Thursday, June 29, 2017

அரசுப் பள்ளி ஆசிரியர்களை விமர்ச்சித்த* *நீதிபதி கிருபாகரன் கருத்துக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு !!

உயர் நீதிமன்ற நீதிபதி  கிருபாகரன் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகளை அரசுப்பள்ளியில் ஏன் சேர்க்க உத்திரவிடக் கூடாது? ஏன் ஆசிரியர் சங்கங்களுக்கு தடை விதிக்க கூடாது என அரசுக்கு கேள்வி எழுப்பினார்.இவரின் கருத்துக்கு சமூக வலைதளங்களில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கடுமைமையான எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். அதில் அவர்கள் இந்தியா ஜனநாயக நாடு என்பதை மறந்து ஆசிரியர்கள் சங்கம் தொடங்க ஏன் தடை விதிக்க கூடாது என்றும் அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் தத்தமது பிள்ளைகளை ஏன் கட்டாயமாக சேர்க்க அரசாணை பிறப்பிக்க கூடாது என்று கேள்வி எழுப்பியுள்ளார்,வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு மற்றும் சில போராட்டங்களால் அப்பாவி மக்கள் தொடுத்த வழக்கு கால் நூற்றாண்டு காலம் முடிக்காமல் தேங்கிக்கிடக்கிறதால் வக்கீல் சங்கம் வைக்க தடை விதிப்பாரா?அரசு வக்கீல்களும் நீதிபதிகளும் தங்கள் பிள்ளைகளை பேரன் பேத்திகளை அரசு பள்ளியில் சேர்க்க தீர்ப்பு வழங்குவாரா?,நீதிமன்றம் மற்றும் நீதியரசர்களுக்கு வழங்கியுள்ள வானாளவிய அதிகாரத்தை பயன்படுத்தி தவறான தீர்ப்புகளை வழங்க கூடாது? நீதி மன்றங்களை கோயில்களுக்கு நிகராகவும் நீதிபதிகளை கடவுளுக்கு நிகராகவும் மக்கள் நினைக்கிறார்கள். நினைக்க வேண்டிய நிலையிலும் உள்ளோம். கர்நாடக நீதிபதி குமாரசாமி தீர்ப்பு வழங்கியது குறித்து நாடே சிரித்தது.நாட்டில் தவறான நிகழ்வுகள் எவ்வளவோ இருக்கின்றன.ஆட்சி செய்பவர்கள் கடவுளாக தங்களை நினைத்துகொள்கின்றனர்.அவர்கள்தான் நாட்டுமக்கள் அழிந்துபோகும் அளவிலான செயல்களைகூட செய்கின்றனர்.நீதிபதிகள் சில கருத்துகளை கூறும்போது குமாரசாமி போல தங்கள் எண்ணத்தில் தோன்றும் கருத்துகளை கூறுகின்றனர்.குறைகள் நீதித்துறையில் தொடங்கி எங்கும் உள்ளது.அரசு பள்ளிகள் சிறப்படையாததற்கு ஆயிரம் காரணங்கள் உள்ளன.அரசே அரசு பள்ளிகளை கேவலமாக நினைக்கின்றது.சரியான வசதிகளை சரிவர செய்து கொடுப்பதில்லை.இன்று வரைக்கூட இன்னும் கழிவறைகள் குடிநீர் வசதிகள் இல்லாத அரசு பள்ளிகள் ஏராளமாக உள்ளன. எப்போதும் காலிப்பணிடங்கள் இருந்துகொண்டேதான் உள்ளன.அவற்றை நிரப்ப ஆயிரம் தடைகள்.நிலை இப்படி இருக்க இன்று நீதிபதி ஒருவர் கூறியுள்ள கருத்து எப்படி ஏற்புடையதாகும்.அரசு தனியார் பள்ளிகளை தொடங்க மிகவும் ஆர்வம் காட்டுகின்றது.அரசியலில் உள்ளவர்கள் ,நீதிபதிகள்,இந்திய ஆட்சிப்பணியில் உள்ளவர்கள்,அரசு அலுவலர்கள் எவரும் 5% கூட அரசுப் பள்ளியில் தன் பிள்ளைகளை சேர்ப்பதில்லை. தனியார் பள்ளியில் உள்ள வசதிகளில் பாதி வசதிகள்கூட இல்லாத அரசு பள்ளியை எப்படி நாடுவார்கள்.58 வயது வரை பணியில் உள்ள அரசு பணியாளர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியம். பணியில் சேர்ந்தவுடன் பதவி போனாலும் எம்.பி, எம்.எல்.ஏ க்களுக்கு நிரந்தர ஓய்வூதியம் என்பது எந்த வகையில் நியாயம் இதை இந்த நீதிபதி கேட்பாரா? அரசு பள்ளிகளை ஆசிரியர்களும் அதிகாரிகளும் தற்போது உயர்த்தி வருகின்றனர். அரசு பள்ளிகளுக்கு வசதிகள் உயர் அதிகாரிகளால் தற்போது படிப்படியாக உருவாக்கப்பட்டு வருகின்றன.இந்த வேளையில் ஆசிரியர்களின் மனதை பாதிக்கும் வகையில் இந்த நீதிபதியின் கேள்விகள் இருப்பது சங்கடத்தை ஏற்படுத்துகிறது.தனியார் வசம் இருந்த டாஸ்மாக் கடைகளை அரசாங்கம் ஏற்றுக் கொண்டது போல தனியார் பள்ளிகளை ஏன் அரசுடமை ஆக்கக் கூடாது என்று கேட்க நீதிபதி க்கு தோன்றவில்லையா? வாக்காளர் பணியில் தொடங்கி மக்கள் தொகை கணக்கெடுப்பு,தேர்தல் பணி , ஆதார் பணி னெ அவ்வப்போது தரப்படும் வேலைகள் அரசுப் பள்ளி ஆசிரியர்களிடம் தான் வந்து சேருகிறது இதற்கு ஏதேனும் தடை விதித்ததா நீதிமன்றம்? ஒவ்வொரு பட்ஜெட்டில் வானவேடிக்கை போல வெளியாகும் பள்ளி கல்வித்துறை அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டதா என்று நீதிமன்றம் கண்காணித்ததா? எல்லாருக்கு கல்வி என்ற பெயரில் பள்ளிக்கே வராத மாணவர்களை எட்டாம் வகுப்பு வரை தேர்ச்சி என்ற சட்டம் உள்ளதே அதனை சரியானது தானா என ஆராய்ந்ததா? தொடக்கக் கல்வியில் பாடத்திட்ட மேம்பாட்டுக்கு வழிவகை செய்ததா நீதிமன்றம் ? புற்றிசல்கள் போல முளைத்த தனியார் பள்ளிகளையும் தரமற்ற ஆசிரியர் பயிற்சி நிறுவனங்ககளை தடை செய்ய நீதிமன்றத்தால் முடியாதா? நாங்கள் நீதிமன்றத்திற்கு தலை வணங்குகிறோம். நாங்கள் அரசின் கட்டளையை ஏற்க தயார்.அரசுப் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க உத்தரவிட்டால் மகிழ்வோடு பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்ப்போம் என சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர்.
*** அரசின் கொத்தடிமைகள் அல்ல ஆசிரியர்களும், ஆசிரியர்களின் குடும்பத்தினரும். ஆசிரியர்கள் பார்க்கும் வேலைக்கு அரசு ஊதியம் தருகிறது. இலவசமாக எதையும் கொடுக்கவில்லை. கல்வி என்பது தனிமனித உரிமை. யார் எங்கு படிக்க வேண்டும் என்பதை சட்டமோ, அரசாங்கமோ, நீதிமன்றமோ முடிவு செய்ய முடியாது.

