Sunday, January 26, 2020


நவஜோதிர்லிங்கம் தரிசிக்க தனி ரயில்

Added : ஜன 25, 2020 23:41

கோவை;திருநெல்வேலியில் இருந்து பிப்., 19ல் புறப்படும் நவஜோதிர்லிங்க யாத்திரை சிறப்பு ரயிலுக்கு, முன்பதிவுகள் வரவேற்கப்படுகின்றன.

தென் தமிழகத்தின் கடைகோடி மக்களும், ஆன்மிக சுற்றுலா செல்ல ஏதுவாக, பிப்., 19ல், திருநெல்வேலியில் இருந்து, ஐ.ஆர்.சி.டி.சி., சிறப்பு ரயில் புறப்படுகிறது.மதுரை, திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், சென்னை வழியாக, மஹாராஷ்டிராவில் திரையம்பகேஷ்வர், பீம்சங்கர், குருஸ்ணேஸ்வர், குஜராத் மாநிலத்தில், சோம்நாத், மத்திய பிரதேசத்தில் ஓம்காரேஸ்வர், ஆந்திராவில் உள்ள ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் உட்பட ஒன்பது ஜோதிர்லிங்கங்களையும் தரிக்க, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மொத்தம், 13 நாட்கள் கொண்ட யாத்திரைக்கு, நபருக்கு, 15 ஆயிரத்து, 320 ரூபாய் கட்டணம். கோவை மற்றும் சுற்றுப்பகுதியில் இருந்து புறப்படுவோர், ஈரோடு, சேலத்தில் இருந்து பயணிக்கலாம்.

'விபரங்களுக்கு கோவை, ஐ.ஆர்.சி.டி.சி., அலுவலகத்தை, 90031 40655 என்ற மொபைல் போன் எண்ணிலும், www.irctctourism.com எனும் இணையதள முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024