Thursday, June 25, 2020

'இ- - பாஸ்' புரோக்கர்களால் வாடகை டிரைவர்கள் அவதி


'இ- - பாஸ்' புரோக்கர்களால் வாடகை டிரைவர்கள் அவதி

Added : ஜூன் 24, 2020 23:24

சென்னை; புரோக்கர்கள் பெற்றுத் தரும், 'இ- - பாஸ்'களால், வாடகை வாகனஓட்டுனர்கள் அவதிஅடைந்துள்ளனர்.தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள், எட்டு போக்குவரத்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

, ஒரு போக்கு வரத்து மண்டலத்தில் இருந்து, பிற போக்குவரத்து மண்டலங்கள் மற்றும் பிற மாவட்டங்களுக்கும் செல்ல, இ- - பாஸ் கட்டாய மாக்கப்பட்டு உள்ளது. அவசியமில்லாத பயணத்தை கட்டுப்படுத்தி, கொரோனா பரவலை தடுப்பதற்காக, இந்த நடைமுறை செயல்படுத்தப்படுகிறது. இதில், கெடுபிடிகள் அதிகம் உள்ளதால், எளிதாக இ- - பாஸ் பெற முடிவதில்லை. இதை சாதகமாக பயன்படுத்தி, சில புரோக்கர்கள் மற்றும் டிராவல் ஏஜென்சியை சேர்ந்தோர், போலி இ- - பாஸ்களை தயாரித்து, பல ஆயிரம் ரூபாய் பணம் கறக்கின்றனர். இவர்களுக்கு உடந்தையாக, போலீஸ் அதிகாரிகள், தலைமை செயலக ஊழியர்கள், மாநகராட்சி ஊழியர்கள் உள்ளதாக கூறப்படுகிறது.இவ்வாறு பெறப்படும் இ- - பாஸ்களை, உண்மையென நம்பி, வாடகை வாகனங்களில் பயணியரை, ஓட்டுனர்கள் அழைத்துச் செல்கின்றனர்.

இவர்களில் பலர், போதிய கல்வியறிவு இல்லாதவர்கள் என்பதால், உண்மையான இ- - பாஸ்களை எப்படி கண்டறிவது என்பது தெரியவில்லை.பயணியரை அழைத்துச் செல்லும் போதோ அல்லது பயணியரை இறக்கி விட்டு திரும்பும் போதோ, வாகன சோதனையில்சிக்குகின்றனர். அப்போது, உரிய பதில் கூற தெரியாமல் விழிக்கின்றனர். அவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படுவதோடு, பேரிடர் சட்டத்தை மீறியதாக, வழக்கு பதியப்பட்டு, அபராதமும் வசூலிக்கப்படுகிறது.

அத்துடன், ஓட்டுனர்களை, 15 நாட்கள் தனிமைப்படுத்தி விடுகின்றனர். போலி இ- - பாஸ்களை நம்பி, சவாரி ஏற்றும் ஓட்டு னர்கள் சிக்கலில் தவிக்க, அதற்கு காரணமான பயணியர் மீதோ, புரோக்கர்கள் மீதோ, அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்ற, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024