Friday, January 31, 2020

திருவாரூர் - தஞ்சை: அதிவேக ரயிலை இயக்கி சோதனை

Added : ஜன 30, 2020 20:31

சென்னை :திருவாரூர் - தஞ்சை இடையேயான, ரயில் பாதையை மின்மயமாக்கும் பணி முடிந்து, அதிவேக ரயிலின் சோதனை ஓட்டம், இன்று நடக்கிறது.திருவாரூர் - தஞ்சை இடையேயான, அகல ரயில் பாதையை, மின் மயமாக்கும் பணி ஓராண்டாக நடந்து வந்தது; இப்பணி முடிந்துள்ளது.இந்த பாதையில், தென்பிராந்திய ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் மனோகரன், இன்று மாலை, 3:00லிருந்து, மாலை, 6:00 மணி வரை, அதிவேக ரயிலை இயக்கி சோதனை நடத்துகிறார். சோதனை நடக்கும் நேரத்தில், பொதுமக்கள் ரயில் பாதையை கடக்கக் கூடாது என, தெற்கு ரயில்வே தெரிவித்துஉள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024