Saturday, June 24, 2017

நீட்' தேர்வு முடிவு வந்தாச்சு விண்ணப்பம் எப்போது?

பதிவு செய்த நாள்24ஜூன்
2017
00:08

சென்னை : 'நீட்' தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், எம்.பி.பி.எஸ்., படிப்புக்கான விண்ணப்ப வினியோகம் எப்போது துவங்கும் என, மாணவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வான, 'நீட்' முடிவுகள் நேற்று வெளியாகின. இதனால், விண்ணப்ப வினியோகம் எப்போது துவங்கும் என, மாணவர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இது தொடர்பாக, தலைமைச் செயலகத்தில், சட்ட நிபுணர்களுடன் சுகாதாரத்துறை அதிகாரிகள் நேற்று மாலை, ஆலோசனை நடத்தினர்.அதுபற்றி, சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: முதல்வர் டில்லி சென்றுள்ளார். 'நீட்' தேர்வில், தமிழகத்துக்கு விலக்கு கோரிய, அவசர சட்டத்துக்கு, ஜனாதிபதி ஒப்புதல் அளிக்க, மத்திய அரசிடம் அவர் வலியுறுத்துவார். வரும், 26ம் தேதி, எம்.பி.பி.எஸ்., படிப்புகளுக்கான அறிவிக்கை வெளியிட்டு, 27ம் தேதி முதல், விண்ணப்பம் வினியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.அதேபோல், மத்திய அரசு ஒப்புதல் அளிக்காத பட்சத்தில், 'நீட்' தேர்வு அடிப்படையில், தமிழக பாடத்திட்ட மாணவர்களுக்கு, 85 சதவீதமும், மத்திய பாடத் திட்ட மாணவர்களுக்கு, 15 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க ஆலோசிக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.இவ்வாறு அவர் கூறினார்.
'அட்மிஷன்' எப்படி: சி.பி.எஸ்.இ., விளக்கம்
பதிவு செய்த நாள்23ஜூன்
2017
23:59


'நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, எப்படி மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும்' என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.

சி.பி.எஸ்.இ.,யின், 'நீட்' தேர்வு பொறுப்பு இணை செயலர், சன்யம் பரத்வாஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

* 'நீட்' தேர்ச்சிக்கான தகுதி மதிப்பெண்கள், இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் இந்திய பல் மருத்துவ கவுன்சில் விதிகளின்படி, நிர்ணயிக்கப்பட்டு உள்ளன. தகுதி பெற்றவர்கள், சம்பந்தப்பட்ட கவுன்சிலிங் கமிட்டியை தொடர்பு கொண்டு, மாணவர் சேர்க்கை நடவடிக்கையை துவங்க வேண்டும்
* 'நீட்' தேர்வில், முன்னேறிய வகுப்பினருக்கு, 131; முன்னேறிய மாற்று திறனாளிகளுக்கு, 118 மற்றும் மற்றவர்களுக்கு, 107 மதிப்பெண், தேர்ச்சியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள், digilocker.gov.in என்ற இணையதளத்தில், தங்களின் தரவரிசை கடிதங்களை பதிவிறக்கம் செய்யலாம்
* அரசு மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, 15 சதவீத மத்திய அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு, மத்திய அரசின் சுகாதார பணிகள் துறை, பொது இயக்குனரகம் சார்பில், கவுன்சிலிங் நடத்தப்படும். இதுகுறித்த, 'கட் - ஆப்' விபரங்களை, www.mcc.nic.in என்ற, இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்
* அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில், மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கு, 'நீட்' தேர்வின் அகில இந்திய தரவரிசை பட்டியலின் அடிப்படையிலும், மாநில விதிகளின் படியும், அந்தந்த மாநிலங்களால், கவுன்சிலிங் நடத்தப்படும்
* தனியார் மருத்துவ கல்லுாரிகளுக்கு, மாநில கவுன்சிலிங் கமிட்டி சார்பில், மாணவர் சேர்க்கை நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பிளஸ் 2 மதிப்பெண் உண்டா
தமிழகத்தில், பல மாணவர்கள், 'நீட்' தேர்வில், 450 மதிப்பெண் வரை பெற்றுள்ளனர். தமிழகத்தில், மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கு, 'நீட்' தேர்வு மதிப்பெண்படி மட்டுமே, மாணவர் சேர்க்கை நடக்குமா அல்லது பிளஸ் 2 மதிப்பெண்படி நடக்குமா என, குழப்பம் நீடிக்கிறது. பிளஸ் 2வில், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களில், 'நீட்' தேர்ச்சி பெற்றவர்களுக்கு, மாநில அளவில் தரவரிசை பட்டியல் தயாரித்து, சேர்க்கை நடத்தலாம் என, கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின், பொதுச்செயலர், பேட்ரிக் ரைமண்ட்
கூறுகையில், ''தமிழக பாடத்திட்ட மாணவர்களுக்கு, மருத்துவ சேர்க்கையில் முன்னுரிமை அளிக்க வேண்டும். மேலும், 'நீட்' தேர்வில், தேர்ச்சியை மட்டுமே கணக்கிட்டு, பிளஸ் 2 மதிப்பெண்ணில் அதிகம் பெற்றவருக்கு சேர்க்கை வழங்க வேண்டும்,'' என்றார்.

கல்வியாளர்கள் கூறுகையில், 'தமிழக பிளஸ் 2 தேர்வை விட, நீட் தேர்வு சிந்திக்கும் திறன் வாழ்ந்ததாக உள்ளது. எனவே, அதில் அதிக மதிப்பெண் எடுப்போருக்கு முக்கியத்துவம் தர வேண்டும். எனவே, 'நீட்' தேர்வு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண்ணுக்கு சமவாய்ப்பு வழங்கி, இரண்டிலும் அதிகம் பெற்றவர்களுக்கான தரவரிசை பட்டியல் தயாரித்து, சேர்க்கை நடத்தலாம்' என்றனர்.

உள் ஒதுக்கீடு அவசியம் : நீட் தேர்வில் பங்கேற்ற, தமிழக மாணவர்களின் மதிப்பெண்கள் குறைவாகவே உள்ளது. 1,000க்கும் மேல் மாணவர்கள் படித்த டாப் பள்ளிகளில் கூட, நீட் தேர்வில், 300 மதிப்பெண்களை தாண்டியவர்களின் எண்ணிக்கை, 15ஐ கூட எட்டவில்லை.ஓராண்டு முழுவதும் நீட் தேர்வுக்காக பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே, ஓரளவுக்கு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தமிழக அரசு, மாணவர்களுக்கு பாதகம் ஏற்படாத வகையில், உள் ஒதுக்கீடு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், அடுத்த ஆண்டு அனைத்து
மாணவர்களும், சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்துக்கு சென்றுவிடுவர். நீட் தேர்வில், கடந்த ஆண்டு 118 ஆக இருந்த தேர்ச்சி, நடப்பாண்டில் 125 முதல் 150 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

ஜெயப்பிரகாஷ் காந்தி, கல்வி ஆலோசகர்

- நமது நிருபர் -


திருப்பதி சுவாமி தரிசனத்துக்கு ஆதார் கட்டாயம்

பதிவு செய்த நாள்24ஜூன்
2017
05:36




திருமலை: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஆதார் கட்டாயமாக்கப்பட உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி சீனிவாச ராஜூ தெரிவித்ததாவது: திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களின் விரைவு தரிசன முன்பதிவு, வாடகை அறை உள்ளிட்டவற்றிற்கு புகைப்பட அடையாள அட்டை எதேனும் ஒன்றை பெற்றுவந்துள்ளது.

இந்நிலையில் வங்கி கணக்கு, பான் கார்டுடன் ஆதார் இணைப்பு கட்டாயம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட பின், திருப்பதியின் அனைத்து சேவைகளுக்கும் ஆதார் கட்டாயம் ஆக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. பிரேக் தரிசனத்துக்கு வரும் பக்தர்களும் ஆதார் கட்டாயம் கொண்டுவர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நாளை போரூர் மேம்பாலம் திறப்பு விழா;  ஏழு ஆண்டுகள் இழுபறிக்கு பின் விடிவு

பதிவு செய்த நாள்24ஜூன்
2017
00:02



போரூர் மேம்பாலம், ஏழு ஆண்டுகள் இழுத்தடிப்பிற்கு பின், நாளை திறப்பு விழா காண இருக்கிறது.

மவுன்ட் - பூந்தமல்லி சாலையும், ஆற்காடு சாலையும் சந்திக்கும் இடமாக, போரூர் ரவுண்டானா உள்ளது. மேலும், மவுன்ட் - பூந்தமல்லி சாலை, பெங்களூரு நெடுஞ்சாலை, ஜி.எஸ்.டி., சாலையையும் இணைக்கும் முக்கிய சாலையாக இருப்பதால், இப்பகுதியில் போக்குவரத்து அதிகம் காணப்படும். அது மட்டுமல்லாமல், குன்றத்துார் மற்றும் அதைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள், ஆற்காடு சாலையை பயன்படுத்தி தான், சென்னை நகருக்குள் செல்கின்றன. இதனால், போரூர் சந்திப்பில், வாகன ஓட்டிகள் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கின்றனர்.

பணிகள் முடக்கம்இதனால், இந்த நான்கு சாலைகளும் சந்திக்கும் இடத்தில், மேம்பாலம் அமைக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, நெடுஞ்சாலை துறை சார்பில், 480 மீட்டர் நீளம்; 37.2 மீட்டர் அகலம், இருபுறமும் தலா, 7.5 மீட்டரில் சர்வீஸ் சாலையுடன், மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. போரூர் மேம்பாலம் கட்டுவதற்கு, தி.மு.க., ஆட்சியில், 15 கோடி ரூபாயில் திட்டம் வகுக்கப்பட்டது. இதற்கான பணிகள், 2010ல் துவங்கப்பட்டன. 2011ல், அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின், மேம்பாலப் பணிகள் முடங்கின.

மேம்பால பணியை, திருப்பூரைச் சேர்ந்த ஒரு தனியார் கட்டுமான நிறுவனம் ஒப்பந்தம் எடுத்தது. ஒப்பந்தப்படி, 2010, பிப்., 15ல் பணிகள் துவங்கி, 2011, ஆக., 14ல் முடிக்க வேண்டும்.நெடுஞ்சாலைத் துறை சார்பில், 2010 பிப்ரவரியில் பாலம் கட்டுமானப் பணி துவங்கப்பட்டது. பூந்தமல்லி சாலையில், ஏழு துாண்களும்; மவுன்ட் சாலையில், ஏழு துாண்களும் அமைக்க திட்டமிடப்பட்டது. இதைதொடர்ந்து, பூந்தமல்லி சாலையில், ஏழு துாண்கள் அமைக்கப்பட்டன.நில ஆர்ஜித பணிகளில் ஏற்பட்ட இடையூறால், பூந்தமல்லி சாலையில், மேலும், மூன்று துாண்கள் அமைக்க முடியாமல் பணிகள் முடங்கின.

மேலும், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து, தென் சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்ல, 1,600 மீ., நீளத்திற்கு, போரூர் நான்கு வழிச்சாலை சந்திப்பில் இருந்து, கிண்டி செல்லும் சாலையின் நடுவில், குடிநீர் வடிகால் வாரியத்தால் குழாய்கள் பதிக்கப்பட்டு உள்ளன. அதை மாற்றி அமைத்தால் தான், பணிகள் தொடரும் என்ற நிலை ஏற்பட்டது. இதற்காக, நெடுஞ்சாலை துறை சார்பில், குடிநீர் வாரியத்துக்கு, 5.5 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. ஆனால், குழாய் அகற்றும் முயற்சி தோல்வியில் முடிந்தது. இதனால், குடிநீர் வாரியம், 5.5 கோடி ரூபாயை, நெடுஞ்சாலை துறையிடம் திருப்பி கொடுத்தது. இதைதொடர்ந்து, 2011 முதல் இரண்டு ஆண்டுகள், பணிகள் முடங்கின.

போராட்டங்கள்மேம்பாலப் பணியை மீண்டும் துவங்க வலியுறுத்தி, தி.மு.க., - தே.மு.தி.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், அப்பகுதியைச் சேர்ந்த குடியிருப்பு சங்கங்கள், வணிகர் சங்கங்கள் சார்பிலும், போராட்டங்கள் நடந்தன.இதையடுத்து, 2014ல், 54 கோடி ரூபாய் மதிப்பில், மேம்பாலத்தின் வடிவம் மாற்றி அமைக்கப்பட்டது. 2015 செப்டம்பர் முதல், மீண்டும் பணிகள் துவக்கி நடைபெற்று வந்தன. 505 மீட்டர் நீளமும், 15 மீட்டர் அகலத்திற்கு மேம்பால பணிகள் முடிக்கப்பட்டு, ஏழு ஆண்டுகள் இழுபறிக்கு பின், தற்போது மக்கள் பயன்பாட்டிற்கு தயாராக காத்திருக்கிறது. நாளை மேம்பாலம் திறந்து வைக்கப்படுகிறது.

