்பர் முதல் ஓய்வூதியம் நிறுத்தப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024