Friday, January 31, 2020

3ம் தேதி தான் சம்பளம்: மின் வாரியம்

Added : ஜன 30, 2020 20:33

சென்னை தமிழக மின் வாரியத்தில், 85 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். 96 ஆயிரம் பேர் ஓய்வூதியர்கள். இவர்களின் சம்பளம், ஓய்வூதியத்திற்காக மாதம், 500 கோடி ரூபாய் வரை செலவு செய்யப்படுகிறது.இந்த தொகை, ஊழியர்களின் வங்கி கணக்குகளில், மாதம் தோறும், 1ம் தேதி செலுத்தப்படும். அந்த தேதி விடுமுறை நாளாக இருந்தால், அதற்கு முந்தைய நாட்களான, 30, 31ம் தேதிகளில் சம்பளம் வழங்கப்படும். இந்நிலையில், இம்மாத மாத சம்பளம், 3ம் தேதி வழங்கப்படும் என, மின் வாரியம் தெரிவித்துள்ளது. மின் வாரிய நிதி பிரிவின் இயக்குனரின் சுற்றறிக்கை:வங்கி ஊழியர்கள், ஜன., 31, பிப்., 1ல் வேலைநிறுத்தம் மற்றும், பிப்., 2 ஞாயிற்றுக்கிழமை விடுமுறையாக இருப்பதாலும், அனைத்து ஊழியர்களுக்கும், ஜனவரி மாத சம்பளம் மற்றும் ஓய்வூதியம், பிப்., 3ல் வழங்கப்படும் என, ஆணை பிறப்பிக்கப் படுகிறது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.





No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024