Thursday, June 25, 2020

கல்லூரி பல்கலைகளில் இறுதி பருவ தேர்வு ரத்தா?


கல்லூரி பல்கலைகளில் இறுதி பருவ தேர்வு ரத்தா?

Updated : ஜூன் 25, 2020 04:31 | Added : ஜூன் 25, 2020 04:29 |

சென்னை : கல்லுாரி மற்றும் பல்கலைகளின் இறுதி பருவ தேர்வுகளை ரத்து செய்ய பல்கலை மானிய குழுவான யு.ஜி.சி. திட்டமிட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி கல்லுாரிகள் மூன்று மாதங்களாக செயல்படவில்லை. பள்ளிகளில் ஆண்டு இறுதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் தள்ளி வைக்கப்பட்ட 10ம் வகுப்பு பொதுத் தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருவாரூர் மத்திய பல்கலையில் இறுதி பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. முந்தைய பருவத் தேர்வுகளின் மதிப்பெண் அடிப்படையில் இறுதி பருவத்துக்கான தேர்ச்சி கணக்கிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல சென்னை பல்கலை, அண்ணா பல்கலை, மதுரை காமராஜர் உள்ளிட்ட பல்வேறு பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளின் மாணவர்களுக்கு இறுதி பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்படும் வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

நாடு முழுவதும் பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில் இறுதி பருவத் தேர்வை ரத்து செய்வது தொடர்பாக புதிய விதிமுறைகளை யு.ஜி.சி. வகுத்து வருகிறது. மத்திய அரசின் அனுமதி கிடைத்ததும் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என யு.ஜி.சி. வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024