Thursday, June 29, 2017

ஜே.இ.இ., நுழைவு தேர்வுக்கு அரசு தடை :பி.ஆர்க்., சேர மாணவர்களுக்கு சிக்கல்
தமிழகத்தில், கவுன்சிலிங் மூலம், பி.ஆர்க்., படிப்பில் சேர, மத்திய அரசின், ஜே.இ.இ., நுழைவு தேர்வுக்கு, தமிழக அரசு தடை விதித்துள்ளது.





தமிழகத்தில், அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 53 கல்லுாரிகளில், பி.ஆர்க்., படிப்பிற்கு, கவுன்சிலிங் மூலம் மாணவர்கள் சேர்க்கப்படு கின்றனர். மொத்தம், 2,720 இடங்களுக்கு கவுன்சிலிங் நடக்கிறது. தமிழகத்தில், 2,009 பேர் மட்டுமே, 'நாட்டா' என்ற தேசிய அளவிலான, ஆர்க்கிடெக்சர் நுழைவு தேர்வில் தகுதி பெற்றுள்ளனர்.

இவர்கள் அனைவரும், பி.ஆர்க்., சேருவர் என, கூற முடியாது. அதனால், பி.ஆர்க்., படிப்பில், 1,000 இடங்கள் வரை காலியாக வாய்ப்புள்ளது. இந்நிலையில், பி.ஆர்க்., இடங்களை முழுவ தும் நிரப்பவும், விருப் பமுள்ள தகுதியான மாணவர்களுக்கு, பி.ஆர்க்., படிக்க வாய்ப்பு அளிக்கவும், சில சலுகைகளை, 'ஆர்க்கிடெக்சர்' கவுன்சில் வழங்கி உள்ளது.

அதன்படி, ஜே.இ.இ., என்ற, மத்திய அரசின் நுழைவு தேர்வில், பி.ஆர்க்., மற்றும் பி.பிளான்படிப்புக்கான தகுதி மதிப்பெண் பெற்றவர்கள், 'நாட்டா' நுழைவுத் தேர்வுக்கு இணையான தகுதி பெற்றதாக கருதப் படும். அதனால், ஜே.இ.இ., தேர்வில் தகுதி பெற்ற வர்களை, பி.ஆர்க்., படிப்பில் சேர்க்கலாம். அதே போல, 2016, 'நாட்டா' தேர்வில் தகுதி பெற்றவர் களும், இந்த ஆண்டு, பி.ஆர்க்., படிப்பில் சேரலாம் என, சலுகை தரப்பட்டுள்ளது.

ஆனால், 'நாட்டா தேர்வு அடிப்படையில் மட்டுமே, மாணவர்கள் சேர்க்கப்படுவர்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது. பி.ஆர்க்., கவுன்சிலிங்கை நடத் தும், அண்ணா பல்கலையின் கவுன்சிலிங் கமிட்டி வெளியிட்ட அறிவிப்பில், ஜே.இ.இ., தேர்வை தகுதியாகசேர்க்கவில்லை.

இதுகுறித்து, ஜே.இ.இ., தகுதி பெற்ற மாணவர்கள், கவுன்சிலிங் கமிட்டியை அணுகியபோது, 'ஜே.இ.இ., தேர்வை, தமிழக அரசு அங்கீகரிக்கவில்லை. அதனால், நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்ந்து கொள்ளுங் கள்; கவுன்சிலிங்கில் சேர அனுமதிக்கவில்லை' என, கூறியுள்ளனர்.

எனவே, 'நாட்டா'வை விட அதிக தரம் உடைய  ஜே.இ.இ., தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள், ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் நன்கொடை கொடுத்து, நிர்வாக ஒதுக்கீட்டில், பி.ஆர்க்., படிப்பில் சேர வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

இது குறித்து, மாணவர்கள், பெற்றோர் கூறுகை யில், 'தமிழக அரசின், அரசியல் பிரச்னையால், மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்கும் வகையில், இன்ஜி., கவுன்சிலிங் கமிட்டி செயல்படுகிறது. 'கல்லுாரிகளில் போதுமான இடங்கள் இருந்தும், உண்மையாக தகுதி பெற்ற மாணவர்களால், பி.ஆர்க்., படிப்பில் சேர முடியவில்லை' என்றனர்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

Tamil Nadu Government Servants (Conditions of Service) Act, 2016 TAMILNADU India Tamil Nadu Government Servants (Conditions of Service) Act,...