என்ன காரணம்?சமீபத்தில் பெய்த மழை காரணமாக, போரூர் சந்திப்பில் தண்ணீர் தேங்கியது. இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், எரிச்சல் அடைந்த இருசக்கர வாகன ஓட்டிகள், போரூர் மேம்பாலத்தில் பயணிக்க துவங்கினர்.இவர்களை தொடர்ந்து, கார், சரக்கு வாகனங்கள், மாநகர பேருந்து உள்ளிட்டவையும், மேம்பாலத்தில் பயணித்தன. இதனால் அதிர்ச்சி அடைத்த அதிகாரிகள், அவசர அவசரமாக வந்து,மேம்பாலத்தில் போக்குவரத்தை நிறுத்தினர்.இதற்கு மேலும், பொதுமக்கள் பொறுமை காக்க மாட்டார்கள் என்ற அச்சத்தில் தான், போரூர் மேம்பாலத்தை திறக்க, தமிழக அரசு முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

காலை மற்றும் மாலை நேரங்களில், போரூரில், நான்கு மணி நேரம் வரை, போக்குவரத்து நெரிசல் நீடித்தது. இதனால், அவ்வழியாக செல்லும், நோயாளிகளை குறிப்பிட்ட நேரத்தில் மருத்துவமனைகளில் கொண்டு செல்ல முடியாத நிலை நீடித்தது. இந்த மேம்பாலம், போரூர் மக்களுக்கு மட்டுமின்றி, பயன்படுத்தும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கிறது. அரசு தகுந்த நடவடிக்கை எடுத்திருந்தால், எட்டு ஆண்டுகளுக்கு முன் மேம்பாலம் பயன்பாட்டிற்கு வந்திருக்கும்.
-நடராஜன்போரூர் குடியிருப்போர் நலச்சங்கம் நிர்வாகி

போரூர் மேம்பால பணிகள் மீண்டும் துவங்க, இரண்டு முறை ஆர்ப்பாட்டம், அதிகாரிகளை சந்திப்பது என, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டேன். சட்டசபையில், 11 முறை போரூர் மேம்பாலம் குறித்து கேள்வி எழுப்பினேன். தற்போது, மேம்பாலம் பணிகள் முடிந்து திறக்கப்பட உள்ளது. இதுமட்டுமல்லாமல், நொளம்பூர் - பூந்தமல்லி நெடுஞ்சாலையை இணைக்க, எம்.ஜி.ஆர்., தோட்டம் அருகே மேம்பாலம் அமைப்பதாக, 2015ல், மறைந்த முதல்வர் ஜெ., அறிவித்திருந்தார். அவர் அறிவித்த திட்டத்தை, தற்போதைய அரசு நிறைவேற்ற வேண்டும்.-பீம்ராவ்

மதுரவாயல் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.,
நீட் தேர்வில் 6.11 லட்சம் மாணவர்கள் 'பாஸ்'
81 ஆயிரம் மருத்துவ இடங்களுக்கு கடும் போட்டி




நாடு முழுவதும், 778 கல்லுாரிகளில், 81 ஆயிரம் மருத்துவ படிப்பு இடங்களுக்கான, 'நீட்' நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட உள்ளன. தேர்வு எழுதியதில், 56 சதவீதம் பேரான, 6.11 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ள னர். 'டாப்பர்ஸ்' பட்டியலில், தமிழகத்தை தவிர, பிற தென் மாநில மாணவர்களே இடம் பிடித்துள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள, 470 மருத்துவ கல்லுாரி களில், 65 ஆயிரத்து, 170 எம்.பி.பி.எஸ்., மற்றும், 308 பல் மருத்துவ கல்லுாரிகளில், 25 ஆயிரத்து, 730 பி.டி.எஸ்., இடங்கள் என, 778 கல்லுாரி களில், 81 ஆயிரம் இடங்கள் உள்ளன. இவற்றுக் கான மாணவர்கள் சேர்க்கையை, தேசிய தகுதி நுழைவுத் தேர்வான, 'நீட்' அடிப்படையிலேயே நடத்த வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது

அதனால், 'நீட்' தேர்வு, மே, 7ல் நடந்தது. நாடு முழுவதும், 10 லட்சத்து, 90 ஆயிரத்து, 85 பேர் தேர்வு எழுதினர். தேர்வு முடிவை, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நேற்று வெளியிட்டது. தேர்வு எழுதியோரில், 56 சதவீதம் பேர், அதாவது, ஆறு லட்சத்து, 11 ஆயிரத்து, 539 பேர் தேர்ச்சி பெற்று, மருத்துவ படிப்பில் சேர தகுதி பெற்றுள்ளனர்.

இவர்களில், 3.45 லட்சம் பேர் மாணவியர்; ஐந்து திருநங்கையரும் இடம் பெற்றுள்ளனர். தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக, 11 மாணவர்களின் முடிவுகள் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளன.தேசிய அளவில், அதிக மதிப்பெண் பெற்ற முதல், 25 பேரின் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த, நவ்தீப் சிங் என்ற மாணவர், மொத்த மதிப்பெண்ணான, 720க்கு, 697 மதிப்பெண் பெற்று, தேசிய அளவில் முதலி டம் பெற்றுள்ளார். மத்திய பிரதேச மாணவர்கள் அர்சித் குப்தா, மணீஷ் முல்சந்தானி ஆகியோர்,



695 மதிப்பெண் பெற்று, இரண்டு, மூன்றாம் இடங்களை பிடித்துள்ளனர்.முதல், 25 இடங்களில், தென் மாநிலங்களில், தமிழகம் மற்றும் புதுச்சேரி தவிர, பிற மாநிலத்தினர் இடம் பிடித்துள்ளனர். அதிலும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் தெலுங்கானா மாநில மாணவர்களே, அதிக மதிப்பெண் பெற்றுள் ளனர்.

இந்த தேர்வில், முன்னேறிய வகுப்பினருக்கு, 131 மதிப்பெண்களும், இட ஒதுக்கீடு இல்லாத பிரிவினர் மற்றும், முன்னேறிய பிரிவில் உள்ள மாற்று திறனாளிகளுக்கு, 118 மதிப்பெண்களும், மற்ற மாணவர்களுக்கு, 107 மதிப்பெண்களும் தேர்ச்சி மதிப்பெண்ணாக கணக்கிடப்பட்டுள்ளது.

89 சதவீதம் முன்னேறிய வகுப்பினர்

'நீட்' தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களில், 89 சதவீதம் பேர், முன்னேறிய வகுப்பினர்; மற்ற பிரிவினர், 11 சதவீதம் மட்டுமே. குறைந்த தேர்ச்சி இருந்தாலும், மற்ற பிரிவினருக்கு, 69 சதவீத இடங்கள் உறுதியாக கிடைக்கும்.நீட் தேர்வு முடிவுகள், நேற்று வெளியா யின. தேர்வில், 10 லட்சத்து, 90 ஆயிரத்து, 85 பேர் பங்கேற்றதில், ஆறு லட்சத்து, 11 ஆயிரத்து, 539 பேர் மட்டுமே, தேர்ச்சி பெற்றுள்ளனர். இது, மொத்த மாணவர்களில், 56 சதவீதம்.

இந்த தேர்வில், முன்னேறிய வகுப்பினருக்கு, 131 மதிப்பெண்ணும், முன்னேறிய வகுப்பினரில், மாற்று திறனாளிகளுக்கு, 118ம் தேர்ச்சி மதிப்பெண் ணாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், முன்னேறிய மற்றும் இதர வகுப்பில் இடம்பெற்ற வர்களில், ஐந்து லட்சத்து, 43 ஆயிரத்து, 473 பேர், 131 மதிப்பெண் முதல், 697 மதிப்பெண் வரை பெற்றுள்ளனர். அவர்களில், மாற்று திறனாளிகள், 67 பேர், 118 முதல், 130 வரை மதிப்பெண் பெற்றுள்ளனர்.

இந்த இரு வகையினரையும் சேர்த்தால், மொத்த மாணவர்களில், 89 சதவீதம் ஆகும். முன்னேறிய வகுப்பினரில், பெரும்பாலான மாணவர்கள்,




சி.பி.எஸ்.இ., எனும் மத்திய பாடப்பிரிவு பள்ளிகளில் படித்துள்ளனர்.மீதமுள்ள மிக பின்தங்கிய வகுப்பினர், தலித்மற்றும் பழங்குடியினர் பிரிவு களில், 11 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதில், மாணவர் சேர்க்கையில், மாநில அளவிலான இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்றுவதால், முன்னேறிய பிரிவினர் அதிக தேர்ச்சியில் இருந்தா லும், இட ஒதுக்கீட்டு அடிப்படையில், அவர்களுக்கு குறைந்த இடங்களே கிடைக்கும். ஆனால், குறைந்த தேர்ச்சி இருந்தாலும், மற்ற பிரிவினருக்கு, 69 சதவீத இடங்கள் உறுதியாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்தங்கிய தமிழகம்

'நீட்' தேர்ச்சியில், முதல், 25 இடங்கள் பட்டியலில், தமிழக மாணவர் ஒருவர் கூட இடம் பெறவில்லை. ஆனால், மற்ற தென் மாநிலத்த வர் இடம் பிடித்தனர். கர்நாடகாவின், சங்கீர்த் சதானந்தா, 692 மதிப்பெண் பெற்று, நான்காம் இடம்; கேரளாவின், டெரிக் ஜோசப் - 691 மதிப் பெண் பெற்று, ஆறாம் இடம்; தெலுங்கானாவை சேர்ந்த, லக்கிம் செட்டி அர்னாவ், 685 மதிப்பெண் பெற்று, 12ம் இடம் பெற்றுள்ளனர். ஆந்திராவின், நாரெட்டி மான்விட்டா, 685 மதிப்பெண் பெற்று, 14ம் இடம்; கேரளாவின் நடா பாத்திமா, 684 மதிப்பெண பெற்று, 18ம் இடம்; மரியா பிஜி வர்கீஸ், 682 மதிப்பெண் பெற்று, 21ம் இடம்; தெலுங்கானாவின், மங்கனி தீபிகா, 681 மதிப்பெண் பெற்று, 24ம் இடம் பெற்றுள்ளனர்.

குஜராத் ஆதிக்கம்

மொழி வாரியாக, ஆங்கிலத்தில், 9.13 லட்சம்; ஹிந்தி, 1.20 லட்சம்; தெலுங்கு, 1,766; அஸ்ஸாமிஸ், 3,810; குஜராத்தி, 47,853; மராத்தி, 978; தமிழ், 15,206; வங்காளம், 34,417; கன்னடம், 712; ஒரியா, 452 பேர் தேர்வு எழுதியுள்ளனர்.

அதாவது, ஆங்கிலத்தில், 80.16 சதவீதம்; ஹிந்தியில், 10.59 சதவீதம் பேர் என, இந்த இரு மொழிகளில், மொத்தம், 90.75 சதவீதம் பேர் எழுதியுள்ளனர். உள்ளூர் மொழிகளில், 9.25 சதவீதம் பேர் மட்டுமே, நீட் தேர்வை எழுதி உள்ளனர். அதிலும், குஜராத் மொழியில் அதிக மாணவர்கள், அதாவது, 4.20 சதவீதம் நீட் தேர்வை எழுதியுள்ளனர்.
- நமது நிருபர் -


ஹிந்தியிலும் பாஸ்போர்ட் தகவல்கள்  மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகை
புதுடில்லி: ''பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக் கும், 8 வயதுக்கு உட்பட்டோர் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு, 10 சதவீத கட்டண சலுகை அளிக்கப்படும்; பாஸ் போர்ட்டில் இடம் பெறும் தகவல்கள், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் என, இரு மொழி களிலும் இடம் பெறும்,'' என, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

டில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற, மத்திய அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, சுஷ்மா சுவராஜ் பேசியதாவது:

மத்தியில், பா.ஜ., தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின், பாஸ்போர்ட் பெறுவதில் இருந்த நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. தத்கல் முறையில் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும் போது, 'பான்' கார்டு இல்லாதோர், தங்கள் ரேஷன் கார்டை சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளதால், கிராமப் புறங்களில் வசிக்கும் ஏராளமானோர் பலனடைய முடியும்.

பாஸ்போர்ட்கேட்டு விண்ணப்பிக்கும், 8 வயதுக்கு உட்பட்டோர் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட விண் ணப்பதாரர்களுக்கு, விண்ணப்பக் கட்டணத்தில், 10 சதவீத சலுகை அளிக்கப்படும்.

இந்த அறிவிப்பு உடனடியாக அமல்படுத்தப்படும். பாஸ்போர்ட்டில், விண்ணப்பதாரரின் தனிப்பட்ட தகவல்கள், ஆங்கிலத்தில் மட்டும் இடம் பெறுவ தால், அதை புரிந்து கொள்வதில் பலர் சிரமப்படுவ தாக, புகார் எழுந்துள்ளது.

எனவே, அனைத்து தரப்பு மக்களின் நலன் கருதி, இனி, பாஸ்போர்ட்டில் இடம் பெறும் தகவல்கள், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளிலும் அச்சிடப்படும்.

அரபு நாடுகள், ஜெர்மனி, ரஷ்யா போன்ற நாடுகளின் பாஸ்போர்ட்கள், அந்தந்த நாட்டு மொழிகளில் அச்சிடப்படுகின்றன. அப்படியிருக்கையில், நாமும் பாஸ்போர்ட்டில் ஹிந்தி, ஆங்கிலம் என இரு மொழிகளையும் பயன்படுத்துவதில் தவறில்லை. விவாகரத்தான, கணவரால் கைவிடப்பட்ட பெண் கள், ஆதரவற்றோர் பாஸ்போர்ட் பெறுவதிலும்,



வெளிநாடு செல்வதற்கான ஆவணங்கள் சமர்ப்பித்தல், விசா பெறும் நடைமுறையிலும் இருந்த சிக்கல்களுக்கு, தீர்வு காணப்பட்டு உள்ளது. இதன் மூலம், ஏராளமானோர் பலன் அடைந்துள்ளனர்.

போஸ்ட் ஆபீஸ்களில், பாஸ்போர்ட் சேவா கேந்திராக்கள் துவக்கப்பட்டுள்ளதன் மூலம், கிராமப்புறங்களில் உள்ளோர் மிக எளிதாக பாஸ்போர்ட் சேவை பெற முடிகிறது. இதனால், பாஸ்போர்ட் அலுவலக ஊழியர்களின் பணி வாய்ப்பு பறிக்கப்படாது; மாறாக, அவர்களின் பணிச்சுமை குறைக்கப்பட்டுள்ளது.பாஸ்போர்ட் அலுவலக ஊழியர்களுக்கு எந்த பாதிப்பும் வராது என உறுதியளிக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Friday, June 23, 2017

