Thursday, June 29, 2017

மாவட்ட செய்திகள்

திருப்போரூர் முருகன் கோவிலில் பரிதாப நிலையில் அமர்ந்து இருக்கும் சென்னை மூதாட்டி


திருப்போரூர் முருகன் கோவிலில் பரிதாப நிலையில் சென்னை மூதாட்டி தங்கி உள்ளார். வீட்டில் தனிமையில் இருக்க பிடிக்காததால் இங்கு வந்ததாக கூறுகிறார்.

ஜூன் 28, 2017, 04:00 AM

திருப்போரூர்

திருப்போரூரில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பலர் தங்களின் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக கோவில் வளாகத்தில் இரவு தங்குகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் கோவில் முன்பு உள்ள 16 கால் மண்டபத்தில் வயதான ஒரு மூதாட்டி அமர்ந்திருந்தார். அவரிடம் 2 கட்டை பைகள், ஒரு தட்டு, ஒரு டம்ளர், செல்போன் ஆகியவை இருந்தன. சோகமாக அமர்ந்து இருந்த அவரை பார்த்த பக்தர்கள், வயதான காலத்தில் பராமரிக்க முடியாமல் யாராவது அவரை இங்கு வந்து விட்டு சென்றிருக்கலாம் என கருதினர்.துன்புறுத்தவில்லை

அப்போது அந்த மூதாட்டியிடம் சிலர் பேச்சுக்கொடுத்தபோது அவர் கூறியதாவது:–

என் பெயர் குப்பம்மாள் (வயது 82). சென்னை தியாகராய நகரில் வசித்து வருகிறேன். கணவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். எனக்கு 3 மகன்கள், 3 மகள்கள். இவர்களில் ஒரு மகன், 2 மகள்கள் இறந்து விட்டனர்.

மற்ற 2 மகன்கள் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். என்னை யாரும் துன்புறுத்தவில்லை. நானாகவே வந்து விட்டேன். நேற்று முன்தினம் எனக்கு தெரிந்தவர் ஒருவர் என்னை இங்கு விட்டு சென்றார்.பரிதாப நிலையில்...

மகன்கள், மருமகள்கள் வேலைக்கு சென்று விடுவார்கள். மருமகள் இரவு 8 மணிக்கு மேல் வந்தால் தான் டி.வி.யே பார்க்க முடியும். வீட்டில் யாரும் இல்லாததால், தனிமையில் இருக்க எனக்கு பிடிக்கவில்லை. இதனால் தான் நான் வீட்டை விட்டு இங்கு வந்தேன். புதுச்சேரியில் இருக்கும் என் மருமகனிடம் செல்போனில் பேசினேன். அவர் 30–ந்தேதிக்கு மேல் வந்து அழைத்து செல்வதாக கூறியுள்ளார்.

இவ்வாறு அந்த மூதாட்டி கூறினார்.

பரிதாப நிலையில் இருக்கும் அந்த மூதாட்டிக்கு பணம், சாப்பிட உணவு ஆகியவற்றை அங்கு வரும் பக்தர்கள் வழங்கினர்..

No comments:

Post a Comment

PhD aspirants demand online availability status of guides

PhD aspirants demand online availability status of guides Ardhra.Nair@timesofindia.com  26.11.2024 Pune : Citing difficulties in application...