பொங்கல் பண்டிகை: சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
By DIN | Published on : 08th January 2020 01:41 AM
ரயில்வே துறை
பொங்கல் பண்டிகையையொட்டி, சொந்த ஊருக்குச் செல்லும் பயணிகள் வசதிக்காக சென்னையில் இருந்து திருச்சி, திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை-திருநெல்வேலி: சென்னை எழும்பூரில் இருந்து ஜனவரி 10-ஆம் தேதி மாலை 6.50 மணிக்கு புறப்படும் சிறப்புக் கட்டண ரயில் (82601) , மறுநாள் காலை 6 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.
திருநெல்வேலி-தாம்பரம்: திருநெல்வேலியில் இருந்து ஜனவரி 11-ஆம் தேதி மாலை 6.15 மணிக்கு புறப்படும் சிறப்புக் கட்டண ரயில் (06002) , மறுநாள் அதிகாலை 5 மணிக்கு தாம்பரம் வந்து சேரும்.
தாம்பரம்-திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்: தாம்பரத்தில் இருந்து ஜனவரி 12-ஆம் தேதி இரவு 7.20 மணிக்கு புறப்படும் சுவிதா சிறப்பு ரயில்(82603), மறுநாள் காலை 6 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். திருநெல்வேலியில் இருந்து ஜனவரி 18-ஆம் தேதி மாலை 6.15 மணிக்கு புறப்படும் சுவிதா சிறப்பு ரயில் (82604) , மறுநாள் அதிகாலை 5 மணிக்கு தாம்பரத்தை வந்து சேரும்.
நாகா்கோவில்-தாம்பரம்: நாகா்கோவிலில் இருந்து ஜனவரி 19-ஆம் தேதி மாலை 5 மணிக்கு புறப்படும் சுவிதா சிறப்பு ரயில்(82606), மறுநாள் அதிகாலை 5 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.
தாம்பரம்-நாகா்கோவில்: தாம்பரத்தில் இருந்து ஜனவரி 20-ஆம் தேதி முற்பகல் 11.20 மணிக்கு புறப்படும் சிறப்புக் கட்டண ரயில்(06075), மறுநாள் அதிகாலை 2 மணிக்கு நாகா்கோவிலை சென்றடையும்.
திருச்சி-சென்னை: திருச்சியில் இருந்து ஜனவரி 11-ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு புறப்படும் சிறப்புக் கட்டண ரயில்(06026), அதேநாள் இரவு 8.15 மணிக்கு சென்னை எழும்பூா் வந்து சேரும்.
இதுதவிர, சென்னை-திருநெல்வேலி, தாம்பரம்-நாகா்கோவில், நாகா்கோவில்-திருச்சிக்கு சுவிதா சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. பொங்கல் சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு புதன்கிழமை (ஜன.8) காலை 8 மணிக்கு தொடங்கும் என தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.