ஆசிரியர்களின் பிள்ளைகள் அரசாங்கத்திற்கு நேர்ந்து விடப்பட்டவர்களா? அல்லது ஆசிரியர்களின் பிள்ளைகளை அரசு தத்தெடுத்து வளர்க்கப்போகிறதா?

ஆசிரியர்கள் என்ன செய்ய வேண்டும்? என்று அரசாங்கம் உத்தரவிடுவதோடு நிறுத்திக்கொள்ளட்டும். ஆசிரியர்களின் பிள்ளைகள் பற்றி பேசுவதற்கு அரசிற்கோ நீதிமன்றத்திற்கோ சட்டப்படி எந்த உரிமையும் கிடையாது.

6 முதல் 14 வயது பிள்ளைகளுக்கு கட்டாயக்கல்வி என்று சட்டம் போடத்தெரிந்த அரசாங்கத்திற்கு12ம் வகுப்பு வரை அனைவரும் அரசுப்பள்ளிகளில்தான் படிக்க வேண்டும் என்று சட்டமியற்றத் தெரியாதா?

ஆசிரியர்கள் பணியில் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் திருத்திக் கொள்கிறோம். அதைவிடுத்து ஆசிரியர்களுடைய குடும்பத்தைப்பற்றியோ, பிள்ளைகள் பற்றியோ பேசவோ, அவர்கள் கல்வி, வாழ்க்கையை முடிவு செய்யவோ யாருக்கும் உரிமை கிடையாது.

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...