Thursday, June 25, 2020

சேலத்துக்கும் ஊரடங்கு வருமா?


சேலத்துக்கும் ஊரடங்கு வருமா?

Added : ஜூன் 25, 2020 00:02

சேலம் மாவட்டத்தில், இரண்டு மாதங்களாக, கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்தது. தற்போது, வெளி மாவட்டங்கள், மாநிலங்களிலிருந்து ஏராளமானோர் வருகின்றனர்.இவர்கள், சோதனைச்சாவடி அமைக்கப்பட்ட சாலைகளில் வராமல், கிராம சாலைகள், குறுக்கு சாலைகளில் புகுந்து, சேலத்துக்குள் வந்துள்ளனர்.

இவர்களில் பலருக்கு அறிகுறி இல்லாத நிலையிலும், தொற்று பாதிப்பு இருந்துள்ளது.அதேநேரம், ஊரடங்கு தளர்வால் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு, மக்கள் கூட்டமாக சென்று வருகின்றனர். பெரும்பாலான இடங்களில், சமூக இடைவெளி, முக கவசம் அணிவதை யாரும் பின்பற்றவில்லை.

இதனால், யார் தொடர்பிலிருந்து தொற்று உருவானது என கண்டறிய முடியாத நிலையில், பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 'இது, சமூக பரவலாக மாறாமல் தடுக்க, சேலம் மாவட்டத்திலும், முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும்' என, பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024