சவுதியில் குடும்பத்துடன் வசிக்கும் வெளிநாட்டினருக்கு வரி
ரியாத் : சவுதி அரேபியாவில் குடும்பத்துடன் வசிக்கும் வெளிநாட்டினருக்கு புதிய வரி விதிக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய 41 லட்சம் இந்தியர்கள் சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களில் பலர் குடும்பத்தையும் உடன் அழைத்துச் சென்றுள்ளனர்.இந்நிலையில் ஜூலை 1 ம் தேதி முதல் வெளிநாட்டினருக்கு புதிய வரி விதிக்கப்படுவதாக சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய கட்டணத்திற்கு குடும்ப வரி என சவுதி அரசு பெயரிட்டுள்ளது. இதன்படி, சவுதியில் வேலை செய்யும் வெளிநாட்டடினருடன் தங்கி இருக்கும் ஒவ்வொரு நபருக்கும் தலா 100 ரியால் (இந்திய மதிப்பில் ரூ.1700) மாதம் வரியாக செலுத்த வேண்டும். இதனால் எங்கு பணிபுரியும் இந்திய தொழிலாளர்களுக்கு கூடுதல் நிதி சுமை ஏற்படும்.
இதனால் சவுதி அரேபியாவில் வசிக்கும் இந்தியர்கள் பலர் தங்கள் குடும்பத்தை இந்தியாவிற்கு திருப்பி அனுப்ப திட்டமிட்டுள்ளனர். 100 ரியால் என்ற அளவிலான இந்த புதிய வரி 2020 ம் ஆண்டு வரை தொடரும் எனவும், அதன் பிறகு நபர் ஒருவருக்கு 400 ரியால் (இந்திய மதிப்பில் ரூ.6900) வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Dailyhunt
No comments:
Post a Comment