பெரிய நிறுவனங்களை கதிகலங்க வைக்கும் ‘கோல்டன் ஐ’!
June 29, 2017
ஆயிரக்கணக்கான கணினிகள் தினந்தோறும் ரேன்சம்வேர் வைரஸால் தாக்கப்படுகின்றன. பெரிய நிறுவனங்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்படுகின்றன. சில மாதங்களுக்கு முன் இங்கிலாந்தில் ஒரு பிரபல மருத்துவமனை ரேன்சம்வேர் தாக்குதலால் மூடப்பட்டது நினைவிருக்கும். இப்போது நிலைமையை மேலும் மோசமாக்க வந்துள்ளது ரேன்சம்வேர் 2.0!
பெட்யா ரேன்சம்வேரின் புதிய திரிபு தான் “கோல்டன் ஐ”. கடந்த செவ்வாய் அன்று உக்ரைனில் உள்ள கீவ் என்ற நகரில் இந்த சைபர் அட்டாக் தொடங்கியது. அங்கிருந்து உக்ரைனில் உள்ள மின்சார வாரியம், விமான நிலையம், அரசு அலுவலகங்கள் என ஒன்றையும் விட்டு வைக்கவில்லை இந்த புதிய ‘கோல்டன் ஐ’. கெர்னோபில் நகரில் அமைந்துள்ள அணு ஆராய்ச்சி நிலையத்தையும் தாக்கியதால் அணு கதிர் வெளியீட்டை கூட ஊழியர்களே கண்கானிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அன்றிலிருந்து இந்த புதிய வைரஸ் உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்தத்து.
ரஷ்யாவிலேயே மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான ரோஸ்னெஃப்ட் இந்த சைபர் தாக்குதலுக்கு உள்ளானது. துறைமுகத்தில் ‘மேயர்ஸ்க்’ என்ற பெயரை கடக்காமல் வந்திருக்க மாட்டோம். உலகிலேயே மிகப்பெரிய ஏற்றுமதி/இறக்குமதி நிறுவனமான டென்மார்க்கை சேர்ந்த இந்த மேயர்ஸ்க், ரேன்சம்வேர் தாக்குதலை தடுக்க தங்களது கணினி நெட்வொர்க் அனைத்தையும் சில நாட்களுக்கு மூட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதுவரை 2 லட்சம் கணினிகள் இந்த புதிய கோல்டன் ஐ ரேன்சம்வேரால் தாக்கப்பட்டுள்ளதாக அறியப்பட்டுள்ளது. இது அடுத்த சில நாட்களில் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை அனைத்தையும் நிகழ்த்த இந்த ‘கோல்டன் ஐ’ வெறும் 44 நாட்களே எடுத்துக்கொண்டது.
ஏற்கனவே இதன் மூலம் பல கோடி பணம் பார்த்துவிட்ட வானாக்ரை, வரும் தினங்களில் மேலும் பல நாடுகளை தாக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதற்கான தீர்வை காணும் வரை இந்த ரேன்சம்வேரின் ஆட்டம் ஓயாது.
No comments:
Post a Comment