Thursday, June 4, 2020

மூன்று மாதம் வாடகை வசூல் கூடாது அரசு உத்தரவு பிறப்பிக்க கோரி வழக்கு


மூன்று மாதம் வாடகை வசூல் கூடாது அரசு உத்தரவு பிறப்பிக்க கோரி வழக்கு

Added : ஜூன் 04, 2020 00:32

சென்னை 'மூன்று மாதங்களுக்கு வாடகை வசூலிக்கக் கூடாது' என, அரசு உத்தரவு பிறப்பிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த, வழக்கறிஞர், சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் தாக்கல் செய்த மனு:ஊரடங்கு உத்தர வால், தனியார் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன. இங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கும், வேலை இல்லை. அவர்களுக்கு, ஊரடங்கு காலத்தில் சம்பளம் வழங்கப்படவில்லை. அதனால், மாத வாடகை செலுத்த முடியாத நிலையில் உள்ளனர்.வாடகைக்கு இருப்பவர்களிடம், மாத வாடகை வசூலிக்க வேண்டாம் என தெரிவித்தும், வீட்டு உரிமை யாளர்கள் வற்புறுத்துகின்றனர்.

டில்லியில், வாடகைதாரர்களுக்கான வாடகை தொகையை, அம்மாநில அரசே செலுத்துவதாக கூறியது. தமிழகத்தில் அப்படி எந்த சலுகையும் இல்லை.ஒரு மாத வாடகையை வசூலிக்க வேண்டாம் என, மார்ச், 29, 30ல், மத்திய, மாநில அரசுகள் உத்தரவு பிறப்பித்தன. அதன்பின், ஊரடங்கு பலமுறை நீட்டிக்கப்பட்டு விட்டது. ஒரு மாதம் என்பது போதுமானது அல்ல. மூன்று மாதங்கள் வரை நீட்டிக்கப்பட வேண்டும்.அரசு பிறப்பித்த உத்தரவுகள் அமல்படுத்தப்படவில்லை. வாடகை வசூலிப்பு குறித்து புகார்கள் அளித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை.

மூன்று மாதங்களுக்கு வாடகை வசூலிக்கக் கூடாது என்று உத்தரவிடக்கோரி, அரசுக்கு மனு அனுப்பினேன்; எந்த நடவடிக்கையும் இல்லை.எனவே, ஊரடங்கு உத்தரவு கருதி, மூன்று மாதங்களுக்கு வாடகை வசூலிக்கக் கூடாது என, அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

ICC nets 20 medical students for exam malpractice

LAST MONTH STORY ICC nets 20 medical students for exam malpractice The Hans India Update: 2026-04-29 07:58 IST Vijayawada: The high-tech sur...