Thursday, June 4, 2020

பொய் செய்தியை நம்பாதீர்கள்:ஆவின் நிர்வாகம் வேண்டுகோள்


பொய் செய்தியை நம்பாதீர்கள்:ஆவின் நிர்வாகம் வேண்டுகோள்

Added : ஜூன் 04, 2020 02:09

சென்னை; தொழில் போட்டியாளர்கள் மற்றும் சமூக விரோதிகள், ஆவின் குறித்து பரப்புகிற பொய் செய்தியை, பொது மக்கள் நம்ப வேண்டாம்' என, ஆவின் நிர்வாகம், வேண்டுகோள் விடுத்து உள்ளது.

ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:கொரோனா நோய் தொற்றை எதிர்த்து போராடி, மக்களுக்கு தரமான பாலை, ஆவின் நிர்வாகம் வழங்கி வருகிறது. இந்நிலையில், சென்னை, மாதவரம் பால் பண்ணையில், 250 தொழிலாளர்களுக்கு, கொரோனா தொற்று என்ற, பொய்யான செய்தி பரவி வருகிறது. இது, மிகவும் வேதனை அளிக்கிறது.மாதவரம் பால் பண்ணையில் பணிபுரியும், 300 தொழிலாளர்களில், ௧௦ பேருக்கு நோய் தொற்று இருந்தது கண்டறியப்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பலர் குணமடைந்து, பணிக்கு திரும்பி உள்ளனர்; ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.அவர் இறப்பு, மிகப்பெரிய சோகத்தை கொடுத்தாலும், மக்களுக்காக எங்கள் கடமையை செய்து கொண்டிருக்கிறோம்.

அரசு வழிகாட்டுதலை கடைப்பிடித்து, தரமான பாலை, குறிப்பிட்ட நேரத்தில் அளிக்க, முழு மூச்சாக வேலை செய்து வருகிறோம்.எனவே, தொழில் போட்டியாளர்கள் மற்றும் சமூக விரோதிகள் பரப்புகிற பொய் செய்தியை, பொது மக்கள் நம்ப வேண்டாம். தொடர்ந்து ஆவினுக்கு, ஆதரவு அளிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024