Wednesday, January 8, 2020

திஹாரில் தூக்கு தண்டனை ஒத்திகை

Added : ஜன 08, 2020 05:02



புதுடில்லி: 'நிர்பயா வழக்கு, குற்றவாளிகள் நான்கு பேருக்கு, வரும், 22ம் தேதி, காலை 7:00 மணிக்கு, டில்லி திஹார் சிறையில், துாக்கு தண்டனை நிறைவேற்றப்படும்' என, டில்லி நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. குற்றவாளிகளில் மூன்று பேர், திஹார் சிறையின் சிறை எண் - 2லும், ஒருவர் மட்டும் சிறை எண் - 4லிலும் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நால்வரும், வரும், 22ம் தேதியன்று, சிறை எண் - 2ல் துாக்கிலிடப்படுவர்.

இந்நிலையில் குற்றவாளிகளை தூக்கிலிடுவதற்கான ஒத்திகை இன்று திஹார் சிறையில் நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. உ.பி.மாநிலம் மீரட்டை சேர்ந்த சிறை காவலர் இதற்கான ஒத்திகையை நடத்திட உள்ளார்.

அப்போது காவல்துறை கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர், மாவட்ட கலெக்டர், கலெக்டர் வர இயவில்லை என்றால், துணை கலெக்டர், அரசு மருத்துவர் குழுவினர் இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024