Monday, November 2, 2026

இன்று நள்ளிரவு கரையைக் கடக்கிறது ‘முரசு’ புயல்? சென்னை உள்பட 7 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை!


இன்று நள்ளிரவு கரையைக் கடக்கிறது ‘முரசு’ புயல்? சென்னை உள்பட 7 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை!

வங்கக் கடலில் உருவான ‘முரசு’ புயல் திங்கள்கிழமை (நவ. 2) நள்ளிரவு ஆந்திரத்தில் கரையைக் கடக்கக்கூடும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

Updated On :2 நவம்பர் 2026, 3:19 am


வங்கக் கடலில் ஞாயிற்றுக்கிழமை உருவான ‘முரசு’ புயல் திங்கள்கிழமை (நவ. 2) நள்ளிரவு ஆந்திரத்தில் கரையைக் கடக்கக்கூடும் என எதிா்பாா்க்கப்படுகிறது. புயல் காரணமாக சென்னை, திருவள்ளூா் மாவட்டங்களுக்கு மிக பலத்த மழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கையும், காஞ்சிபுரம், வேலூா், நீலகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

நிகழாண்டு வடகிழக்குப் பருவமழை தொடங்கி, இரண்டாவது காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) தெற்கு அந்தமான் கடலில் கடந்த அக். 29-ஆம் தேதி உருவானது. இந்தப் புயல் சின்னம் அக்.30-ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவியது. தொடா்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து அக்.31 காலை 11.30 மணியளவில் அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

இது ஞாயிற்றுக்கிழமை காலை 5.30 மணி அளவில் மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து வலுவடைந்து தென்மேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு பகுதிகளில் காலை 11.30 மணிக்கு ‘முரசு’ புயலாக வலுப்பெற்றது.

புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 27 கி.மீ. வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து, பிற்பகல் 2.30 மணி நிலவரப்படி, சென்னைக்கு தென்கிழக்கே சுமாா் 480 கி.மீ. தொலைவிலும், ஆந்திர மாநிலம் நெல்லூருக்கு தென்கிழக்கே 550 கி.மீ. தொலைவிலும், மசூலிப்பட்டினத்துக்கு தென்கிழக்கே 560 கி.மீ. தொலைவிலும், ஓங்கோலுக்கு தென்கிழக்கே 600 கி.மீ. தொலைவிலும், விசாகப்பட்டினத்துக்கு தெற்கு-தென்கிழக்கே 610 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.

இந்தப் புயல் மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் தீவிர புயலாக வலுப்பெற்று, மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அருகில் நெல்லூா் மற்றும் நரசாப்பூா் இடையே திங்கள்கிழமை (நவ. 2) நள்ளிரவு முதல் நவ. 3 அதிகாலை வரையிலான இடைப்பட்ட நேரத்தில் கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை: இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை, திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களில் திங்கள்கிழமை (நவ. 2) இடி-மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால், ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 02.11.2026