Friday, November 5, 2021

அவசரச் சட்டம் : தனி மாநகராட்சியாக உதயமானது தாம்பரம்!!

அவசரச் சட்டம் : தனி மாநகராட்சியாக உதயமானது தாம்பரம்!!

தாம்பரத்தை மாநகராட்சியாக தரம் உயர்த்துவதற்கான அவசர சட்டத்திற்கு ஆளுநர் அனுமதி வழங்கியதை தொடர்ந்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது .

சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாக மானிய கோரிக்கை விவாதத்தின்போது அமைச்சர் கே . என் . நேரு , தாம்பரம் , பல்லாவரம் , செம்பாக்கம் , பம்மல் , அனகாபுத்தூர் ஆகிய நகராட்சிகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பேரூராட்சிகள் , ஊராட்சிகளை ஒன்றிணைத்து மாநகராட்சி அமைக்கப்படும் என்று அறிவித்தார் .

அந்த அறிவிப்பின் அடிப்படையில் , புதிய மாநகராட்சி குறித்த அரசாணை தமிழக அரசால் ஏற்கனவே வெளியிடப்பட்டது . அதன்படி , புதிய மாநகராட்சியில் தாம்பரத்துடன் பல்லாவரம் , பம்மல் , செம்பாக்கம் , அனகாபுத்தூர் ஆகிய நகராட்சிகள் மற்றும் சிட்லபாக்கம் , மாடம்பாக்கம் , பெருங்களத்தூர் , பீர்க்கன்காரணை , திருநீர்மலை ஆகிய பேரூராட்சிகளை இணைக்கவும் , கூடுதலாக 15 கிராம ஊராட்சிகளையும் இணைத்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது .

தாம்பரம் நகராட்சியை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் அடிப்படை வசதிகளான குடிநீர் , பாதாள சாக்கடை போன்றவற்றை விரிவுபடுத்தப்படும் என்றும் , பெருநகர சென்னை மாநகராட்சியுடன் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் இணைந்துள்ளதால் , வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த நிலையில் தற்போது தமிழகத்தின் 20 ஆவது மாநகராட்சியாக தாம்பரம் தரம் உயர்த்தப்பட்டதற்கான அறிவிப்பை அரசிதழில் அரசு வெளியிட்டுள்ளது . 10 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் , தாம்பரம் உள்ளிட்ட 5 நகராட்சிகள் மற்றும் ஐந்து பேரூராட்சிகளை இணைத்து தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட்டுள்ளது .

Dailyhunt

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Newstm

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024