Thursday, June 29, 2017

மருத்துவ கவுன்சிலை நிர்வகிக்க ஓய்வு பெற்ற நீதிபதி நியமனம்

பதிவு செய்த நாள்28ஜூன்
2017
23:06


சென்னை: தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலை நிர்வகிக்க, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியை, சென்னை உயர் நீதிமன்றம் நியமித்துள்ளது.

தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட, நிர்வாகக் குழுவின் பதவிக்காலம், ஜூன், 19ல் முடிந்தது. அதனால், மருத்துவ கவுன்சிலுக்கு, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியை, நிர்வாகியாக நியமிக்கக் கோரி, கவுன்சிலின் பொறுப்பு தலைவராக உள்ள, டாக்டர் சடகோபன் மனு தாக்கல் செய்தார். மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் வில்சன், ''நிர்வாகக் குழுவுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது; கவுன்சில் உறுப்பினர்கள் மத்தியில் ஒத்துழைப்பு இல்லாமல், அமைதியாக தேர்தல் நடத்த முடியாது. தேர்ந்தெடுக்கப்பட்ட குழு அமையும் வரை, மருத்துவ கவுன்சிலுக்கு நிர்வாகியை நியமிக்க வேண்டும்,'' என்றார்

மனுவை விசாரித்த, நீதிபதி, எம்.துரைசாமி பிறப்பித்த உத்தரவு:தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலுக்கு தேர்தல் நடத்தவும், அன்றாட நடவடிக்கைகளை நிர்வகிக்கவும், ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்கலாம் என, இருதரப்பு வழக்கறிஞர்கள் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞரும்ஒப்புக் கொண்டனர். எனவே, ஓய்வு பெற்ற நீதிபதி, கே.வெங்கட்ராமன், மருத்துவ கவுன்சில் நிர்வாகியாக நியமிக்கப்படுகிறார்.கவுன்சிலுக்குநிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, பதவியேற்கும் வரை, ஓய்வு பெற்ற நீதிபதி, நிர்வாகியாக செயல்படுவார்.காசோலையில் கையெழுத்திடும் அதிகாரம், சான்றி தழ்களில் கையெழுத்திடும் அதிகாரம், நிர்வாகிக்கு உண்டு. கவுன்சிலுக்கு, மூன்று மாதங்களுக்குள் தேர்தலை நடத்த, நிர்வாகி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.

No comments:

Post a Comment

Tamil Nadu Government Servants (Conditions of Service) Act, 2016 TAMILNADU India Tamil Nadu Government Servants (Conditions of Service) Act,...