Thursday, June 29, 2017

மும்பையில் தொடரும் கனமழை

பதிவு செய்த நாள்28ஜூன்
2017
22:20




மும்பை: மும்பையில் பெய்து வரும் கனமழையால், மும்பை மற்றும் புறநகர் ரயில் சேவை, நேற்று கடுமையாக பாதிக்கப்பட்டது. 'நாளை மறுநாள் வரை கனமழை தொடரும்' என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

பா.ஜ.,வைச் சேர்ந்த, முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கும், மஹாராஷ்டிராவின் பல பகுதிகளில், பரவலாக கனமழை பெய்து வருகிறது. தலைநகர் மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில், தொடர்ந்து கனமழை பெய்கிறது. ரயில்வே தண்டவாளங்களில் மழைநீர் தேங்கியிருப்பதால், புறநகர் ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. மும்பை நகரின் முக்கிய பகுதியான, கொலாபாவில் நேற்று, 63 மி.மீ., மற்றும் சாந்தாகுரூசில், 51 மி.மீ., மழை பெய்தது. இதனால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பலத்த காற்றுடன் பெய்த கனமழையால், சாலையில் சென்று கொண்டிருந்த கார்கள் மீது, பெரிய மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால், சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.சென்டர் மற்றும் ஹார்பர் லைன் புறநகர் ரயில் நிலையங்களில், தண்டவாளத்தில் மண் மற்றும் நீர் நிரம்பி காணப்பட்டதால், புறநகர் ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. இதனால், ரயில் நிலையங்களில் பயணியர் கூட்டம் அலை மோதியது.

'மும்பை மட்டுமின்றி, கொங்கன் மண்டலத்தில், நாளை மறுநாள் வரை, பலத்த மழைப்பொழிவு காணப்படும்' என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அரபிக் கடலில் மிக உயரமான அலைகள் எழுவதால், கடற்கரைக்கு செல்லும் பொதுமக்கள் கவனமாக இருக்கும்படி எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.

No comments:

Post a Comment

Tamil Nadu Government Servants (Conditions of Service) Act, 2016 TAMILNADU India Tamil Nadu Government Servants (Conditions of Service) Act,...