Friday, June 23, 2017

ரம்ஜான் பண்டிகை விடுமுறை : ஆம்னி பஸ் கட்டணம் உயர்வு

பதிவு செய்த நாள்23ஜூன்2017
00:51

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, மூன்று நாட்கள் தொடர் விடுமுறை என்பதால், முக்கிய நகரங்களுக்கு இயக்கப்படும், ஆம்னி பஸ்கள் கட்டணம் உயர்ந்துள்ளது. ஜூன், 26 திங்களன்று, ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. முந்தைய நாட்கள், சனி, ஞாயிறாக இருப்பதால், மூன்று நாட்கள் தொடர் விடுமுறையாக உள்ளது. இதனால், தொழில் நகரங்களில் இருந்து, சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதனால், தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பஸ்கள் கட்டணம் உயர்த்தப் பட்டுள்ளது. நேற்று மதியம், 'ரெட்பஸ் டாட் காம்' இணையதளத்தில் விற்ற டிக்கெட்டுகள் கட்டண விபரப்படி, இரண்டு, மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

உதாரணமாக, பெங்களூரில் இருந்து சென்னைக்கு, 550 முதல், 750 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால், நேற்று குறைந்தபட்சம், 1,000 முதல், 2,000 ரூபாய் வரை வசூலிக்கப்பட்டது. 

சென்னையில் இருந்து சேலத்துக்கு, 450 முதல், 850 ரூபாய் கட்டணம்
நிர்ணயித்துள்ள நிலையில், நேற்று, 1,000 முதல், 1,500 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது.

 மதுரை - ஐதராபாத், 4,000 ரூபாய், சென்னை - திருநெல்வேலி, 2,500 ரூபாய் வசூலிக்கப்பட்டது.
'ரெட்பஸ் டாட்காம்' கட்டணம் அதிகரிப்பு செய்யப்பட்ட நிலையில், தமிழக முக்கிய நகரங்களில் உள்ள பஸ் ஸ்டாண்டுகளில் செயல்படும் 'புக்கிங்' மையங்களில், ஆம்னி பஸ் உரிமையாளர்கள், இஷ்டம் போல் கட்டணத்தை
அதிகப்படுத்தியுள்ளனர்.

இதனால், பயணியர் அதிர்ச்சிக்கு ஆளாகி, வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும், நடவடிக்கை இல்லை.

No comments:

Post a Comment

Jan 5 not my real birthday, says Didi ‘OFFICIAL AGE WRONG’

Jan 5 not my real birthday, says Didi ‘OFFICIAL AGE WRONG’ Tamaghna.Banerjee@timesofindia.com  09.01.2025 Kolkata : Three days after she was...