Friday, January 24, 2025
வாழ்வியலும் வழிகாட்டுதலும்
வாழ்வியலும் வழிகாட்டுதலும்
=========================
யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாது நாவினால் சுட்ட வடு.
வார்த்தைகளை சிதறவிட்டால், இறைத்து விட்டால் திரும்ப அள்ள முடியாது.
இந்த வார்த்தையை அடிக்கடி உச்சரிப்பவரா நீங்கள்?... இது உங்களுக்கான பதிவு...
தவிர்க்க வேண்டிய வார்த்தைகள்...!!
பொதுவாகவே நாம் பேசும் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு
அப்படியிருக்கும் போது ஒருபோதும் தகாத வார்த்தைகளை நம் வாயிலிருந்து உச்சரிக்கவே கூடாது.
உங்களால் முடிந்த அளவிற்கு சுப சொற்களை பயன்படுத்தி பழகுங்கள்.
வழக்கத்தில் தான் எல்லாமே உள்ளது.
முதலில் இல்லை முடியாது என்று எப்போதும் கூறாதீர்கள்.
முடியாது, தெரியாது என்று கூறுவதை தவிர்த்து முயற்சி செய்கிறேன் என்று சொல்லுங்கள்.
இதுவே தன்னம்பிக்கை வளர உந்துகோளாக இருக்கும்.
வீடாக இருந்தாலும், தொழில் செய்யும் இடமாக இருந்தாலும், வேலை செய்யும் இடமாக இருந்தாலும் அந்த இடத்தில் நாம் பயன்படுத்தக் கூடாத வார்த்தை 'இல்லை இது இல்லை, அது இல்லை, வீட்டில் மளிகை பொருட்கள் இல்லை, காய்கறிகள் இல்லை, நகைகள் இல்லை, புது துணிமணிகள் இல்லை என்று இல்லை இல்லை என்ற வார்த்தையை சொல்லிக்கொண்டே இருந்தால், இருப்பதும் இல்லாமல் போய்விடும் என்று சொல்லப்பட்டுள்ளது.
எவரேனும் ஏதாவது ஒரு பொருளை உங்களிடம் கேட்டால் இல்லை என்று உடனே கூறி விடாதீர்கள். இல்லை என்ற சொல்லை பயன்படுத்தாமல் தீர்ந்துவிட்டது என்று கூறலாம்.
உதாரணமாக, வியாபாரம் செய்யும் இடங்களில் நாம் கேட்கக்கூடிய குறிப்பிட்ட பொருள், அந்த கடையில் இல்லையெனில் அந்தக் கடைக்காரர் அந்த பொருள் குடோனில் இருக்கின்றது அல்லது அந்த பொருளுக்கான ஆர்டரை செய்து இருக்கின்றோம் இரண்டு நாட்களில் வந்துவிடும். வந்தவுடன் இந்த பொருளை உங்களுக்கு தருகின்றேன் என்று தான் சொல்வார்.
எக்காரணத்தைக் கொண்டும் இல்லை என்ற வார்த்தையை பயன்படுத்தமாட்டார்.
இனி உங்கள் வாயிலும் இல்லை என்ற சொல் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். வாழ்க்கையில் உங்களுக்கு தேவையான எல்லாமும் இருக்க வேண்டும் என்றால், இல்லை என்ற வார்த்தை உங்களிடம் இல்லாமல் இருக்க வேண்டும்.
அடுத்தபடியாக நமக்கு கோபம் வரும் போது அடிக்கடி நாம் பயன்படுத்தக்கூடிய வார்த்தை, சனியனே.. மூதேவி..
இந்த இரண்டு வார்த்தைகளையும் எவர் உச்சரித்துக் கொண்டே இருக்கிறார்களோ... அவர்களிடத்தில் கஷ்டமும் ஒட்டிக்கொள்ளும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் இல்லை.
'சனியன்" என்ற வார்த்தை சனி பகவானின் பிடியில் அகப்படுவதற்கு சமமான சொல் ஆகும். ஒருமுறை ஒருவர் இந்த வார்த்தையை கேட்டு விட்டால் நமக்கும் தொற்றி விடும். கவனித்து பாருங்கள் தெரியும்.
சில வீடுகளில் குழந்தைகள் சரியாக படிக்கவில்லை என்றால் அந்த வீட்டில் இருக்கும் பெற்றோர்கள் அந்த குழந்தைகளை பார்த்து 'நீ எதற்கும் பயன்பட மாட்டாய். வாழ்க்கையில் நீ கஷ்டப்பட தான் போகின்றாய்" என்ற வார்த்தைகளை சொல்லி திட்டுவார்கள். இந்த வார்த்தைகளை வைத்து எக்காரணத்தைக் கொண்டும் குழந்தைகளை திட்டவே கூடாது.
நீ நன்றாக படித்தால் உன் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்று தான் அந்த குழந்தைகளுக்கு புத்திமதி சொல்ல வேண்டும்.
எதிர்பாராத விதமாக உங்களுக்கு ஏதாவது நடந்து விட்டால் அம்மா என்று தான் சொல்ல வேண்டுமே தவிர, அய்யோ என்ற வார்த்தையை உச்சரிக்காதீர்கள்.
அதே போல பெண்கள் அடிக்கடி தற்பெருமையாக கூறும் வார்த்தைகள்.....
வீட்டில் அடிக்கடி 'சமையலறையை சுத்தமாக துடைத்து விட்டேன். வீட்டை சுத்தமாக துடைத்து விட்டேன். பூஜை அறையை சுத்தமாக துடைத்து விட்டேன் என்று சொல்வது
சுத்தமாக துடைத்து விட்டேன் என்ற வார்த்தை வீட்டை துடைத்து எடுத்து விடும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
உங்களை பார்த்து தான் குழந்தைகள் பேச கற்று கொள்வார்கள். பெரியவர்கள் நல்ல வார்த்தைகளை பேசினால் தான் அந்த குடும்பம் சிறந்து விளங்கும்.
சொல்லில் இனிமை சேர்த்து வாழ்வில் வளம் பெற்று மன நிறைவுடன் இருங்கள்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Subscribe to:
Post Comments (Atom)
கார்த்திகையில் அணைந்த தீபம்!
கார்த்திகையில் அணைந்த தீபம்! பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...
-
NBEMS launches official WhatsApp channel for real-time updates The platform will offer timely updates on examinations, accreditation, and tr...
-
முடியும் என்றால் முடியும்! சென்னை மாநகரை தராசின் ஒரு தட்டிலும் எஞ்சிய மற்ற தமிழ்நாட்டுப் பகுதிகளை இன்னொரு தட்டிலும் வைத்தால் சமமாக இருக்கும்...
No comments:
Post a Comment