Thursday, June 29, 2017

கூட்டல் கணக்கில் தடுமாற்றம் : குஜராத் மாணவர்களின் மறுபக்கம்

பதிவு செய்த நாள்
ஜூன் 28,2017 22:25



ஆமதாபாத்: குஜராத் மாநில, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளித் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, 2 + 2 + 2 என்பதற்கு கூட விடை தெரியாதது அம்பலமாகி உள்ளது; இதையடுத்து, 850 மாணவர்களின் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

குறைந்த மதிப்பெண் : குஜராத்தில், பா.ஜ.,வை சேர்ந்த, விஜய் ரூபானி முதல்வராக உள்ளார். இந்த மாநிலத்தில், உயர்நிலை மற்றும் மேல்நிலைக் கல்வி வாரியத் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியாகின. சவுராஷ்டிரா பகுதியில், நான்கு தேர்வு மையங்களில், 10ம் வகுப்பு படித்த, 850 பேர், ஓ.எம்.ஆர்., எனப்படும், விடைகளை குறிக்கும் தேர்வில், 50க்கு, 40 - 49 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்திருந்தனர். ஆனால், விவரித்து எழுதும் தேர்வில், இவர்களால், 0 - 3 மதிப்பெண்களே பெற முடிந்தது. இதனால், அவர்களின் தேர்வில் சந்தேகம் அடைந்த, தேர்வு வாரிய உயரதிகாரிகள், அவர்களின் கல்வித் திறனை சோதித்தனர். அப்போது, அவர்களில் பெரும்பாலானோர், குஜராத் மாநில தலைநகர் பெயர் தெரியாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விடை தெரியவில்லை : பலருக்கு, 'கிரிக்கெட்' என்ற வார்த்தையின் ஸ்பெல்லிங் தெரியவில்லை. 2 + 2 + 2 என்பதற்கு விடை கேட்டபோது, பலர் தெரியாமல் விழித்துள்ளனர்.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட 850 மாணவர்களின் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக, தேர்வு வாரிய துணைத்தலைவர், ஆர்.ஆர்.தக்கார் அறிவித்துள்ளார். கல்வித் திறன் மிக மோசமாக உள்ளது அம்பலமான நிலையில், அந்த மாணவர்கள் தேர்வு எழுதிய மையங்களில் வைக்கப்பட்டிருந்த, கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் சோதிக்கப்பட்டன. அதில், மாணவர் யாரும், 'காப்பி' அடித்ததாக தெரியவில்லை. அவர்கள், விடைகளை குறிக்கும் தேர்வில், பெரும்பாலான கேள்விகளுக்கு எவ்வாறு சரியான விடையை குறித்தனர் என்பது மர்மமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Tamil Nadu Government Servants (Conditions of Service) Act, 2016 TAMILNADU India Tamil Nadu Government Servants (Conditions of Service) Act,...