Wednesday, January 8, 2020

ரேஷன் கடைகளில் போலீஸ் பாதுகாப்பு

Added : ஜன 07, 2020 23:35

சென்னை : ரேஷன் கடைகளில், நாளை முதல், 1,000 ரூபாய் அடங்கிய, பொங்கல் பரிசு வழங்க உள்ளதால், கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருக்க, உணவுத் துறை சார்பில், போலீசாரிடம் பாதுகாப்பு கோரப்பட்டு உள்ளது.

தமிழக ரேஷன் கடைகளில், 2 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு, தலா, ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை; தலா, 20 கிராம் முந்திரி, திராட்சை; ஐந்து கிராம் ஏலம், கரும்பு, 1,000 ரொக்கம் அடங்கிய பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு, 2019 நவம்பரில் வெளியான நிலையில், நாளை முதல், ரேஷன் கடைகளில், பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது. பொங்கலுக்கு, ஒரு வாரமே உள்ளதால், பலரும் சொந்த ஊர் செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். இந்நிலையில், நாளை காலை, ரேஷன் கடைகள் திறந்ததும், பொங்கல் பரிசு வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில், அதிகம் பேர் திரள வாய்ப்புள்ளது.

இதனால், கூட்ட நெரிசலால், மக்கள் சிரமப்படும் சூழல் ஏற்படலாம். இதை தவிர்க்கவும், சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படாமல் இருக்கவும், உணவுத்துறை சார்பில், ரேஷன் கடைகளுக்கு, போலீஸ் பாதுகாப்பு கோரப்பட்டு உள்ளது. மேலும், ஒவ்வொரு கடையிலும், 9, 10, 11, 12ம் தேதி வரை, எந்தெந்த தினத்தில், எத்தனை கார்டுதாரர்களுக்கு, பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது என்ற விபரம், கடைகள் முன் ஒட்டப்பட்டு உள்ளது.இதனால், கார்டுதாரர்கள், தங்கள் வரிசை எண் உள்ள தேதிக்கு சென்று, பொங்கல் பரிசை பெற்று கொள்ளலாம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024