முதுமை - தனிமை - வறுமை

By ஆசிரியர்  |   Published on : 22nd June 2017 05:27 AM  |  
இந்திய மக்கள்தொகையில் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கை 65% என்று நாம் ஒருபுறம் பெருமைப்பட்டுக் கொள்கிறோம். அதிக எண்ணிக்கையில் இளைஞர்கள் இருப்பது வளர்ச்சிக்கான அறிகுறிகளில் ஒன்று என்பதில் சந்தேகமில்லை. அதேநேரத்தில் இந்தியா இன்னொரு பிரச்னையையும் எதிர்கொள்கிறது.
இந்தியாவின் அதிவேக பொருளாதார முன்னேற்றத்தை இளைஞர்களின் மனிதவள சக்தி உறுதிப்படுத்தும் வேளையில் அதனால் கிடைக்கும் பலன்களை இன்னொருபுறம் அதிகரித்து வரும் முதியோர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்துகிறது. இந்தியாவின் பொருளாதார நிபுணர்களுக்கு மிகப்பெரிய கவலையை அளிப்பது அதிகரித்து வரும் முதியோர்களின் எண்ணிக்கை. 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களின் எண்ணிக்கையில் உலகிலேயே இரண்டாவது இடத்தை பெற்றிருக்கும் நாடாக இந்தியா இருக்கிறது.
ஏறத்தாழ 10.4 கோடிக்கும் அதிகமான முதியோர்களின் எண்ணிக்கை, அதிகளவிலான சமூக பொருளாதார அழுத்தங்களை ஏற்படுத்துகிறது. அதனால், முதியோர்களுடைய தேவைக்கு ஏற்ற மருத்துவச் சேவையையும் அவர்களைப் பாதுகாப்பதற்கான வசதிகளையும் ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது. இதுவரை இல்லாத அளவுக்கு இவற்றின் தேவை அதிகரித்திருக்கிறது.
இந்திய மக்கள்தொகையில் ஏறத்தாழ 20% பேர் 2050}இல் 60 வயது கடந்தவர்களாக இருப்பார்கள் என்கிறது ஒரு ஆய்வு. இப்போது இருக்கும் 8%லிருந்து கணிசமான அளவுக்கு ஆண்டு
தோறும் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது அதை எதிர்கொள்ளத் தேவையான சுகாதார சமூக பாதுகாப்பு தேவைப்படுகிறது. ஆனால், அதற்கேற்ப நாம் திட்டமிடவோ செயல்படவோ இல்லையென்பதும் முதியோரைப் பேணுதல் என்பதில் எந்தவித முனைப்பும் காட்டாமல் இருக்கிறோம் என்பதும்தான் உண்மை.
பொருளாதார வளர்ச்சியடைந்த நாடுகளில் முதியோர் பேணல்களுக்கான பலதரப்பட்ட முன்னேற்பாடுகள் செய்யப்படுகின்றன. அனைவருக்கும் மருத்துவக் காப்பீட்டு வசதி உறுதிப்படுத்தப்படுகிறது. எளிதில் மருத்துவ வசதி தரப்படுவதற்கான மருத்துவமனைகள் நிறுவப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, முதியோர் பேணல், முதியோர் தொடர்பான மருத்துவச் சிகிச்சை ஆகியவை முதியோருக்கான சிறப்பு மருத்துவமனைகளின் மூலம் மிக அதிக அளவு ஏற்
படுத்தப்பட்டிருக்கின்றன. இந்தியாவில் இதுபோன்ற திட்டமிட்ட ஏற்பாடுகள் குறித்து நாம் இன்னும் சிந்திக்கவே தொடங்கவில்லை.
முதியோர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க அவர்கள் தொடர்பான நோய்களும் அதற்கான மருத்துவச் சிகிச்சைகளும் மாற்றம் காணுகின்றன. தொற்றுநோய்களிலிருந்து நோய்த் தொற்று அல்லாதவை என்று மருத்துவச் சிகிச்சையில் பல்வேறு மாற்றங்களையும் மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. தடுப்பு, பாதுகாப்பு, சிகிச்சை, மறுவாழ்வு என்று மருத்துவப் பாதுகாப்பில் பல்வேறு அம்சங்கள் குறித்துத் திட்டமிடலும் அதற்கான வசதிகளை ஏற்படுத்துவதும் தேவைப்படுகிறது.
முதலில் முதியோர் குறித்த சமுதாயத்தின் கண்ணோட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியாக வேண்டும். இதுகுறித்துத் தீவிரமான விழிப்புணர்வுப் பிரசாரத்தையும் புரிதலையும் ஏற்படுத்தியாக வேண்டும். முதியோர்கள் தங்கள் இறுதிக்கால வாழ்க்கையை கெüரவமாகவும் பாதுகாப்பாகவும் கழிப்பதற்கு சமூகத்தின் கண்ணோட்டம் மாற வேண்டியது மிக மிக அவசியம். குடும்பங்களால் புறக்கணிக்கப்படுதல், அநாதையாக விடப்படுதல், குடியிருக்க இடமில்லாமல் தவித்தல், நல்ல மருத்துவக் கண்காணிப்புக்கு வழியில்லாமல் போவது, எந்தவித நிறுவன உதவியும் இல்லாமல் இருப்பது உள்ளிட்டவை முதியோர் பரவலாக எதிர்கொள்ளும் வேதனைகள்.
குடும்பங்களிலிருந்து பிரிய நேர்வதால் ஏற்படுகின்ற தனிமையும் அதனால் மனஉளைச்சலுக்கு உள்ளாகி அனுபவிக்கும் வேதனையும் கைவிடப்பட்ட முதியோர் பரவலாக எதிர்கொள்ளும் பிரச்னைகள். மேலைநாடுகளைப் போல அல்லாமல் இந்தியக் குடும்பங்களில் குழந்தைகள் முதியோருக்கு பாதுகாப்பு அளிக்கும் பண்பாட்டுக் கூறு குறைந்து வருவது இதற்கு மிகப்பெரிய காரணம்.
தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு நிறுவனத்தின் புள்ளிவிவரப்படி 60 வயதுக்கு மேற்பட்ட முதியோரில் 3% தனிமையில் வாழ்கிறார்கள். கணவன் மனைவியாகத் தனிமையில் சேர்ந்து வாழும் முதியோர் 9.3%. தங்கள் குழந்தைகளுடன் வாழும் முதியோர்கள் 35.6%. இந்தப் புள்ளிவிவரம் 2004}இல் வெளியிடப்பட்டது.
13 ஆண்டுகளுக்குப் பிறகு இதில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கக் கூடும். பெருமளவில் இளைய தலைமுறையினர் வேலைவாய்ப்புத் தேடி வெளியூர்களுக்கு சென்று விடுவதால் தங்கள் பெற்றோரை தங்களுடன் அழைத்துச் செல்லவோ அவர்களது தேவை குறித்து கவலைப்படவோ முடியாத, இயலாத சூழல் பரவலாக காணப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், வெளிநாடுகளில் போய் குடியேறும்போது குழந்தைகளுடன் குடியேற பெற்றோர்களுக்கு முடியாமல் போவதும், அப்படியே போனாலும்கூட அந்த சூழல் ஒத்து வராததாலும் பெரும்பாலானோர் முதுமையில் தனிமையையே எதிர்கொள்கிறார்கள். இதனால் அவர்கள் மாற்று ஏற்பாடுகள் குறித்து சிந்திக்க வேண்டியிருக்கிறது.
வசதி படைத்தவர்கள் ஓய்வு கால குடியிருப்புகளில் தங்கள் வயதை ஒத்த முதியோர்களுடன் வாழ்ந்து தனிமையை விரட்டுகிறார்கள். தனியார் துறையில் 3 லட்சம் முதியோருக்கான வீடுகள் நாடு தழுவிய அளவில் ஏற்படுத்தப்படுகின்றன. வசதியில்லாதவர்கள்? பாதுகாப்பும் அடிப்படை வசதியும் கொண்ட முதியோர் காப்பகங்கள் இன்றைய அவசியத் தேவை. என்ன செய்யப் போகிறோம்?
ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கவனத்திற்கு SR டிஜிட்டல் மயமாகும் முன் என்ன செய்ய வேண்டும் ?? உங்கள் பழைய பணிப்பதிவேடு ( SR BOOK ) என்னவாக போகிறது !!

1) அனைத்து SR ஐயும் மாவட்டக் கரூவூலத்தில் ஒப்படைக்க வேண்டும்,..பெற்றுக்கொணடதற்கு ஒப்புகைச்சீட்டுத் தரப்படும்....இரண்டு நாட்களில் அவை ஸ்கேன் செய்யப்பட்டு திரும்ப பெற்றுக்கொண்டதற்கான அத்தாட்சியை வாங்கிய பின் ஒப்படைக்கப்படும்.

2) SR DISTRICT TREASURY யில் இருக்கும் போது. அதில் ஏதேனும் திருத்தம் இருப்பதாக ஃபோன் மூலம் கூறக்கூடாது..HM நேரில் செல்ல வேண்டும்,


3)மிகப்பழமையான/ கிழிந்து போன/ லேமினேட் செய்யப்பட்ட SR உடைய பணியாளர் ஸ்கேன் செய்யும் போது உடனிருக்க வேண்டும்

4)ஸ்கேனிங் முடிந்தவுடன் அது பற்றிய 1 பிரிண்ட் அவுட் ஒவ்வொரு பணியாளருக்கும் தனித்தனியாக வழங்கப்படும்.அதில் தவறிருந்தால் அதை நாம் கூறியவுடன் , அத்தவறு சரி செய்யப்பட்டு அதற்குரிய வேறொரு பிரிண்ட் அவுட் வழங்கப்படும்

5)ஸ்கேன் பண்ணிய SRக்கு DIGITAL SR (DSR) என்று பெயர்

6)அந்தந்த மாவட்டத்தில் பணியாற்றுபவர் பற்றிய DSR அந்தந்த மாவட்டத்தில் மட்டுமேயிருக்கும்,.வேறு மாவட்டப பதிவில் சென்று தேடினால் இருக்காது..

7) ஒருவர் துறை மாறிதலில் சென்றாலோ/ வேறு மாவட்த்திற்கு பணிமாறுதல் பெற்றுச் சென்றாலோ அது குறித்துத் தகவல் தெரிவித்தால் அந்த மாவட்டத்திற்கு DSR அனுப்பி வைக்கப்படும்.

8) RETIREMENT PENSION PROPOSAL அனுப்பும்போது SR BOOK ஐ அனுப்பக்கூடாது, மாறாக DSR ஐ மட்டும் அனுப்பினால் போதும்


9)ஒருவரிடம் வேறு துறையில் பணியாற்றிய SR/நிதியுதவி பெறும் பள்ளி SR / அரசுப்பள்ளி SR என ஒன்றிற்கு மேற்பட்ட SR இருந்தால் அவை அனைத்தையும் ஒப்படைக்க வேண்டும்

10) SR SCAN செய்யப்பட்டதற்கு அடையாளமாக கடைசியாக ஸ்கேன் செய்யப்பட்ட பக்கத்தில் மாவட்டக்கருவூல அலுவலரின் கையொப்பம் முத்திரையுடனிருக்கும்,,அதன் பிறகு மேற்கொள்ளப்படும் அனைத்துப் பதிவுகளும் முத்திரைக்குப் பின்னுள்ள பக்கங்களில் இடம் பெற வேண்டும்...

11)SR DETAILS ம் WEBROLL DETAILSம் ஒன்று போலிருக்க வேண்டும்., இல்லையேல் WEBROLL REJECT செய்துவிடும்...

12)N.O.C,

ஆதார்எண். சாதனைகள், பெற்றுள்ள விருதுகள் பற்றிய விவரங்கள்DSR ல் இருக்கும்..

13)எதிர்காலத்தில் MANUAL SR MAINTENANCE இருக்காது்

14) DSR ல் NEXT INCREMENT ,HRA SLAB அனைத்துமிருக்கும்

15)SCANE முடிந்த 15 நாள் மட்டுமே அப்பதிவு மாவட்ட கருவூல அலுவலரின் கட்டுப்பாட்டில் இருக்கும்..அதற்குள் நாம் பிழை திருத்தம் மேற்கொள்ளலாம்..அதன்பின் தானாகவே அதற்கடுத்த அலுவலருக்கு MOVE ஆகிவிடும்,,

அதன்பின் நாம் ஏதேனும் மிழை திருத்தம் மேற்கொள்ள வேண்டியிருந்தால் ,அவ்வுயர் அலுவலரின் அனுமதிக்குப்பின் அவரே அதைச் செய்வார்.நாம் அவரின் விசாரணைக்கு உட்பட வேண்டியிருக்கும்
Rlys' biggest food plaza will open in Tambaram
Chennai


By the end of this week, Tambaram station, the new coaching terminal being built for Chennai, will have an important passenger amenity that even Chennai Central lacks -a major food plaza with vegetarian, non-vegetarian and fast food dishes.Touted as the country's biggest food plaza (by area) within a railway station, it will be inaugurated by railway minister Suresh Prabhu when he visits the city this weekend.
Unlike the major food plaza at Chennai Central, the one at Tambaram got around bureaucratic tangles regarding supply of electricity. The Tambaram food court will spread across 12,000sqft. As many as 600 people can dine in its restaurants at any time.
Indian Railways will earn close to `50 crore in licence fees from the project over the next 12 years.
Along with brands like Saravana Bhavan, Adyar Ananda Bhavan and Madras Coffee House, international fast food chain McDonalds is set to open its first stall in a railway station in the plaza.Another local player, Madurai Kumar Mess, has also been roped in. Separate counters selling Rail Neer water bottles and juice stalls will also be available. The three storey building on the GST Road side will be fire-proof with water sprinkler systems, said N Gopinathan, chief project consultant of JS Catterers, the licencee.
For the first time, two huge cold storages for vegetarian and non-vegetarian food products have been installed in a railway station, an official said.
The outlets will be in three locations -a threestorey structure located behind the bus stand on GST Road on the western side, a two-storey structure beside the parking lot on the eastern side, and a small counter in the concourse. The restaurants in the first two structures will be open to people outside the railway station as well.
“The brands have been chosen carefully to cater to the college-going crowd on the eastern end. On the western side, the restaurants will cater to families, especially those who like the cuisine of south Tamil Nadu,“ Gopinathan said.
Officials of Indian Railway Catering and Tourism Corporation (IRCTC), which issued the contract, said they expect around 1 lakh customers daily. The station records 50,000 footfalls a day, which is likely to go up once the station is converted into a coaching terminal, an official said.
'ஸ்மார்ட் ரேஷன் கார்டு' ஜூலைக்குள் வழங்கப்படும்

பதிவு செய்த நாள்23ஜூன்
2017
01:23

சென்னை: ''பொது மக்களுக்கு, 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டுகள், ஜூலை மாதத்திற்குள் வழங்கி முடிக்கப்படும்,'' என, கூட்டுறவுத் துறை அமைச்சர் ராஜு தெரிவித்தார்.

சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:

அ.தி.மு.க., - முத்தையா: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தொகுதி, அரியக் குடி கிராமத்தில், புதிய ரேஷன் கடை அமைக்க, அரசு நடவடிக்கை எடுக்குமா?
அமைச்சர் ராஜு: அரியக்குடி முழு நேர ரேஷன் கடை, 978 குடும்ப அட்டைகளுடன், அரசு கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. மற்றொரு கடை அமைக்க வேண்டிய அவசியம் எழவில்லை.

தி.மு.க., - புகழேந்தி: காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட, வேடந்தாங்கல், மேலவலம்பேட்டை, கருங்குழி போன்ற இடங்களில் கட்டப்பட்ட, ரேஷன் கடைகள் இன்னும் திறக்கப்படாமல் உள்ளன.
கடந்த முறை கேட்டபோது, என்ன காரணம் என, ஆய்வு செய்யும்படி, அமைச்சர் கூறினார். சாதாரண எம்.எல்.ஏ.,வான நான் எப்படி ஆய்வு செய்ய முடியும்; அமைச்சர் தான் காரணத்தை ஆய்வு செய்து, கடைகளை திறக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு
நிதியில், காந்தி நகரில் கட்டப்பட்ட, ரேஷன் கடையும் திறக்கப்படாமல் உள்ளது.

அமைச்சர் ராஜு: மின் இணைப்பு பெறாதது உட்பட பல்வேறு காரணங்களால், 20 கடைகள் திறக்கப்படாமல் உள்ளன. உறுப்பினர் கூறிய கடைகள், ஏன் திறக்கப்பட வில்லை என்ற காரணத்தை, மாலைக்குள் உறுப்பினருக்கு தெரியப்படுத்துகிறேன்.

தி.மு.க., - பூங்கோதை: என் தொகுதியில், மூன்று புதிய ரேஷன் கடைகள் கட்ட வேண்டும் என, அதிகாரிகளிடம் வலியுறுத்தினேன். அவர்கள், ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கும் பணி நடைபெறுவதால், தற்போது, புதிய கடைகள் திறக்க முடியாது என, தெரிவித்தனர். ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கும் பணி, எப்போது நிறைவடையும்; புதிய கடைகள் எப்போது திறக்கப்படும்?
அமைச்சர் ராஜு: ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கும் பணி, ஜூலை மாதத்திற்குள் முடிக்கப்படும். விதிகளுக்கு உட்பட்டிருந்தால், புதிய கடைகள் திறக்க, நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
ரம்ஜான் பண்டிகை விடுமுறை : ஆம்னி பஸ் கட்டணம் உயர்வு

பதிவு செய்த நாள்23ஜூன்2017
00:51

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, மூன்று நாட்கள் தொடர் விடுமுறை என்பதால், முக்கிய நகரங்களுக்கு இயக்கப்படும், ஆம்னி பஸ்கள் கட்டணம் உயர்ந்துள்ளது. ஜூன், 26 திங்களன்று, ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. முந்தைய நாட்கள், சனி, ஞாயிறாக இருப்பதால், மூன்று நாட்கள் தொடர் விடுமுறையாக உள்ளது. இதனால், தொழில் நகரங்களில் இருந்து, சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதனால், தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பஸ்கள் கட்டணம் உயர்த்தப் பட்டுள்ளது. நேற்று மதியம், 'ரெட்பஸ் டாட் காம்' இணையதளத்தில் விற்ற டிக்கெட்டுகள் கட்டண விபரப்படி, இரண்டு, மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

உதாரணமாக, பெங்களூரில் இருந்து சென்னைக்கு, 550 முதல், 750 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால், நேற்று குறைந்தபட்சம், 1,000 முதல், 2,000 ரூபாய் வரை வசூலிக்கப்பட்டது. 

