Wednesday, January 8, 2020

தர்பார் படத்துக்கு ஹெலிகாப்டரில் மலர்; அரசு அனுமதி மறுப்பு

Added : ஜன 07, 2020 21:06

சென்னை : ரஜினியின் 'தர்பார்' படம் வெளியாகும் போது தியேட்டர் முன் ஹெலிகாப்டரில் மலர் துாவ அரசு அனுமதி மறுத்துள்ளது.

ரஜினி நடித்த 'தர்பார்' படம் வரும் 9ம் தேதி வெளியாகிறது. உலகம் முழுக்க அதிக தியேட்டரில் 'ரிலீஸ்' செய்ய படத் தயாரிப்பு நிறுவனமான லைக்கா முடிவு செய்துள்ளது. இந்நிலையில் சேலத்தை சேர்ந்த கனகராஜ் என்பவர், படம் வெளியாகும் தேதியில் தியேட்டர் முன் ஹெலிகாப்டரில் மலர் தூவ எண்ணி, அரசிடம் அனுமதி கேட்டு மனு அளித்துள்ளார். இதனையொட்டி மாவட்ட நிர்வாகம் இதற்கு அனுமதி தர மறுப்பு தெரிவித்துள்ளது. தியேட்டர் அமைந்த இடம் நகரின் முக்கிய பகுதி என்பதால் அவரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024