Thursday, January 30, 2020

பதிவாளர் நேர்காணல்: ஒருவரும் தேரவில்லை மீண்டும் அறிவிக்க பல்கலை முடிவு

Added : ஜன 29, 2020 23:49

மதுரை :மதுரை காமராஜ் பல்கலை புதிய பதிவாளருக்கான நேர்காணல் நடந்ததில், தேர்வு குழு எதிர்பார்த்த தகுதிகள் யாருக்கும் இல்லாததால் மீண்டும் அறிவிப்பு வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.இப்பல்கலையில் 2019, ஜூன் 9 முதல் பதிவாளர் பணியிடம் காலியாக இருந்தது. புதிய பதிவாளர் பதவிக்கான அறிவிப்பு ஜூன் மாதம் வெளியிடப்பட்டது. விண்ணப்பித்தவர்களில் 20 பேர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். தேர்வுக் குழுவில் அரசு பிரதிநிதி இடம் பெற வேண்டும் என்ற கோரிக்கை, உள்ளாட்சி தேர்தல் போன்ற காரணங்களால் நேர்காணல் மூன்று முறை தள்ளி வைக்கப்பட்டது.இதையடுத்து நேற்று நடந்த நேர்காணலுக்கு 19 பேர் அழைக்கப்பட்டனர். மூன்று பேர் பங்கேற்கவில்லை. 16 பேரின் கல்வித்தகுதி, பப்ளிகேஷன்ஸ், காப்புரிமை உள்ளிட்ட அனுபவம் குறித்த ஆவணங்களை சிண்டிகேட் உறுப்பினர்கள் தீனதயாளன், ஷகிலா, லில்லிஸ் திவாகர் குழு முதற்கட்டமாக ஆய்வு செய்தது.இதையடுத்து துணைவேந்தர் கிருஷ்ணன், சென்னை ராமச்சந்திரா பல்கலை முன்னாள் துணைவேந்தர் சத்தியநாராயணா மூர்த்தி, காரைக்குடி அழகப்பா பல்கலை துணைவேந்தர் ராஜேந்திரன், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை துணைவேந்தர் பார்த்தசாரதி, மதுரை காமராஜ் பல்கலை சிண்டிகேட் உறுப்பினர்கள் டாக்டர் ஆர்.லட்சுமிபதி, ராமகிருஷ்ணன், ராஜ்குமார், சென்னை பல்கலை பேராசிரியை ரமணிபாய் ஆகியோர் கொண்ட தேர்வுக் குழு நேர்காணல் நடத்தியது. சிறப்பு தகுதிக்கு 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அளிக்கப்பட்டது.நேர்காணலில் பங்கேற்வர்களுக்கு கல்வி

அனுபவம் சார்ந்த தகுதிகள் இருந்தன. கமிட்டி எதிர்பார்த்த நிர்வாகம் சார்ந்த தகுதிகள் இல்லாததால் கமிட்டி திருப்தியடையவில்லை. இதனால் மீண்டும் பதிவாளர் பதவிக்கு புதிய அறிவிப்பு வெளியிட்டு விண்ணப்பம் கோர முடிவு எடுக்கப்பட்டது. இதற்கு பின் நடந்த சிறப்பு சிண்டிகேட் கூட்டத்திலும் இம்முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024