சென்னையில் இருந்து சேலத்துக்கு, 450 முதல், 850 ரூபாய் கட்டணம்
நிர்ணயித்துள்ள நிலையில், நேற்று, 1,000 முதல், 1,500 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது.

 மதுரை - ஐதராபாத், 4,000 ரூபாய், சென்னை - திருநெல்வேலி, 2,500 ரூபாய் வசூலிக்கப்பட்டது.
'ரெட்பஸ் டாட்காம்' கட்டணம் அதிகரிப்பு செய்யப்பட்ட நிலையில், தமிழக முக்கிய நகரங்களில் உள்ள பஸ் ஸ்டாண்டுகளில் செயல்படும் 'புக்கிங்' மையங்களில், ஆம்னி பஸ் உரிமையாளர்கள், இஷ்டம் போல் கட்டணத்தை
அதிகப்படுத்தியுள்ளனர்.

இதனால், பயணியர் அதிர்ச்சிக்கு ஆளாகி, வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும், நடவடிக்கை இல்லை.
அரசு ஒப்பந்த டாக்டர்களுக்கு ஆதார் இனி கட்டாயம்

பதிவு செய்த நாள்23ஜூன்2017 00:36

'அரசு ஒப்பந்த டாக்டர்கள், இனி ஆதார் எண்ணை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்' என, மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இயக்குனர், பானு உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில், 13 அரசு மருத்துவக் கல்லுாரிகளில், முதுநிலை மருத்துவ படிப்புகள் உள்ளன. இதில், முதுநிலை மருத்துவம் படிப்போர், இரண்டு ஆண்டுகள், கிராமப்புற அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும். ஆனால், படிப்பை முடிக்கும் அரசு சாரா டாக்டர்கள், கிராமப்புற அரசு மருத்துவமனைகளில், ஓரிரு மாதங்கள் பணியாற்றி விட்டு, அரசுக்கு, 'டிமிக்கி' கொடுத்து வருகின்றனர். மேலும், பணியில் சேரும்போது, போலியான முகவரியை கொடுப்பதால், அவர்களை தொடர்பு கொள்ள முடிவதில்லை. இந்தாண்டு மட்டும், ஒப்பந்தத்தை மீறியதாக, 600க்கும் மேற்பட்ட டாக்டர்களுக்கு, மருத்துவம் மற்றும் ஊரக பணிகள் இயக்ககம், 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது. அதில், 10 பேர் மட்டும் பணிக்கு திரும்பி உள்ளனர். மற்றவர்கள் பணிக்கு திரும்பாமல், அரசின் நோட்டீசை அலட்சியப்படுத்தி வருகின்றனர். இதற்கு முடிவு கட்டும் வகையில், ஒப்பந்த டாக்டர்கள் பணியில் சேரும் போது, ஆதார் எண்ணை கட்டாயம் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர், பானு கூறியதாவது: முதுநிலை மருத்துவம் படித்த டாக்டர்கள், 40 லட்சம் ரூபாயும், டிப்ளமோ படித்த டாக்டர்கள், 20 லட்சம் ரூபாய் செலுத்தி, ஒப்பந்தத்தை முடித்து கொள்ள முடியும். ஆனால், பலர் ஒப்பந்தப்படி பணி செய்வதில்லை; ஒப்பந்த தொகையும் செலுத்துவதில்லை. பலர் கொடுக்கும் முகவரி, போலியாக உள்ளது. எனவே, ஒப்பந்த டாக்டர்கள், நியமன ஆணையுடன், ஒப்பந்த பத்திரம் மற்றும் ஆதார் நகல் சான்று சமர்ப்பிப்பது, கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதனால், ஒப்பந்தத்தை மீறுவோரை, எளிதாக அடையாளம் கண்டு, நடவடிக்கை எடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -
இன்ஜி., கவுன்சிலிங் 'டாப்பர்ஸ்'பட்டியல் வெளியீடு : தனியார் பள்ளி மாணவர்கள் சாதனை

பதிவு செய்த நாள்23ஜூன்
2017
00:01



அண்ணா பல்கலையின், இன்ஜி., கவுன்சிலிங்கிற்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், 'டாப்பர்ஸ்' பட்டிய லில், தனியார் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
தமிழக அரசு பள்ளி மாணவர்கள் யாரும் இடம் பெறவில்லை. கேரளாவில் உள்ள பாடத்திட்டத்தில் படித்த, மாணவி, 1,200க்கு, 1,200 மதிப்பெண் பெற்று, அந்த மாநிலத்தில் முதல் இடம் பெற்றுள்ளார். இவரும், தமிழக இன்ஜி., கவுன்சிலிங் தரவரிசையில், 200க்கு 200, 'கட் - ஆப்' மதிப்பெண் பெற்று, டாப்பர்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.

முதல் 12 இடங்கள் பிடித்தோர்

பெயர் பள்ளி மாவட்டம் மதிப்பெண் பாடப்பிரிவு
ஸ்ரீராம் பெஸ்ட் ஸ்கூல், தஞ்சாவூர் தஞ்சாவூர் 1,185 கம்யூ., சயின்ஸ்
ஹரி விஷ்ணு விகாஷ் வித்யாலயா, திருப்பூர் திருப்பூர் 1,191 கம்யூ., சயின்ஸ்
சாய்ராம் சியோன் மெட்ரிக் பள்ளி, குரோம்பேட்டை சென்னை 1,184 கம்யூ., சயின்ஸ்கிருத்திகா கிரீன் பார்க் பள்ளி, நாமக்கல் சேலம் 1,191 உயிரியல்
யுவனேஷ் வேலம்மாள் மெட்ரிக், பொன்னேரி திருவள்ளூர் 1,189 உயிரியல்
பிரீத்தி வெங்கட லட்சுமி மெட்ரிக், சிங்காநல்லுார் கோவை 1,193 உயிரியல்
கீர்த்தனா ரவி பி.எஸ்.எஸ்.குருகுலம், பாலக்காடு கோவை 1,200 உயிரியல்
சதீஷ்வர் கிரீன் பார்க் மெட்ரிக், நாமக்கல் சேலம் 1,186 உயிரியல்
ஷோபிலா கே.ஆர்.பி.மெட்ரிக், சங்கரி மேற்கு சேலம் 1,190 உயிரியல்
சவுமியா ஜெயம் வித்யாலயா, அரூர், தர்மபுரி தர்மபுரி 1,187 உயிரியல்
முகமது அர்ஷத் எஸ்.ஆர்.வி., பள்ளி, திருச்சி திருச்சி 1,184 உயிரியல்
ஷோபனா தேவி அணுசக்தி மேல்நிலைப்பள்ளி, கல்பாக்கம் காஞ்சிபுரம் 1,172 உயிரியல்.

- நமது நிருபர் -
'நீட்' தேர்வு முடிவுக்கு பிறகே இன்ஜினியரிங் கவுன்சிலிங்
பதிவு செய்த நாள்22ஜூன்
2017
23:41

சென்னை: ''இன்ஜினியரிங் கவுன்சிலிங் துவங்கும் தேதி, 'நீட்' தேர்வு முடிவுக்கு பின் இறுதி செய்யப்படும்,'' என, உயர் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார்.
இன்ஜி., மாணவர்களுக்கான தரவரிசை பட்டியலை உயர் கல்வி அமைச்சர் அன்பழகன் நேற்று வெளியிட்டார்.

பின் அவர் அளித்த பேட்டி: இன்ஜினியரிங் கவுன்சிலிங்கை ஜூன் 27ல் துவங்க திட்டமிட்டுள்ளோம். ஆனால், நீட் தேர்வு முடிவு தாமதமானால், கவுன்சிலிங் தேதி தள்ளிப்போகும். தற்போதைய நிலையில் 200க்கு 200, 'கட் ஆப்' பெற்றவர்கள் 59 பேர் உள்ளனர். இவர்களில் 36 பேர் மருத்துவப் படிப்பில் இடம் பெற வாய்ப்புள்ளது. 199 கட் ஆப் பட்டியலில் உள்ள 811 பேரில் 645 பேரும்; 198 கட் ஆப் பட்டியலில் உள்ள 2,097 பேரில் 1,681 பேரும்; 197 கட் ஆப் பட்டியலில் உள்ள 3,766 பேரில் 3,014 பேரும் மருத்துவப் படிப்பு இடம் பெற தகுதியுடன் உள்ளனர்.
இவர்கள், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, மருத்துவப் படிப்பில் சேர்ந்தால், அவர்கள் இன்ஜி., படிப்புக்கு வர மாட்டார்கள். எனவே இன்ஜி., கவுன்சிலிங்கை முன்கூட்டியே நடத்தினால் மருத்துவம் செல்லும் ஆயிரக்கணக்கான மாணவர்களின் இன்ஜி., இடங்கள் காலியாகி, அதை மீண்டும் நிரப்ப முடியாத சிக்கல் ஏற்படும்.எனவே, மருத்துவ கவுன்சிலிங்குக்கு பின்பே இன்ஜி., கவுன்சிலிங் நடத்தப்படும். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, ஜூலை 31க்குள் இன்ஜி., கவுன்சிலிங்கை முடிக்க வேண்டும்.தற்போது நீட் தேர்வால், இன்ஜி., கவுன்சிலிங் தள்ளிப்போகும் என்பதால் ஜூலை 31க்கு பிறகும் கவுன்சிலிங் நடத்த, சட்டரீதியாக அனுமதி பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு 11 கல்லுாரிகள் மாணவர் சேர்க்கையை நிறுத்தியுள்ளன. 67 படிப்புகள்,
கல்லுாரிகளால் நிறுத்தப்பட்டுள்ளன. மொத்தம் 527 கல்லுாரிகளில், இரண்டு லட்சத்து, 85 ஆயிரத்து 844 இடங்களுக்கு, அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கப்படுவர். இடங்களின் எண்ணிக்கை, இறுதி நேரத்தில் மாறும்.இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

Thursday, June 22, 2017

Soudi Arabia Family Tax

சவுதியில் குடும்பத்துடன் வசிக்கும் வெளிநாட்டினருக்கு வரி

ரியாத் : சவுதி அரேபியாவில் குடும்பத்துடன் வசிக்கும் வெளிநாட்டினருக்கு புதிய வரி விதிக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய 41 லட்சம் இந்தியர்கள் சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களில் பலர் குடும்பத்தையும் உடன் அழைத்துச் சென்றுள்ளனர்.இந்நிலையில் ஜூலை 1 ம் தேதி முதல் வெளிநாட்டினருக்கு புதிய வரி விதிக்கப்படுவதாக சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய கட்டணத்திற்கு குடும்ப வரி என சவுதி அரசு பெயரிட்டுள்ளது. இதன்படி, சவுதியில் வேலை செய்யும் வெளிநாட்டடினருடன் தங்கி இருக்கும் ஒவ்வொரு நபருக்கும் தலா 100 ரியால் (இந்திய மதிப்பில் ரூ.1700) மாதம் வரியாக செலுத்த வேண்டும். இதனால் எங்கு பணிபுரியும் இந்திய தொழிலாளர்களுக்கு கூடுதல் நிதி சுமை ஏற்படும்.

இதனால் சவுதி அரேபியாவில் வசிக்கும் இந்தியர்கள் பலர் தங்கள் குடும்பத்தை இந்தியாவிற்கு திருப்பி அனுப்ப திட்டமிட்டுள்ளனர். 100 ரியால் என்ற அளவிலான இந்த புதிய வரி 2020 ம் ஆண்டு வரை தொடரும் எனவும், அதன் பிறகு நபர் ஒருவருக்கு 400 ரியால் (இந்திய மதிப்பில் ரூ.6900) வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dailyhunt

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படுவது எப்படி? சிறப்புக் கட்டுரை - C.P.சரவணன், வழக்குரைஞர்

ஊதியக் குழுவின் பரிந்துரைகள் மட்டுமின்றி, பொதுவாக அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது பற்றிய அரசு விதிகள் மற்றும் அரசாணைகள் பற்றி பார்ப்போம்.


பொதுவான அரசாணைகள்

(அ) ஆண்டுதோறும் வழக்கம்போல் 3% ஊதிய உயர்வு வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. (அடிப்படை விதி 24) (FINANCE (PAY CELL) DEPARTMENT G.O. Ms. No. 234, DATED: 1ST JUNE, 2009)

(ஆ) ஒரு ஊழியர் மீது குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருந்தாலும் கூட ஊதிய உயர்வு வழங்கலாம். (அடிப்படை விதி 24-ன் துணை விதி (8) அரசு கடித.எண் 41533/பணி என்37-9, பணியாளர், நாள் 8.4.1988)

(இ) ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதங்களின் முதல் தேதியில் ஊதிய உயர்வு வழங்கப்படும். FINANCE (PAY CELL) DEPARTMENT G.O. Ms. No. 234, DATED: 1ST JUNE, 2009)

 (ஈ) புதியதாக பணி ஏற்கின்ற அல்லது பதவி உயர்வில் பணி ஏற்கின்ற ஒருவருக்கும் முதல் ஊதிய உயர்வு, இணையான காலாண்டின் துவக்கத்தில் வழங்கப்படும். இவர்கள் விஷயத்தில் ஓராண்டு பணி முடிக்க வேண்டிய அவசியமில்லை. (G.O.Ms.No.41 Finance Dept, Dated 11.1.1977 மற்றும் Govt Letter No.171550அவி173 Finance Dept, Dated 1.10,1991)

(உ) ஊதிய உயர்வு நிலுவை இருப்பின், அதற்கான சான்று கையொப்பமிட்ட நாளிலிருந்து ஓராண்டுக்குள் வழங்கப்பட வேண்டும். தவறின், அடுத்த உயர் அலுவலரின் முன் தணிக்கை பெற வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு மேலும் நிலுவையாக உள்ள இனங்களுக்குத் துறைத் தலைவரின் அனுமதி தேவை. (G.O Ms No.1285, Finance department Dated 11.10.1973 மற்றும் G.O Ms No.349, Finance department, Dated 21.5.1981)

(ஊ) தேர்வுகள் தேர்ச்சி பெறுவதற்காக ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டியிருப்பின், தேர்வுகள் நடந்த கடைசி நாளுக்கு (பிரிவுகளாக நடந்திருப்பின், பிரிவுத் தேர்வு நடந்த கடைசி நாளுக்கு) மறுநாள் முதல் ஊதிய உயர்வு வழங்கப்படும் (அடிப்படை விதி 26(எ)ன் துணை விதி (2)

