ஹிந்தியிலும் பாஸ்போர்ட் தகவல்கள் மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகை
புதுடில்லி: ''பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக் கும், 8 வயதுக்கு உட்பட்டோர் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு, 10 சதவீத கட்டண சலுகை அளிக்கப்படும்; பாஸ் போர்ட்டில் இடம் பெறும் தகவல்கள், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் என, இரு மொழி களிலும் இடம் பெறும்,'' என, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
டில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற, மத்திய அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, சுஷ்மா சுவராஜ் பேசியதாவது:
மத்தியில், பா.ஜ., தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின், பாஸ்போர்ட் பெறுவதில் இருந்த நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. தத்கல் முறையில் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும் போது, 'பான்' கார்டு இல்லாதோர், தங்கள் ரேஷன் கார்டை சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளதால், கிராமப் புறங்களில் வசிக்கும் ஏராளமானோர் பலனடைய முடியும்.
பாஸ்போர்ட்கேட்டு விண்ணப்பிக்கும், 8 வயதுக்கு உட்பட்டோர் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட விண் ணப்பதாரர்களுக்கு, விண்ணப்பக் கட்டணத்தில், 10 சதவீத சலுகை அளிக்கப்படும்.
இந்த அறிவிப்பு உடனடியாக அமல்படுத்தப்படும். பாஸ்போர்ட்டில், விண்ணப்பதாரரின் தனிப்பட்ட தகவல்கள், ஆங்கிலத்தில் மட்டும் இடம் பெறுவ தால், அதை புரிந்து கொள்வதில் பலர் சிரமப்படுவ தாக, புகார் எழுந்துள்ளது.
எனவே, அனைத்து தரப்பு மக்களின் நலன் கருதி, இனி, பாஸ்போர்ட்டில் இடம் பெறும் தகவல்கள், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளிலும் அச்சிடப்படும்.
அரபு நாடுகள், ஜெர்மனி, ரஷ்யா போன்ற நாடுகளின் பாஸ்போர்ட்கள், அந்தந்த நாட்டு மொழிகளில் அச்சிடப்படுகின்றன. அப்படியிருக்கையில், நாமும் பாஸ்போர்ட்டில் ஹிந்தி, ஆங்கிலம் என இரு மொழிகளையும் பயன்படுத்துவதில் தவறில்லை. விவாகரத்தான, கணவரால் கைவிடப்பட்ட பெண் கள், ஆதரவற்றோர் பாஸ்போர்ட் பெறுவதிலும்,
வெளிநாடு செல்வதற்கான ஆவணங்கள் சமர்ப்பித்தல், விசா பெறும் நடைமுறையிலும் இருந்த சிக்கல்களுக்கு, தீர்வு காணப்பட்டு உள்ளது. இதன் மூலம், ஏராளமானோர் பலன் அடைந்துள்ளனர்.
போஸ்ட் ஆபீஸ்களில், பாஸ்போர்ட் சேவா கேந்திராக்கள் துவக்கப்பட்டுள்ளதன் மூலம், கிராமப்புறங்களில் உள்ளோர் மிக எளிதாக பாஸ்போர்ட் சேவை பெற முடிகிறது. இதனால், பாஸ்போர்ட் அலுவலக ஊழியர்களின் பணி வாய்ப்பு பறிக்கப்படாது; மாறாக, அவர்களின் பணிச்சுமை குறைக்கப்பட்டுள்ளது.பாஸ்போர்ட் அலுவலக ஊழியர்களுக்கு எந்த பாதிப்பும் வராது என உறுதியளிக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment