Thursday, June 29, 2017

குட்கா, பான் மசாலா விற்பனையை அனுமதிக்க லஞ்சம்: மத்திய சுகாதார மந்திரி அவசர ஆலோசனை


குட்கா, பான் மசாலா விற்பனையை அனுமதிக்க கோடிக்கணக்கான பணம் லஞ்சமாக கொடுக்கப்பட்ட விவகாரம் குறித்து டெல்லியில் மத்திய சுகாதார மந்திரி ஜே.பி.நட்டா நேற்று அவசர ஆலோசனை நடத்தினார்.
ஜூன் 29, 2017, 05:30 AM

புதுடெல்லி,

குட்கா, பான் மசாலா விற்பனையை அனுமதிக்க கோடிக்கணக்கான பணம் லஞ்சமாக கொடுக்கப்பட்ட விவகாரம் குறித்து டெல்லியில் மத்திய சுகாதார மந்திரி ஜே.பி.நட்டா நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது இந்த பிரச்சினை தொடர்பாக விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு கடிதம் எழுதுவது பற்றி ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறதுகுட்கா, பான் மசாலா போன்ற போதைப்பொருட்களை தடை செய்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தீர்ப்பு வழங்கியது.

இதைத்தொடர்ந்து மத்திய அரசு, நாடு முழுவதும் குட்கா, பான் மசாலா, ஜர்தா மற்றும் புகையிலை அடங்கிய வாசனை பாக்கு ஆகியவற்றின் விற்பனைக்கு தடை விதித்து அறிவிக்கை வெளியிட்டது. மேலும், குட்கா போன்ற போதைப் பொருட்களின் தயாரிப்பு, விற்பனை ஆகியவற்றுக்கு தடை விதிக்க அறிவுறுத்தி அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது.இந்த நிலையில், தமிழகத்தில் தடையை மீறி குட்கா, பான் மசாலா விற்கப்படுவதாக வந்த புகார்களை தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சில நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது ஒரு நிறுவனத்தில் குட்கா, பான் மசாலா விற்பனை தொடர்பான ஆவணங்களை கைப்பற்றினர். அவற்றின் மூலம் இந்த பொருட்களை விற்பதற்கு அனுமதிக்க உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

குட்கா தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரான மாதவராவ் என்பவர், 2015–2016–ம் ஆண்டு மட்டும் ஒரு அமைச்சர் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுக்கு ரூ.40 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக வாக்குமூலம் அளித்தார்.இந்த லஞ்ச விவகாரம் தொடர்பான ஆவணங்களை, மேல் நடவடிக்கைக்காக தமிழக ஊழல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் வருமான வரித்துறையினர் வழங்கினார்கள். இந்த நிலையில், குட்கா, பான் மசாலா விற்பனை விவகாரத்தில் யார்–யாருக்கு எவ்வளவு பணம் லஞ்சமாக கொடுக்கப்பட்டது என்ற விவரத்தை ஆங்கில செய்திச் சேனல் ஒன்று நேற்று முன்தினம் ஒளிபரப்பியது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த விவகாரம் நேற்று தமிழக சட்டசபையிலும் எதிரொலித்தது. குட்கா விவகாரம் பற்றி பேச அனுமதி மறுக்கப்பட்டதால் தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா ஆகியவை தமிழகத்தில் தடையின்றி விற்பனை செய்யப்பட்டது குறித்து மத்திய சுகாதார மந்திரி ஜே.பி.நட்டா தனது துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளுடன் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது, தமிழகத்தில் தடையை மீறி குட்கா, பான் மசாலா போன்ற போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது குறித்து மந்திரி ஜே.பி.நட்டா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.

கூட்டத்தில் பேசிய அதிகாரிகள், தமிழ்நாட்டில் தடையை மீறி குட்கா, பான் மசாலா விற்கப்படுவது குறித்து மாநில அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர்.மேலும் இந்த விவகாரம் தொடர்பாக உரிய விளக்கம் கேட்டு மத்திய அரசின் சார்பில் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்புவது பற்றியும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இது தவிர, குட்கா, பான் மசாலா விற்பனையை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தி மற்ற மாநிலங்களுக்கும் கடிதம் எழுத முடிவு செய்யப்பட்டதாகவும் தெரிகிறது.

No comments:

Post a Comment

PhD aspirants demand online availability status of guides

PhD aspirants demand online availability status of guides Ardhra.Nair@timesofindia.com  26.11.2024 Pune : Citing difficulties in application...