தற்காலிக மற்றும் தகுதிகாண் பருவத்தினருக்கு ஊதிய உயர்வு

(அ) தற்காலிக ஊழியர்களுக்கும் ஆண்டுதோறும் ஊதிய உயர்வு வழங்கப்படும். ஆனால், அவர் வசிக்கும் பதவியில் தகுதிகாண் பருவக்காலத்தில் தேர்வுகள் ஏதேனும் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தால் முதல் ஊதிய உயர்வு மட்டும் வழங்கப்படும். இரண்டாம் ஊதிய உயர்வு குறிப்பிட்ட அந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர்தான் வழங்கப்படும். (அரசாணை எண். 1087, நிர்வாகத்துறை, நாள் 10.11.1982 அரசாணை எண். 231, P&AR,சி.16383 மற்றும் அரசு க.எண் 35068DOFIP&AR,நாள் 1.1.1994) தற்காலிகமாக பதவி உயர்வு பெற்றவருக்கும் ஆண்டுதோறும் ஊதிய உயர்வு வழங்கலாம். (Govt. Letter. No. 15285/FR.1746, Finance dated. 16.8.1975)

(ஆ) தகுதிகாண் பருவத்தினருக்கு ஆண்டுதோறும் ஊதிய உயர்வு வழங்கப்படும். தகுதிகாண் பருவக் காலத்தில் தேர்வுகள் வரையறை செய்யப்பட்ட பதவிகளுக்கு இரண்டாம் ஊதிய உயர்வு குறிப்பிட்ட அந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர் வழங்கப்படும். தகுதிகாண் பருவம் முடிந்து ஆணை வழங்கிய பின்னர் தான் இரண்டாவது ஊதிய உயர்வு வழங்கப்படவேண்டும் என்பது இனி இல்லை (G.O Ms No. 618, P&A.R., Dated 6.7.1987)

பணி அமர்த்தப்பட்டால், முந்தையப் பணிக்காலம் ஊதிய உயர்வுக்கு சேராது. இருப்பினும் அதே பதவியில் அதே துறையிலோ வேறு துறையிலோ பணி அமர்த்தப்பட்டால் அதே ஊதியம் வழங்குவதுடன் முந்தைய பணிக்காலம் ஊதிய உயர்வுக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். (Govt. Letter. No.76362874, P&AR Dated 27.7.1988)

முன் ஊதிய உயர்வு

(அ) ஒரு குறிப்பிட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றால் முன் ஊதிய உயர்வு வழங்கலாம் என குறிப்பான அரசாணை உள்ள பதவிகளுக்கு மட்டுமே, முன் ஊதிய உயர்வு வழங்கலாம்.

(ஆ) பணிக்கு வருவதற்கு முன்னரே குறிப்பிட் அந்த தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், முன் ஊதிய உயர்வு வழங்கலாம். (G.O Ms No.245, P&A.R., Dated 16.3.1985)

(இ) தேசிய அளவில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுபவருக்கு ஒரு முன் ஊதிய உயர்வும், சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெற்றால் இரண்டு ஊதிய உயர்வுகளும் கிடைக்கும் (G.O Ms No.1755, P&A.R., Dated 22.11.1988) மேற்படி ஊதிய உயர்வு போட்டி நடைபெற்ற மறுநாள் முதல் கிடைக்கும். மொத்த பணிக்காலத்தில் இதுபோன்ற காரணத்திற்கு மூன்று ஊதிய உயர்வுகளுக்கு மேல் கிடைக்காது. இருப்பினும் மேற்படி ஊதிய உயர்வு பதவி உயர்வுக்கான ஊதிய நிர்ணயத்திற்குச் சேராது.

(ஈ) சார்நிலை ஊழியர்களுக்கான கணக்குத் தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்கு Number Gazette பதிவுகளைக் கொண்டு முன் ஊதிய உயர்வு வழங்கலாம். (Govt. Letter.No. 52011 iii/873 P&A.R., Dated 13.8.1987)

(உ) உதவியாளர் பதவி உயர்வை துறக்கின்ற தட்டச்சர்/சுருக்கெழுத்து தட்டச்சர் ஆகியோருக்கு முன் ஊதிய உயர்வு கிடைக்காது. (G.O Ms No.10302 அ.வி. 285-2, P&A.R., Dated 4.9.1985)

(ஊ) தண்டனையாக ஊதிய உயர்வு தள்ளிப் போகின்ற நிகழ்வில் ஒருவருக்கு Advance Increment பெறுவதற்கான தகுதி கிடைத்தால் அதுவும் வழங்கப்பட வேண்டும். (Govt. Letter No. 28857 FR.177-1, P&A.R. dated 29.4.77)

பதவி இறக்கம் செய்யப்பட்டு விடுப்பில் சென்றால் ஊதிய உயர்வு

ஒருவர் பதவி இறக்கம் செய்யப்பட்டு விடுப்பில் சென்று விடுப்பு முடிந்து மீண்டும் அதே பதவியில் சேர்ந்தால் விடுப்புக்காலம் உயர் பதவியின் ஆண்டு ஊதிய உயர்வுக்கு சேரும் (24.3.1988 வரை விடுப்புக்காலம் பதவி உயர்வுக்கு சேராது என்று விதிகள் இருந்தன) (G.O Ms No.212, P&A.R., Dated 25.3.1988)

குற்றமாக கருதப்பட்ட தற்காலிகப் பணிநீக்க காலம்

 கீழ்நிலைப் பதவியில் பணிபுரிந்த காலம் உயர் பதவிக்கு சேராது

தண்டனைக் காலம் விடுப்புகளை சேர்த்தோ அல்லது நீங்கலாகவோ என தண்டனை வழங்கப்படும் ஆணையில் குறிப்பிட வேண்டும். இருப்பினும், With Cumulative effect-ஆக தள்ளப்படும் ஊதிய உயர்வு எப்போதுமே விடுப்புக்காலம் சேர்த்துதான் இருக்கும். (விதி 24 & அதன் அறிவுரை 2 (b))

தண்டனையாக ஊதிய உயர்வைத் தள்ளிப் போடுதல்

ஊதிய உயர்வை தண்டனையாக கருதி குறிப்பிட்ட காலத்திற்கு தள்ளிப்போடலாம். With Cumulative effect and Without Cumulative effect என இரு வகைகள் உள்ளன.

Without cumulative effect-ல் ஊதிய உயர்வு நிறுத்தப்பட்டால், குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் ஊதிய உயர்வு நிறுத்தப்பட்டு தண்டனைக்காலம் முடிவுற்றதும் நிறுத்தப்பட்ட ஊதிய உயர்வு வழங்கப்படும்.

With Cumulative effect-ல் தண்டனையாக நிறுத்தப்பட்ட ஊதிய உயர்வின் இழப்பு பணிக்காலம் முழுவதும் இருக்கும். தண்டனையாக நிறுத்தப்பட்டது மீண்டும் கிடைக்காது.

இதுவன்றி ஊதிய உயர்வு தள்ளிப் போகும் காலத்தில் விடுப்பு அனுபவித்தால் இணையான காலத்திற்கு ஊதிய உயர்வு தள்ளிப் போகும்.

ஒருவர் மீது ஒழுங்கு நடவடிக்கை நிலுவையிலிருப்பினும், ஊதிய உயர்வு வழங்கலாம். (Rule.6 under FR) ஆணை வழங்குதலை எதிர்பார்த்து ஊதிய உயர்வே தராமல் இருக்கக் கூடாது. ஆண்டு ஊதிய உயர்வு தள்ளிப் போகும் ஆணை வழங்கப்பட்டால், ஆனைக்குப் பின்னர் எதிர்வருகின்ற முதல் ஊதிய உயர்வு தள்ளிப் போகும். ஆணை வழங்கப்பட இருக்கின்றது என எதிர்பார்த்து ஊதிய உயர்வே தராமல் இருக்க முடியாது. (அடிப்படை விதி 24)

ஊதிய உயர்வு திரள்கின்ற நாளன்று விடுப்பிலிருந்தால்

ஊதிய உயர்வு திரள்கின்ற நாளன்று விடுப்பில் இருந்தால் (LLP Without M.C. தவிர) ஊதிய உயர்வின் நிதிப்பயன் விடுப்பு முடிந்து பணியேற்ற உடன் வழக்கமான ஊதிய நாள் முதல் கிடைக்கும். நிதிப்பயன் தள்ளிப் போகாது. விடுப்பு என்பது எல்லா விடுப்பும் சேரும், LLP Without MC-ல் இருந்தால் விடுப்பு முடிந்து சேர்ந்த பிறகுதான் அனுமதிக்க முடியும். (Govt Letter No.48747/FRDOI/93-9, dated 30.5.1994) (G.O.Ms.No 90 P&AR, Dated 28.3.95)

பணிநீக்கப்பட்டு மீண்டும் பணி அமர்த்தப்பட்டால் ஊதிய உயர்வு

(அ) தகுதிகாண் பருவம் முடித்தவர் பணிநீக்கம் செய்யப்பட்டு மீண்டும் பணி அமர்த்தப்பட்டால், அவர் பணிநீக்கத்திற்கு முன்னர் பெற்று வந்த ஊதியமே பெறலாம். அத்துடன் முந்தைய பணிக்காலமும், ஊதிய உயர்வுக்குக் கணக்கிடப்படும் (G.O.Ms.No.400 P&AR, Dated 7.4.1988) இதனை சாதாரணமாக ஊதியம் நிர்ணயம் செய்யும் அலுவலரே வழங்கலாம் - (Govt Letter no.44316/86-4. P&AR, Dated 29.8.1986)

(ஆ) இடைப்பட்ட பணி நீக்கக் காலம் Condone செய்யப்பட வேண்டிய தேவையில்லை (Govet Letter No.44318/86-4, Finance Department, Dated 29.8.1986)

(இ) தகுதிகாண் பருவக் காலத்தில் ஒருவருக்கு 1.4.1988 அன்று ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும். ஆனால், குறிப்பிட்ட தேர்வு தேறாத காரணத்தால் 1.4.1988 ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. 1.4.1989 மற்றும் 1.4.1990 ஊதிய உயர்வும் வழங்கப்படவில்லை. இவர் 18.9.1990 அன்று நடைபெற்ற தேர்வில்தான் தேர்ச்சி பெறுகின்றார். இவருக்கு 1988, 1989, 1990 ஆகிய மூன்று ஊதிய உயர்வுகளும் சேர்ந்து 17.9.1990 அன்று ஒரு சேர வழங்கப்படும் என்று Rule of 28 of State and Subordinate Service Rules கூறுகிறது. இதனால் இவருக்கு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. நிரந்தரமாக Cumulative நிதி இழப்பு ஏற்படவில்லை.

(ஈ) தகுதிகாண் பருவக்காலத்தில் பயிற்சி முடிக்கவேண்டிய இளநிலை உதவியாளர்களுக்கு இரண்டாவது ஊதிய உயர்வு அப்பயிற்சி முடிந்த பின்னர் தான் வழங்கப்பட வேண்டும். அலுவலக நடைமுறை காரணமாக பயிற்சிக்கு அனுப்புவது தாமதப்பட்டால், அரசின் ஆணை பெற்று விதிகளைத் தளர்த்தி வழக்கமான நாளிலேயே ஊதிய உயர்வு வழங்கலாம். (Govt Letter No.6888/90-3, P&AR Dated 18.4.1990 மற்றும் G.O.Ms No. 71720 பணி-பி/92-1, P&AR Dated, 2.12.1992)

(உ) ஒரு பதவிக்கு பணி அமர்வு செய்வதற்கான தகுதிகள் அனைத்தும் ஒருவர் பெற்றிருக்கவேண்டும். ஏதேனும் ஒரு தகுதி குறைவாக இருந்தாலும் அவருக்கு ஊதிய உயர்வே கிடைக்காது. (Govt Letter No.16599A/FRI/74-3 Finance Dept, dated 21.3.1975 & G.O.Ms No.41, Finance Dept, Dated 11.1.1977)

(ஊ) பணி இறக்கம் பெறுவதைத் தொடர்ந்து ஒருவர் விடுப்பில் செல்வதால் விடுப்பு முடிந்து மீண்டும் பதவி உயர்வு பெற்று அதே உயர் பதவியில் சேர்ந்தால் விடுப்புக் காலத்திற்கும் ஊதிய உயர்வு கிடைக்கும். அதாவது தள்ளிப் போகாது (Effective from 25.388) G.O.Ms.No.212, P&A.R., dated 25.388)

தட்டச்சர் சுருக்கெழுத்து தட்டச்சர்கள்

முதல் ஊதிய உயர்வு மட்டும் வழங்கலாம். இரண்டாம் உதிய உயர்வு தமிழ் தட்டச்சு சுருக்கெழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர்தான் வழங்கப்படும்.

ஊதிய விகிதத்தில் அதிகபட்சம் பெற்றவருக்கு ஊதிய உயர்வு

1.1.96 முதல் (நிதிப்பயன்1.9.1998) ஒரு ஊதிய வீதத்தில் அதிக பட்சம் பெற்றுவிட்ட ஒருவருக்கு இரண்டு ஆண்டுக்கு ஒரு முறைதான் ஊதிய உயர்வு கிடைக்கும் (GO.Ms No. 483, Finance (Pay commission) Dated 8.9.1998)

ஊதிய உயர்வுக்கு சேரும் காலம் –

பணியேற்பிடைக்காலம் FR 26(d)
அயல் பணி FR-26(d)
உயர்நிலைப் பதவியின் பணிபுரிந்த காலம் கீழ்நிலைப் பகுதிக்கு சேரும் FR26(e))
பயிற்சிக்கு சென்ற காலம் - (GO.Ms.No.370, P&ARdL26689)– அனைத்து விடுப்புகள்-(FR2660)
மருத்துவச் சான்றின் பேரில் ஊதியமில்லா விடுப்பு - (FR 26 (bb)


 ஊதிய உயர்வுக்கு சேராத காலம்

மருத்துவச் சான்று அல்லாத ஊதியமில்லாத விடுப்புFR26(bb)
அனுமதித்ததற்கும் அதிகமாக எடுக்கப்பட்ட வரன்முறை செய்யாத விடுப்புக்காலம்
C.P. சரவணன், வழக்கறிஞர்.  9840052475

கருணை அடிப்படை பணிநியமனம் தொடர்பான தகவல்கள்

கருணை அடிப்படை பணிநியமனம் தொடர்பான கேள்வி பதில்கள் கீழ்வருமாறு

1.கேள்வி:- கருணை அடிப்படையில் பணி நியமனம் யாருக்கு வழங்கப்படுகிறது?

இறந்த அரசு ஊழியரின் மனைவி / கணவர் / மகன் / மகள் / தத்து எடுக்கப்பட்ட மகன் / மகள்.  விவாகரத்து பெற்ற மகள் / விதவையாக உள்ள / கணவரால் கைவிடப்பட்ட மகள் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.

2.கேள்வி:- கருணை அடிப்படையில் பணிநியமனம் கோர கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதா?
ஆம்,  அரசு ஊழியர் இறந்த தேதியிலிருந்து 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்கப்பட வேண்டும்.

