Thursday, November 18, 2021

இந்தியா செல்லும் பெண் சுற்றுலா பயணியருக்கு அமெரிக்கா எச்சரிக்கை

இந்தியா செல்லும் பெண் சுற்றுலா பயணியருக்கு அமெரிக்கா எச்சரிக்கை

Updated : நவ 18, 2021 06:39 | Added : நவ 18, 2021 06:37 |

புதுடில்லி : 'பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதால், பெண் சுற்றுலா பயணியர் இந்தியாவுக்கு தனியாக பயணம் மேற்கொள்ள வேண்டாம்' என, தங்கள் நாட்டு சுற்றுலா பயணியருக்கு டில்லியில் உள்ள அமெரிக்க துாதரகம் அறிவுறுத்தி உள்ளது.

டில்லியில் உள்ள அமெரிக்க துாதரகம் தங்கள் நாட்டு சுற்றுலா பயணியருக்கான பயண ஆலோசனை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன் விபரம்: இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சுற்றுலாதலங்கள் உட்பட பல்வேறு இடங்களில் கொடூரமான வன்முறைகள், பாலியல் பலாத்காரங்கள் அதிகரித்துள்ளன. எனவே அமெரிக்க சுற்றுலா பயணியர், குறிப்பாக பெண்கள் தனியாக இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024