சென்னையில் எம்.பி.,க்கள் ஓட்டு போட தேர்தல் கமிஷன் அனுமதி அவசியம்
பதிவு செய்த நாள்27ஜூன்
2017
23:14
தமிழகத்தில், ஓட்டு போட விரும்பும் எம்.பி.,க்கள், தேர்தல் கமிஷனிடம், முறையாக விண்ணப்பிக்க வேண்டும்.ஜனாதிபதி தேர்தல், ஜூலை, 17ல் நடைபெற உள்ளது. தமிழகத்தில், 233 எம்.எல்.ஏ.,க்கள், 39 லோக்சபா எம்.பி.,க்கள், 18 ராஜ்யசபா எம்.பி.,க்கள், ஓட்டளிக்க தகுதி டையவர்கள்.தமிழக எம்.எல்.ஏ.,க்கள், சட்டசபை வளாகத்தில், ஓட்டளிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. எம்.பி.,க்கள், லோக்சபா மற்றும் ராஜ்ய சபாவில் ஓட்டளிக்க வேண்டும். தமிழக எம்.பி.,க்கள் விரும்பினால், சென்னையில், சட்டசபை வளாகத்தில் ஓட்டளிக்கலாம். அவ்வாறு ஓட்டளிக்க விரும்புவோர், ஓட்டுப்பதிவிற்கு, 10 நாட்களுக்கு முன், தேர்தல் கமிஷனிடம், தமிழகத்தில் ஓட்டளிக்க விரும்புவதை தெரிவிக்க வேண்டும்.எம்.எல்.ஏ.,க் களும், வேறு இடங்களில் ஓட்டளிக்க விரும்பினால், அந்த விபரத்தை, தேர்தல் கமிஷனுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
யாரும் விருப்ப கடிதம் கொடுக்காவிட்டால், தேர்தல் கமிஷனர் நிர்ணயிக்கும் இடங்களில், அவர்கள் ஓட்டளிக்க வேண்டும்.சட்டசபை வளாகத்தில், ஓட்டுப்பதிவு நடைபெறுவதற்காக, தயார் செய்யப்பட்டுள்ள அறையை, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, நேற்று பார்வையிட்டார். பின், உதவி தேர்தல் அலுவலர்களான, சட்டசபை பொறுப்பு செயலர் பூபதி மற்றும் அலுவலர்களுடன், தேர்தல் ஏற்பாடு குறித்து, ஆலோசனை நடத்தினார்.
- நமது நிருபர் -
No comments:
Post a Comment