3.கேள்வி:- கருணை அடிப்படையில் பணி நியமனம் எந்தெந்த பதவிகளில் வழங்கப்பட்டு வருகிறது?
தற்போது, தமிழ்நாடு அமைச்சுப் பணியில், இளநிலை உதவியாளர் / தட்டச்சர் / வரைவாளர் / கிடங்கு மேலாளர் தரம் - 3 மற்றும் தலைமைச் செயலக உதவியாளர் போன்ற பதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. 1:தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு1

4.கேள்வி:- இறந்த அரசு ஊழியரின் வாரிசுதாரர் B.E., பட்டம் பெற்றுள்ளார்,  அவருக்கு கருணையடிப்படையில் உதவிப் பொறியாளர் பதவி வழங்கப்படுமா?
உதவிப் பொறியாளர் பதவி வழங்க இயலாது,  இளநிலை உதவியாளர் பதவி வழங்கப்படும்.

5.கேள்வி:- இறந்த அரசு ஊழியரின் வாரிசுதாரர்கள் கருணை அடிப்படையில் பணி நியமனம் பெறுவது அவர்களின் சட்டபூர்வ உரிமையா?
இல்லை. இறந்த அரசு ஊழியரின் குடும்பம் வறிய நிலையில் இருக்கிறது என, வட்டாட்சியரிடமிருந்து சான்றிதழ் பெற்று, பணி நியமனம் கோரும் விண்ணப்பத்துடன் மற்ற சான்றாவணங்களுடன் சமர்ப்பித்தால் தான், கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க இயலும்.

6.கேள்வி:- கருணை அடிப்படையில் பணிநியமனம் பெற யாரிடம் விண்ணப்பிக்க வேண்டும்?
இறந்த அரசு ஊழியர் பணிபுரிந்த அலுவலகத்தின் அலுவலர் மூலம் நியமன அதிகாரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

7.கேள்வி:- கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற எந்தெந்த சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்?
1. கருணை அடிப்படையில் பணி நியமனம் கோரும் காலஞ்சென்ற அரசு ஊழியரின் கணவரின் / மனைவியின் விண்ணப்பக் கடிதம்.
2. கருணை அடிப்படையில் பணி நியமனம் கோரும் காலஞ்சென்ற அரசு ஊழியரின் வாரிசுதாரரான விண்ணப்பதாரரின் விண்ணப்பக் கடிதம். 1:தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு1
3. இறந்த அரசு ஊழியரின் இறப்புச் சான்றிதழ்.
4. இறந்த அரசு ஊழியரின் வாரிசுச் சான்றிதழ்.
5. இறந்த அரசு ஊழியரின் இதர வாரிசுதாரர்களின் மறுப்பின்மைச் சான்றிதழ்கள்.
6. நிர்ணயிக்கப்பட்ட கல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்விச் சான்றிதழ்கள்.
7. கல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்விச் சான்றிதழ்களின் மெய்த்தன்மைக் கடிதம்.
8. வட்டாட்சியாரிடமிருந்து பெறப்பட்ட ஒருங்கிணைந்த சான்றிதழ்.
இறந்த அரசு ஊழியரின் மனைவி பணிநியமனம் கோரினால் அவர் மறுமணம் செய்யவில்லை என்பதற்கான சான்று.

8.கேள்வி:- கருணை அடிப்படையில் பணிநியமனம் கோரி விண்ணப்பித்து பணி நியமனம் பெற  நிர்ணயிக்கப்பட்ட வயது எவ்வளவு?
காலஞ்சென்ற அரசு ஊழியரின் மனைவியாக/ கணவனாக இருப்பின் அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது 50 மற்றும் மகள் அல்லது மகனாக இருப்பின் அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது 35 ஆகும்.

9.கேள்வி:- அடிப்படையில் நியமனம் பெற நிர்ணயிக்கப்பட்ட வயது எந்த தேதியிலிருந்து கணக்கிடப்படுகிறது?
காலஞ்சென்ற அரசு ஊழியர் இறந்த தேதியிலிருந்து  கணக்கிடப்படுகிறது.

10.கேள்வி:- காலஞ்சென்ற அரசு ஊழியரின் வாரிசுகள் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் கருணை அடிப்படையில் பணிநியமனம் கோரினால் யாருக்கு பணி நியமனம் வழங்கப்படும்? 1:தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு1
காலஞ்சென்ற அரசு ஊழியரின் மனைவியால்/ கணவனால் முன்மொழியப்படும் நபருக்கு வழங்கப்படும்,  ஆனால் மற்ற வாரிசுதாரர்களின் ஆட்சேபணையின்மைச் சான்றும் அவசியமானதாகும்.

11.கேள்வி:- என் தந்தை இறக்கும் தருவாயில் என் வயது 3,  என் தாயும் என் தந்தை இறந்த ஓராண்டுக்குள் மறைந்து விட்டார்,  நான் இந்த வருடம் 10ஆம் - வகுப்பு தேர்வு எழுதியுள்ளேன்,   என் தந்தையின் வாரிசு என்பதால் கருணை அடிப்படையில் பணிவாய்ப்பு எனக்கு வழங்க கோரி விண்ணப்பிக்கலாமா?
அரசு ஊழியர் மறைந்து 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்,  எனினும் தாயும் இல்லாத காரணத்தால் இதனை ஒரு சிறப்பு நேர்வாகக் கருதி ஏற்றுக் கொள்ளலாம்,  ஆனால் கருணை அடிப்படையில் அரசுப் பணியில் சேர குறும வயது 18 ஆகும்.

12.கேள்வி:- என் தந்தை இறக்கும்போது பன்னிரண்டாம் வகுப்பு  தேர்ச்சி பெற்றதினால் இளநிலை உதவியாளர் பணி கோரியிருந்தேன்,  5 வருடங்களாகியும் இன்னும் பணி வழங்கப்படவில்லை,  எனவே இடைப்பட்ட காலத்தில் தட்டச்சு ஆங்கிலம். தமிழ் ஆகிய இரண்டிலும் முதுநிலை தேர்ச்சி பெற்றுள்ளேன்,  நான் தட்டச்சர் பணி கோரி விண்ணப்பிக்கலாமா?
தட்டச்சர் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்வி பெற்றுள்ளபடியால் அப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம்,  ஆனால் தட்டச்சர் பணியிடம் காலியிருந்தால் மட்டுமே தட்டச்சர் பணியிடம் வழங்கப்படும், மொத்த காலியிடத்தில் 25 சதவிகிதம் மட்டுமே கருணை அடிப்படையிலான பணி நியமனத்திற்கு வழங்கப்படும்.

13.கேள்வி:- கருணை அடிப்படையில் பணி நியமனம். இறந்த அரசு ஊழியரின் குடும்பத்தினருக்கு பணி வழங்க வேண்டுமென்பது கட்டாயமா? உரிமையுடன் கோரலாமா?
கருணை அடிப்படையில் பணி நியமனத்திற்கு என நிர்ணயிக்கப் பட்டுள்ள அனைத்து சான்று - ஆவணங்கள் அரசாணை எண் 560. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை. நாள் 03,08,1977-இன் படி சமர்ப்பிக்கப்பட்டு. பணி நியமன அதிகாரிக்கு திருப்தி ஏற்பட்டால் மட்டுமே பணிவழங்கப்படும்,  மறுக்கவும் அவருக்கு அதிகாரம் உண்டு.

14.கேள்வி:- கருணை அடிப்படையில் பணி நியமனம், காலிப் பணியிடமின்மை காரணமாக எனக்கு மறுக்கப்படுகிறது,  ஆனால். வேலைவாய்ப்புத் துறை மூலம் 2 தற்காலிகப் பணியாளர்கள் பணியிலுள்ளார்கள்,
தற்காலிகப் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு. அவ்விடம் நிரந்தரப் பணியிடமாக இருப்பின் தங்களுக்கு பணி வழங்கப்படலாம்.

15.கேள்வி:- திருமணமாகாத அரசு ஊழியரின் சகோதர. சகோதாரிகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படுகிறதா?
திருமணமாகாத அரசு ஊழியரின் சகோதர சகோதரிகளுக்கு கருணை அடிப்படையில் பணிநியமனம் வழங்கப்படுகிறது.

16.கேள்வி:- மருத்துவ இயலாமையின் காரணமாக மருத்துவரீதியில் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெறும் அரசு ஊழியரின் வாரிசுதாரர்களுக்கு. கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கக் கோரும் விண்ணப்பத்துடன். மருத்துவ இயலாமையால் ஓய்வு பெறும் அரசு ஊழியரின் எந்தெந்த சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டும்?
கருணை அடிப்படையில் பணி நியமனம் கோருவதற்கு தேவையான சான்று / ஆவணங்களுடன் கீழ்க்காணும் சான்றுகளையும் சமர்ப்பிக்க வேண்டும்.
1. மருத்துவ இயலாமையின் காரணமாக ஓய்வு பெறும் அரசு ஊழியருக்கு, அவர் மருத்துவ இயலாமையின் காரணமாக ஓய்வு பெறுவதற்கு மருத்துவக் குழுவினரால் அளிக்கப்படும் மருத்துவ குழுச்சான்று (அசல்).
2. அரசு ஊழியர் பணிபுரிந்த அலுவலகத்தில் அவர் எந்நாளிலிருந்து மருத்துவ இயலாமையால் ஒய்வு பெறுகிறார் என்பதற்கு அத்துறைத் தலைவரால் வழங்கப்படும் சான்று.
3. மருத்துவ இயலாமையின் காரணமாக ஓய்வு பெறும் அரசு ஊழியரின் பணிப்பதிவேட்டின் நகல்.

Over 40 per cent plus-2 students get less marks after revaluation

DECCAN CHRONICLE. | A RAGU RAMAN
Jun 22, 2017, 1:35 am IST
Chennai: Many plus-2 students who have applied for revaluation expecting one or two marks more were shocked on Monday as over 40 per cent of the answer scripts had a downward revision of marks this year.

Teachers said many students who applied for revaluation in the key subjects like Mathematics, Biology, Chemistry and Physics have got their score slashed up to eight marks.

The revaluation results may effectively change the rank list for engineering counselling and the counselling for agriculture and BVSc courses.

“After the revaluation, nearly 1,500 answer scripts had fewer marks while 500 answer scripts had an upward revision of marks,” sources said. Answer scripts had an increase of maximum 13 marks, after the revaluation. The remaining answer scripts had no change in their marks.

It was quite a contrast compared to last year when nearly 2,000 students got upward revision of marks. D. Vasundradevi, director of government examinations said, “This year students sought the revaluation for 4,000 answer scripts. After the revaluation, 2,100 answer scripts had their marks revised.”

But she did not give the numbers of how many students got fewer marks this year. When asked about more students getting fewer marks this year, she said, “During the evaluation, one examiner will correct the answer sheets. In the revaluation, a team of three teachers will reevaluate the paper. So, each answer will be scrutinised thoroughly. We had clearly informed the students that they could get less marks after revaluation.”

The directorate of government examinations had received over 99,000 applications requesting the copy of answer scripts. After seeing their answer scripts students sought the revaluation of 4,000 answer scripts.

Apart from the key subjects, students also applied for revaluation of Tamil, History and Economics answer scripts.

More than 300 students wanted re-totalling of their answer scripts. “In re-totalling, we came to know that many examiners had made blatant errors while counting the page wise marks,” sources said.

It may be recalled that a student who had scored 200 in accountancy subject got only 140 marks as an examiner counted 60 marks less during the evaluation.
முடிஞ்சா பென்ஷன் பணத்தைக் கொடுங்க, முடியாட்டி விஷத்தைக் கொடுங்க.. போராடும் முதியோர்கள்!

இரா.மோகன்
உ.பாண்டி

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டத்தில் உள்ள கிராமம், மாலங்குடி. முற்றிலும் விவசாயத்தை மட்டுமே தொழிலாக நம்பியிருக்கும் வானம்பார்த்த பூமி. இந்தக் கிராமத்திலுள்ள விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த 32 முதியவர்கள், அரசின் முதியோர் உதவித் தொகையைக் (Old Age Pension) கடந்த பல ஆண்டுகளாகப் பெற்றுவந்தனர்.




இந்த நிலையில், இந்தக் கிராமத்துக்கு ஆய்வுக்குச் சென்ற வருவாய்த்துறை அதிகாரிகள், இந்த முதியவர்களில் சிலருக்கு சொந்த வீடு மற்றும் ஆதரிப்போர் இருப்பதாகக் காரணம் கூறி, முதியோர் உதவித் தொகையை ரத்துசெய்தனர்.

இதனால் பாதிக்கப்பட்ட முதியோர்கள் சிலர், இன்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் நடந்த மக்கள் குறை தீர்ப்பு முகாமில் மனு கொடுத்தனர். அந்த மனுவில், "எங்களால் உழைக்க முடியாது. அதனால், வருமானம் ஈட்டவும் முடியாது. எனவே, நிறுத்தப்பட்ட உதவித் தொகையை மீண்டும் வழங்க ஏற்பாடுசெய்யுங்கள். முடியாது என்றால், விஷம் கொடுங்கள்" என்று குறிப்பிட்டிருந்தனர்.



அந்த மனுவை மாவட்ட வருவாய் அலுவலரிடம் கொடுத்துவிட்டு வந்த முதியவர்கள், "எங்கள்ள பல பேர் வாழ்க்கை அரசாங்கம் தர்ற உதவிப் பணத்தை வச்சுதான் ஓடுது. உழைச்சுக் கொடுக்குற அப்பன் ஆத்தாவுக்கே இப்ப உள்ள புள்ளைங்க கஞ்சி ஊத்துறது இல்ல. இந்த நிலையில, நடக்கக்கூட முடியாம கம்பு ஊன்றிக்கிட்டுத் திரியிற எங்கள, எந்தப் புள்ள கவனிக்கப்போகுது. அரசாங்கந்தான் காப்பாத்தணும். கணக்கெடுக்க வந்த அதிகாரிங்க, எங்களுக்கு சொந்த வீடு இருக்குன்னு காரணம் சொல்றாங்க. இப்பவோ அப்பவோனு இழுத்துக்கிட்டு கிடக்குற நாங்க, அந்த வீட்டுல விழுந்துகிடக்கத்தான் முடியும். அந்த வீட்டுனால எங்களுக்கு எப்படி வருமானம் வரும்? டவுன்ல இருந்தாகூட வாடகைக்கு விட்டு பொழைக்கலாம். கிராமத்துல யாரு வாடகைக்கு வரப் போறா. ஏதோ இந்த அரசாங்கம் கொடுக்குற உதவியாலதான் மாத்திரை மருந்துக்குனு செலவழிச்சுக்கிட்டு உசுர கையில பிடிச்சுக்கிட்டு கிடக்குறோம். இப்புடி திடுதிப்புனு வந்து அந்தப் பணமும் இல்லைனு சொன்னா, நாங்க எப்படி வாழ முடியும்? அதனால, 'முடிஞ்சா, ஓ.ஏ.பி பணத்தைக் குடுங்க. முடியாட்டி, விஷத்தைக் கொடுங்க' ன்னு சொல்லி அதிகாரிகிட்ட மனு கொடுத்தோம். மனுவ வாங்கிக்கிட்டு, விசாரிச்சு நடவடிக்கை எடுக்கிறதா சொல்லியிருக்காங்க" என்றனர்.

