Thursday, November 10, 2022

அடுத்த கல்வியாண்டுடன் கடைசி: மாற்றாக ‘நெக்ஸ்ட்’ தோ்வு அறிமுகம்

 அடுத்த கல்வியாண்டுடன் கடைசி: மாற்றாக ‘நெக்ஸ்ட்’ தோ்வு அறிமுகம்  

DINAMANI  10.11.2022

எம்பிபிஎஸ் (இளநிலை மருத்துத்வப் படிப்பு) இறுதி ஆண்டு மாணவா்கவா் ளுக்கு 2023-ஆம் ஆண்டு டிசம்பா் முதல் ‘நேஷனல் எக்ஸிட் டெஸ்ட் (நெக்ஸ்ட்)’ என்ற பெயரிலான தேசிய அளவிலான இறுதி பொது தகுதித் தோ்வு நடத்த முடிவு செய்யப்பட்டிருப்பதால், முதுநிலை மருத்துத்வப் படிப்பு சோ்க்க்கைக்கு நடத்தப்படும் ‘நீட்-ட் பிஜி’ நுழைவுத் தோ்வுதோ் அடுத்த கல்வியாண்டுக்குப் பிறகு நடத்தப்படாது என்பது தெரியவந்துள்ளது.

தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற தேசிய மருத்துவ ஆணைய (என்எம்சி) உயா்நிலைக் கூட்டட் த்தில் ‘நெக்ஸ்ட்’  தோ்வை 2023 டிசம்பரில் நடத்துத் வதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது , மத்திய சுகாதாரத் துறை அமைச்சச் கத்திடமும் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா். ‘திட்டட்மிட்டபடி 2023 டிசம்பரில் ‘நெக்ஸ்ட்’ தோ்வு நடத்தப்பட்டால், 2019-20 எம்பிபிஎஸ் மாணவா்கள் அந்தத் தோ்வை எழுத நேரிடும்.

இந்த தோ்வு முடிவின் அடிப்படையில் 2024-25 முதுநிலை மருத்துத் வப் படிப்பை மாணவா் சோ்க்க்கை நடத்தப்படும்’ என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.னா் சட்டப்படி, ‘நெக்ஸ்ட்’தோ்வுவழிகாட்டுதல்கள் அறிவிக்கை செய்யப்பட்ட 3 ஆண்டுகளுக்குள் இறுதியாண்டு எம்பிபிஎஸ் மாணவா்க்கு அந்தத் தோ்வை நடத்தத் தொடங்க வேண்டும். அந்த வகையில், இந்த சட்டம் கடந்த 2020 செப்டம்பரில் நடைமுறைக்கு வந்த நிலையில், அந்தத் தோ்வை 2023 டிசம்பரில் நடத்த என்எம்சி முடிவு செய்துள்ளது. என்எம்சி விதிப்படி, இந்தியாவில் நவீன மருத்துத்வராகப் பணியாற்றுவதற்கான உரிமம் பெறவும், முதுநிலை மருத்துத் வப் படிப்பு சோ்க்க்கை க்கான தகுதி பெறவும், வெளிநாட்டில் மருத்துத்வப் படிப்பை முடித்து இந்தியாவில் பணியாற்ற விரும்பும் மாணவா்கவா்ள் தகுதி பெறுவதற்குமான பொதுவான தகுதித் தோ்வாக ‘நெக்ஸ்ட்’ தோ்வு கருதப்பட உள்ளது.

தோ்வுதோ் வாரியம் மாற்றம்? 

இதுவரை ‘நீட்-ட் பிஜி’ மற்றும் ‘நீட்-சிறப்பு மருத்துத்வபடிப்பு’ நுழைவுத் தோ்வுகளை தேசிய மருத்துத்வ அறிவியல் தோ்வுகள் வாரியம் (எம்பிஇஎம்எஸ்) நடத்தி வந்த நிலையில், அவற்றுக்கு மாற்றாக புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘நெக்ஸ்ட்’ ட் தோ்வை நடத்தும் பொறுப்பை எம்பிஇஎம்எஸ்-க்கு மாற்றாக அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்திடம் கொடுக்க முடிவு செய்யப்பட்டுட்ள்ளதாகவும். அதற்கான இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்தனா்

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024