ஆட்சியின் பெயராலும் அதிகாரத்தின் பெயராலும் ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான பணம் வீணடிக்கப்படுகிறது. அதையெல்லாம் கண்டும் காணாதும் உள்ள அதிகாரிகள், வறுமையில் உழலும் இந்த முதுமையாளர்களின் வயிற்றில் கை வைப்பது ஏன்?
செல்லாத ரூபாய் நோட்டு டிபாசிட் செய்ய வாய்ப்பு !!
வங்கிகள், தபால் நிலையங்கள், தங்கள் வசம் உள்ள, செல்லாத பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை, அடுத்த மாதம், 20க்குள் ரிசர்வ் வங்கியில் டிபாசிட் செய்யலாம்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாட்டில் கறுப்பு பண பதுக்கல், கள்ள நோட்டு புழக்கத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக, கடந்த ஆண்டு நவ., 8ல், செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியானது. மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கையால், அப்போது புழக்கத் தில் இருந்த, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன.

இதையடுத்து, பொதுமக்கள் தங்கள் கைவசம் வைத்திருந்த, பழைய ரூபாய் நோட்டுகளை, வங்கிகள், தபால் நிலையங்களில் டிபாசிட் செய்ய, அவகாசம் வழங்கப்பட்டது. அதே போல், புதிய, 500 - 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டு, புழக்கத்தில் விடப்பட்டன.
மத்திய அரசின்இந்த நடவடிக்கை யால், சில நாட்களுக்கு கடும் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டது. எனினும், புதிய நோட்டுகள் அதிக அளவில் புழக்கத்திற்கு வந்த பின், பணத் தட்டுப் பாடு சீரடைந்தது.

இதையடுத்து, பொதுமக்கள் டிபாசிட் செய்த, பழைய ரூபாய் நோட்டுகளை, டிச., 31வரை, ரிசர்வ் வங்கி களில் டிபாசிட் செய்ய வங்கிகள், தபால் நிலையங் களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அதன் பின், டிபாசிட் செய்யப்பட்ட நோட்டுகளை, வங்கிகள் மற்றும் தபால் நிலையங்கள் தங்கள் வசமே வைத்திருக்க வும் மத்திய அரசுஉத்தரவிட்டது.
இந் நிலையில், பழைய ரூபாய் நோட்டுகளை, ரிசர்வ் வங்கியில் டிபாசிட் செய்ய, வங்கிகள், தபால் நிலையங்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
வங்கிகள், தபால் நிலையங்கள், கூட்டுறவு வங்கிகளில், பொதுமக்கள் டிபாசிட் செய்த, பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை, அருகில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் டிபாசிட் செய்யலாம். அதற்கு ஈடான புதிய ரூபாய் நோட்டுகள், விதிமுறைகளுக்கு உட்பட்டு வழங்கப்படும்.

ஜூலை, 20க்குள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, வங்கிகள், தபால் நிலையங்கள் தங்கள் வசம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கியில் செலுத்தலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முன்கூட்டியே பொதுத் தேர்வு : சிபிஎஸ்இ!!!

2018-19 கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை முன்கூட்டியே நடத்தவுள்ளதாக சிபிஎஸ்இ வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சிபிஎஸ்இ தலைவர் ஆர்.கே. சதுர்வேதி கூறியதாவது, “தற்போதுள்ள நடைமுறைப்படி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 1 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 20 ஆம் தேதி வரை சுமார் 45 நாட்களுக்கு மேல் நடத்தப்படுகின்றன. இதற்கான முடிவுகள் மே மூன்றாம் அல்லது நான்காவது வாரத்தில்தான் அறிவிக்கப்படுகின்றன. இது கோடைகால விடுமுறையின் தொடக்கத்தோடு ஒத்திருக்கிறது. எனவே பல ஆசிரியர்கள் அந்த நேரத்தில் விடுப்புக்குச் செல்கின்றனர். இதன் காரணமாக, மதிப்பீட்டிற்காக ஒப்பந்த ஊழியர்களைப் வைத்து விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறும் சூழல் உள்ளது. இதனால் விடைத்தாள் திருத்தத்தில் தவறுகளும், குழப்பமும் ஏற்படுகிறது.

எனவே தேர்வுகளை முன்கூட்டியே நடத்துவதன் மூலம் அனுபவம் பெற்ற ஆசிரியர்களை வைத்தே விடைத்தாள்களைத் திருத்த முடியும். அதன்படி “பிழை இல்லா மதிப்பீட்டு” முறையைச் செயல்படுத்த முடியும். இதுமட்டுமின்றி சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு இளங்கலை படிப்பில் சேர்வதற்கு இந்த முறை உதவியாக இருக்கும் என்று கூறியுள்ளார். எனவே அடுத்த கல்வியாண்டு முதல் பிப்ரவரி-15 ஆம் தேதி பொதுத்தேர்வினை தொடங்கி ஒரு மாதத்திற்குள் முடிக்கும் வகையில் திட்டமிட்டு வருவதாக சிபிஎஸ்இ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய கல்வி வாரியத்தின் மதிப்பீட்டு முறைகளில் குறிப்பிட்ட மாற்றங்களைக் கொண்டு வர தனி குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் சிபிஎஸ்இ மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இந்த ஆண்டு நடைபெற்ற சிபிஎஸ்இ பொதுத் தேர்வு முடிவில் மறு கூட்டலுக்கு விண்ணப்பித்த பலருக்கும், குறைந்த மதிப்பெண் போடப்பட்டது தெரியவந்தது. அதாவது மாணவர்கள் எடுத்த மதிப்பெண்ணையும் மறு கூட்டலில் போடப்பட்ட மதிப்பெண்ணையும் ஒப்பிடுகையில் 100 முதல் 400 சதவிகிதம் இடைவெளி இருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படுவது எப்படி? சிறப்புக் கட்டுரை - C.P.சரவணன், வழக்குரைஞர்

ஊதியக் குழுவின் பரிந்துரைகள் மட்டுமின்றி, பொதுவாக அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது பற்றிய அரசு விதிகள் மற்றும் அரசாணைகள் பற்றி பார்ப்போம்.

பொதுவான அரசாணைகள்

(அ) ஆண்டுதோறும் வழக்கம்போல் 3% ஊதிய உயர்வு வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. (அடிப்படை விதி 24) (FINANCE (PAY CELL) DEPARTMENT G.O. Ms. No. 234, DATED: 1ST JUNE, 2009)

(ஆ) ஒரு ஊழியர் மீது குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருந்தாலும் கூட ஊதிய உயர்வு வழங்கலாம். (அடிப்படை விதி 24-ன் துணை விதி (8) அரசு கடித.எண் 41533/பணி என்37-9, பணியாளர், நாள் 8.4.1988)

(இ) ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதங்களின் முதல் தேதியில் ஊதிய உயர்வு வழங்கப்படும். FINANCE (PAY CELL) DEPARTMENT G.O. Ms. No. 234, DATED: 1ST JUNE, 2009)

 (ஈ) புதியதாக பணி ஏற்கின்ற அல்லது பதவி உயர்வில் பணி ஏற்கின்ற ஒருவருக்கும் முதல் ஊதிய உயர்வு, இணையான காலாண்டின் துவக்கத்தில் வழங்கப்படும். இவர்கள் விஷயத்தில் ஓராண்டு பணி முடிக்க வேண்டிய அவசியமில்லை. (G.O.Ms.No.41 Finance Dept, Dated 11.1.1977 மற்றும் Govt Letter No.171550அவி173 Finance Dept, Dated 1.10,1991)

(உ) ஊதிய உயர்வு நிலுவை இருப்பின், அதற்கான சான்று கையொப்பமிட்ட நாளிலிருந்து ஓராண்டுக்குள் வழங்கப்பட வேண்டும். தவறின், அடுத்த உயர் அலுவலரின் முன் தணிக்கை பெற வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு மேலும் நிலுவையாக உள்ள இனங்களுக்குத் துறைத் தலைவரின் அனுமதி தேவை. (G.O Ms No.1285, Finance department Dated 11.10.1973 மற்றும் G.O Ms No.349, Finance department, Dated 21.5.1981)

(ஊ) தேர்வுகள் தேர்ச்சி பெறுவதற்காக ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டியிருப்பின், தேர்வுகள் நடந்த கடைசி நாளுக்கு (பிரிவுகளாக நடந்திருப்பின், பிரிவுத் தேர்வு நடந்த கடைசி நாளுக்கு) மறுநாள் முதல் ஊதிய உயர்வு வழங்கப்படும் (அடிப்படை விதி 26(எ)ன் துணை விதி (2)

தற்காலிக மற்றும் தகுதிகாண் பருவத்தினருக்கு ஊதிய உயர்வு

(அ) தற்காலிக ஊழியர்களுக்கும் ஆண்டுதோறும் ஊதிய உயர்வு வழங்கப்படும். ஆனால், அவர் வசிக்கும் பதவியில் தகுதிகாண் பருவக்காலத்தில் தேர்வுகள் ஏதேனும் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தால் முதல் ஊதிய உயர்வு மட்டும் வழங்கப்படும். இரண்டாம் ஊதிய உயர்வு குறிப்பிட்ட அந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர்தான் வழங்கப்படும். (அரசாணை எண். 1087, நிர்வாகத்துறை, நாள் 10.11.1982 அரசாணை எண். 231, P&AR,சி.16383 மற்றும் அரசு க.எண் 35068DOFIP&AR,நாள் 1.1.1994) தற்காலிகமாக பதவி உயர்வு பெற்றவருக்கும் ஆண்டுதோறும் ஊதிய உயர்வு வழங்கலாம். (Govt. Letter. No. 15285/FR.1746, Finance dated. 16.8.1975)

(ஆ) தகுதிகாண் பருவத்தினருக்கு ஆண்டுதோறும் ஊதிய உயர்வு வழங்கப்படும். தகுதிகாண் பருவக் காலத்தில் தேர்வுகள் வரையறை செய்யப்பட்ட பதவிகளுக்கு இரண்டாம் ஊதிய உயர்வு குறிப்பிட்ட அந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர் வழங்கப்படும். தகுதிகாண் பருவம் முடிந்து ஆணை வழங்கிய பின்னர் தான் இரண்டாவது ஊதிய உயர்வு வழங்கப்படவேண்டும் என்பது இனி இல்லை (G.O Ms No. 618, P&A.R., Dated 6.7.1987)

பணி அமர்த்தப்பட்டால், முந்தையப் பணிக்காலம் ஊதிய உயர்வுக்கு சேராது. இருப்பினும் அதே பதவியில் அதே துறையிலோ வேறு துறையிலோ பணி அமர்த்தப்பட்டால் அதே ஊதியம் வழங்குவதுடன் முந்தைய பணிக்காலம் ஊதிய உயர்வுக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். (Govt. Letter. No.76362874, P&AR Dated 27.7.1988)

முன் ஊதிய உயர்வு

(அ) ஒரு குறிப்பிட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றால் முன் ஊதிய உயர்வு வழங்கலாம் என குறிப்பான அரசாணை உள்ள பதவிகளுக்கு மட்டுமே, முன் ஊதிய உயர்வு வழங்கலாம்.

(ஆ) பணிக்கு வருவதற்கு முன்னரே குறிப்பிட் அந்த தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், முன் ஊதிய உயர்வு வழங்கலாம். (G.O Ms No.245, P&A.R., Dated 16.3.1985)

(இ) தேசிய அளவில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுபவருக்கு ஒரு முன் ஊதிய உயர்வும், சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெற்றால் இரண்டு ஊதிய உயர்வுகளும் கிடைக்கும் (G.O Ms No.1755, P&A.R., Dated 22.11.1988) மேற்படி ஊதிய உயர்வு போட்டி நடைபெற்ற மறுநாள் முதல் கிடைக்கும். மொத்த பணிக்காலத்தில் இதுபோன்ற காரணத்திற்கு மூன்று ஊதிய உயர்வுகளுக்கு மேல் கிடைக்காது. இருப்பினும் மேற்படி ஊதிய உயர்வு பதவி உயர்வுக்கான ஊதிய நிர்ணயத்திற்குச் சேராது.

(ஈ) சார்நிலை ஊழியர்களுக்கான கணக்குத் தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்கு Number Gazette பதிவுகளைக் கொண்டு முன் ஊதிய உயர்வு வழங்கலாம். (Govt. Letter.No. 52011 iii/873 P&A.R., Dated 13.8.1987)

(உ) உதவியாளர் பதவி உயர்வை துறக்கின்ற தட்டச்சர்/சுருக்கெழுத்து தட்டச்சர் ஆகியோருக்கு முன் ஊதிய உயர்வு கிடைக்காது. (G.O Ms No.10302 அ.வி. 285-2, P&A.R., Dated 4.9.1985)

(ஊ) தண்டனையாக ஊதிய உயர்வு தள்ளிப் போகின்ற நிகழ்வில் ஒருவருக்கு Advance Increment பெறுவதற்கான தகுதி கிடைத்தால் அதுவும் வழங்கப்பட வேண்டும். (Govt. Letter No. 28857 FR.177-1, P&A.R. dated 29.4.77)

பதவி இறக்கம் செய்யப்பட்டு விடுப்பில் சென்றால் ஊதிய உயர்வு

ஒருவர் பதவி இறக்கம் செய்யப்பட்டு விடுப்பில் சென்று விடுப்பு முடிந்து மீண்டும் அதே பதவியில் சேர்ந்தால் விடுப்புக்காலம் உயர் பதவியின் ஆண்டு ஊதிய உயர்வுக்கு சேரும் (24.3.1988 வரை விடுப்புக்காலம் பதவி உயர்வுக்கு சேராது என்று விதிகள் இருந்தன) (G.O Ms No.212, P&A.R., Dated 25.3.1988)

குற்றமாக கருதப்பட்ட தற்காலிகப் பணிநீக்க காலம்

 கீழ்நிலைப் பதவியில் பணிபுரிந்த காலம் உயர் பதவிக்கு சேராது

தண்டனைக் காலம் விடுப்புகளை சேர்த்தோ அல்லது நீங்கலாகவோ என தண்டனை வழங்கப்படும் ஆணையில் குறிப்பிட வேண்டும். இருப்பினும், With Cumulative effect-ஆக தள்ளப்படும் ஊதிய உயர்வு எப்போதுமே விடுப்புக்காலம் சேர்த்துதான் இருக்கும். (விதி 24 & அதன் அறிவுரை 2 (b))

தண்டனையாக ஊதிய உயர்வைத் தள்ளிப் போடுதல்

ஊதிய உயர்வை தண்டனையாக கருதி குறிப்பிட்ட காலத்திற்கு தள்ளிப்போடலாம். With Cumulative effect and Without Cumulative effect என இரு வகைகள் உள்ளன.

Without cumulative effect-ல் ஊதிய உயர்வு நிறுத்தப்பட்டால், குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் ஊதிய உயர்வு நிறுத்தப்பட்டு தண்டனைக்காலம் முடிவுற்றதும் நிறுத்தப்பட்ட ஊதிய உயர்வு வழங்கப்படும்.

With Cumulative effect-ல் தண்டனையாக நிறுத்தப்பட்ட ஊதிய உயர்வின் இழப்பு பணிக்காலம் முழுவதும் இருக்கும். தண்டனையாக நிறுத்தப்பட்டது மீண்டும் கிடைக்காது.

இதுவன்றி ஊதிய உயர்வு தள்ளிப் போகும் காலத்தில் விடுப்பு அனுபவித்தால் இணையான காலத்திற்கு ஊதிய உயர்வு தள்ளிப் போகும்.

ஒருவர் மீது ஒழுங்கு நடவடிக்கை நிலுவையிலிருப்பினும், ஊதிய உயர்வு வழங்கலாம். (Rule.6 under FR) ஆணை வழங்குதலை எதிர்பார்த்து ஊதிய உயர்வே தராமல் இருக்கக் கூடாது. ஆண்டு ஊதிய உயர்வு தள்ளிப் போகும் ஆணை வழங்கப்பட்டால், ஆனைக்குப் பின்னர் எதிர்வருகின்ற முதல் ஊதிய உயர்வு தள்ளிப் போகும். ஆணை வழங்கப்பட இருக்கின்றது என எதிர்பார்த்து ஊதிய உயர்வே தராமல் இருக்க முடியாது. (அடிப்படை விதி 24)

ஊதிய உயர்வு திரள்கின்ற நாளன்று விடுப்பிலிருந்தால்

ஊதிய உயர்வு திரள்கின்ற நாளன்று விடுப்பில் இருந்தால் (LLP Without M.C. தவிர) ஊதிய உயர்வின் நிதிப்பயன் விடுப்பு முடிந்து பணியேற்ற உடன் வழக்கமான ஊதிய நாள் முதல் கிடைக்கும். நிதிப்பயன் தள்ளிப் போகாது. விடுப்பு என்பது எல்லா விடுப்பும் சேரும், LLP Without MC-ல் இருந்தால் விடுப்பு முடிந்து சேர்ந்த பிறகுதான் அனுமதிக்க முடியும். (Govt Letter No.48747/FRDOI/93-9, dated 30.5.1994) (G.O.Ms.No 90 P&AR, Dated 28.3.95)

பணிநீக்கப்பட்டு மீண்டும் பணி அமர்த்தப்பட்டால் ஊதிய உயர்வு

(அ) தகுதிகாண் பருவம் முடித்தவர் பணிநீக்கம் செய்யப்பட்டு மீண்டும் பணி அமர்த்தப்பட்டால், அவர் பணிநீக்கத்திற்கு முன்னர் பெற்று வந்த ஊதியமே பெறலாம். அத்துடன் முந்தைய பணிக்காலமும், ஊதிய உயர்வுக்குக் கணக்கிடப்படும் (G.O.Ms.No.400 P&AR, Dated 7.4.1988) இதனை சாதாரணமாக ஊதியம் நிர்ணயம் செய்யும் அலுவலரே வழங்கலாம் - (Govt Letter no.44316/86-4. P&AR, Dated 29.8.1986)

(ஆ) இடைப்பட்ட பணி நீக்கக் காலம் Condone செய்யப்பட வேண்டிய தேவையில்லை (Govet Letter No.44318/86-4, Finance Department, Dated 29.8.1986)

(இ) தகுதிகாண் பருவக் காலத்தில் ஒருவருக்கு 1.4.1988 அன்று ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும். ஆனால், குறிப்பிட்ட தேர்வு தேறாத காரணத்தால் 1.4.1988 ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. 1.4.1989 மற்றும் 1.4.1990 ஊதிய உயர்வும் வழங்கப்படவில்லை. இவர் 18.9.1990 அன்று நடைபெற்ற தேர்வில்தான் தேர்ச்சி பெறுகின்றார். இவருக்கு 1988, 1989, 1990 ஆகிய மூன்று ஊதிய உயர்வுகளும் சேர்ந்து 17.9.1990 அன்று ஒரு சேர வழங்கப்படும் என்று Rule of 28 of State and Subordinate Service Rules கூறுகிறது. இதனால் இவருக்கு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. நிரந்தரமாக Cumulative நிதி இழப்பு ஏற்படவில்லை.

(ஈ) தகுதிகாண் பருவக்காலத்தில் பயிற்சி முடிக்கவேண்டிய இளநிலை உதவியாளர்களுக்கு இரண்டாவது ஊதிய உயர்வு அப்பயிற்சி முடிந்த பின்னர் தான் வழங்கப்பட வேண்டும். அலுவலக நடைமுறை காரணமாக பயிற்சிக்கு அனுப்புவது தாமதப்பட்டால், அரசின் ஆணை பெற்று விதிகளைத் தளர்த்தி வழக்கமான நாளிலேயே ஊதிய உயர்வு வழங்கலாம். (Govt Letter No.6888/90-3, P&AR Dated 18.4.1990 மற்றும் G.O.Ms No. 71720 பணி-பி/92-1, P&AR Dated, 2.12.1992)

(உ) ஒரு பதவிக்கு பணி அமர்வு செய்வதற்கான தகுதிகள் அனைத்தும் ஒருவர் பெற்றிருக்கவேண்டும். ஏதேனும் ஒரு தகுதி குறைவாக இருந்தாலும் அவருக்கு ஊதிய உயர்வே கிடைக்காது. (Govt Letter No.16599A/FRI/74-3 Finance Dept, dated 21.3.1975 & G.O.Ms No.41, Finance Dept, Dated 11.1.1977)

(ஊ) பணி இறக்கம் பெறுவதைத் தொடர்ந்து ஒருவர் விடுப்பில் செல்வதால் விடுப்பு முடிந்து மீண்டும் பதவி உயர்வு பெற்று அதே உயர் பதவியில் சேர்ந்தால் விடுப்புக் காலத்திற்கும் ஊதிய உயர்வு கிடைக்கும். அதாவது தள்ளிப் போகாது (Effective from 25.388) G.O.Ms.No.212, P&A.R., dated 25.388)

தட்டச்சர் சுருக்கெழுத்து தட்டச்சர்கள்

முதல் ஊதிய உயர்வு மட்டும் வழங்கலாம். இரண்டாம் உதிய உயர்வு தமிழ் தட்டச்சு சுருக்கெழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர்தான் வழங்கப்படும்.

ஊதிய விகிதத்தில் அதிகபட்சம் பெற்றவருக்கு ஊதிய உயர்வு

1.1.96 முதல் (நிதிப்பயன்1.9.1998) ஒரு ஊதிய வீதத்தில் அதிக பட்சம் பெற்றுவிட்ட ஒருவருக்கு இரண்டு ஆண்டுக்கு ஒரு முறைதான் ஊதிய உயர்வு கிடைக்கும் (GO.Ms No. 483, Finance (Pay commission) Dated 8.9.1998)

ஊதிய உயர்வுக்கு சேரும் காலம் –

பணியேற்பிடைக்காலம் FR 26(d)
அயல் பணி FR-26(d)
உயர்நிலைப் பதவியின் பணிபுரிந்த காலம் கீழ்நிலைப் பகுதிக்கு சேரும் FR26(e))
பயிற்சிக்கு சென்ற காலம் - (GO.Ms.No.370, P&ARdL26689)– அனைத்து விடுப்புகள்-(FR2660)
மருத்துவச் சான்றின் பேரில் ஊதியமில்லா விடுப்பு - (FR 26 (bb)


 ஊதிய உயர்வுக்கு சேராத காலம்

மருத்துவச் சான்று அல்லாத ஊதியமில்லாத விடுப்புFR26(bb)
அனுமதித்ததற்கும் அதிகமாக எடுக்கப்பட்ட வரன்முறை செய்யாத விடுப்புக்காலம்
C.P. சரவணன், வழக்கறிஞர்.  9840052475

செல்போன் பேசியபடி வாகனம் இயக்கினால் ஓட்டுநர்உரிமம் நிரந்தரமாக ரத்து: தமிழக அரசு முடிவு

செல்போன் பேசியபடி வாகனம் இயக்கும் நபர்களின் ஓட்டுநர் உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்யலாம் என்று தமிழக அரசு அதிரடி முடிவெடுத்துள்ளது.

போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையிலான ஆய்வுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் ஹெல்மெட் அணியாவிட்டால் விழிப்புணர்வு பயிற்சியுடன் அபராதம் வசூலிக்க வேண்டும்என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். ஹெல்மெட் அணியாமல் சென்றால் உரிய அபராதத்தை வசூலிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினாலோ, சிவப்பு விளக்கை தாண்டினாலோ, அதிவேகமாக வாகனத்தை இயக்கினாலோ ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யலாம்.செல்போன் பேசியபடி வாகனம் இயக்கும் நபர்களின் ஓட்டுநர் உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்யலாம் என்று தமிழக அரசு அதரடி முடிவெடுத்துள்ளது. சோதனை அலுவலர்கள் ஆய்வின் போது அசல் உரிமத்தை வாகன ஓட்டிகள் காண்பிக்க வேண்டும் என்றும் ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில், 346 மருத்துவமனைகள் முறைகேடு: தமிழக அரசு ஒப்புதல்!


தமிழகம் முழுவதும் மருத்துமனைகளில் நடைமுறைப்படுத்தப்படும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில், 346 மருத்துவமனைகள் முறைகேட்டில் ஈடுபடுவதாக தமிழக அரசு உயர் நீதிமன்ற கிளையில் தெரிவித்துள்ளது.

மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் பொது நல மனு ஒன்றினை தாக்கல் செய்தார். அதில் அவர் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்றும், இதனை கண்காணிக்க குழுக்கள் அமைக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டிருந்தாலும், அவை எதுவும் செயல்பாட்டிலில்லையென்றும் ரமேஷ் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.

மேலும் அரசின் உத்தரவின்படி நடத்த வேண்டிய மருத்துவ முகாம்கள் கூட சரியாக நடத்தபடுவது இல்லை என்றும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது:

தமிழகம் முழுவதும் மருத்துமனைகளில் நடைமுறைப்படுத்தப்படும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில், 346 மருத்துவமனைகள் முறைகேட்டில் ஈடுபடுகின்றன. இது தொடர்பாக நடந்த விசாரணையில் 16 மருத்துவமனைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 117 மருத்துவமனைகளுக்கு அவற்றின் செயல்பாடு குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் ஏற்கனவே கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

இவ்வாறு தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு ஜிஎஸ்டி வரி? முழு விவரம் இதோ

மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு மறைமுக வரி விதிப்புகளை ஒழித்துவிட்டு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) நாடு முழுக்க ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

ஜிஎஸ்டி வரி விதிப்பால், விலைவாசி ஏறுமா, குறையுமா என்ற விவாதங்கள் ஒருபக்கம் நடந்து வருகின்றன. ஒட்டுமொத்தமாக பார்த்தால், விலைவாசி சிறிது இறங்க வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஒவ்வொரு பொருளிலும் எப்படியெல்லாம் விலைவாசி மாற்றம் இருக்கப்போகிறது என்பதை அறிந்துகொள்ள அந்தந்த பொருட்கள் மீதான வரி விதிப்பு குறித்து தெரிந்திருப்பது நல்லது. இதுகுறித்த ஒரு விளக்கம்.

வரி இல்லை

குங்குமம்-பொட்டு, ஸ்டாம்புகள், நீதித்துறை சார்ந்த பேப்பர்கள், பிரிண்ட் செய்யப்பட்ட புத்தகங்கள், செய்தித்தாள்கள், கண்ணாடி வளையல்கள், கைத்தறி, மெட்ரோ பயணம், லோக்கல் ரயில், ஃப்ரெஷ் இறைச்சி, பதப்படுத்தப்படாத மீன், பதப்படுத்தப்படாத சிக்கன், முட்டைகள், பழங்கள்-காய்கறிகள், உப்பு, மோர், பால், தயிர், பிரெட், மாவு, பருப்பு, தேன்.

இந்த பொருட்களுக்கு வரி விலக்கு உள்ளது.

5 சதவீத வரி

கிரீம்-மில்க் பவுடர், பன்னீர், பீட்சா பிரெட், ரஸ்க், சபுதானா, டீ, காபி, மசாலா பொருட்கள், மருந்துகள், ஸ்டென்ட், கேன், பீட் சுகர், ஃலைப் போட்டுகள், மண்ணெண்ணை, நிலக்கரி.

12 சதவீத வரி

பிசினஸ் கிளாஸ் விமான டிக்கெட்டுகள், ஏசி வசதியில்லாத ஹோட்டல்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், பணி ஒப்பந்தங்கள் ஆகியவற்றுக்கு 12 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.

18 சதவீத வரி

ஃப்ளேவர் செய்யப்பட்ட சுகர், பாஸ்தா, கார்ன்பிளேக்ஸ், பேஸ்ட்ரிஸ்-கேக்குகள், பதப்படுத்தப்பட்ட காய்கறிகள், ஜாம்-சாஸ், சூப், இன்ஸ்டன்ட் உணவு மிக்ஸ், ஐஸ் கிரீம், மினரல் வாட்டர், எல்பிஜி ஸ்டவ், ஹெல்மெட், டிஷ்யூ பேப்பர், மாதவிடாய்க்கான நாப்கின்கள், என்வலோப் கவர்கள், நோட்டு புத்தகங்கள், இரும்பு பொருட்கள், பிரிண்ட் சர்க்கியூட்கள், கேமரா, ஸ்பீக்கர்கள், மானிட்டர்கள், எலக்ட்ரானிக் பொம்மைகள்.

28 சதவீத வரி

சுயிங்கம், சாக்லேட், வேஃப்ல்ஸ், வேஃபர்ஸ், பான் மசாலா, குளிர்பானங்கள், பெயிண்ட், ஷேவிங் கிரீம்கள், வாசனை திரவியங்கள், ஆப்டர் ஷேவ் லோஷன்கள், ஷாம்பு, ஹேர்டை, சன்ஸ்க்ரீன், வால்பேப்பர், டைல்ஸ், வாட்டர் ஹீட்டர், டிஷ்வாஷர், எடை பார்ப்பு மெஷின், வாஷிங் மெஷின், ஏடிஎம், வேக்யூம் கிளீனர், ஹேர்கிளிப், ஆட்டோமொபைல்ஸ், மோட்டார் சைக்கிள்கள்.

சேவைகளுக்கான வரி

பல்வேறு சேவைகளுக்கும் வரி விகிதம் மாறுபடும். மதுபான லைசென்ஸ் வைத்துள்ள ஏசி ஹோட்டல்கள், டெலிகாம் சேவைகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் (ஐடி), நிதி சேவைகள், பிராண்டட் கார்மெண்ட்ஸ் ஆகியதுறைகள் மீது 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது.

28 சதவீத வரி

ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள், ரேஸ்கிளப் பெட்டிங், சினிமா டிக்கெட்டுகள் ஆகியவற்றுக்கு 28 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஸ்டார் ஹோட்டல்களிலுள்ள ஏசி ரெஸ்டாரண்டுகள் உட்பட அனைத்து வகை ரெஸ்டாரண்டுகளுக்கும், ஒருநாள் வாடகை ரூ.75000 வரையிலான ஹோட்டல் அறைகளுக்கும் வரி 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதை மேற்கிந்திய ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரண்ட் சங்கம் வரவேற்றுள்ளது.

Flight from Kuwait leaves behind half of luggage

Flight from Kuwait leaves behind half of luggage Jan 9, 2025, 03.55 AM IST  Chennai: Many Air India Express passengers from Kuwait were in f...