7 மாதம் செயற்கை சுவாசம் அளித்து சிறுவனை மீட்ட அரசு டாக்டர்கள்
Added : ஜன 08, 2020 00:22
மதுரை : அரிய நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு, ஏழு மாதங்கள் செயற்கை சுவாசம் அளித்து, மதுரை அரசு மருத்துவமனை காப்பாற்றியுள்ளது.
மதுரை, பசுமலையைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது, இரண்டரை வயது மகன், கை, கால் மற்றும் உடலின் அனைத்து தசைகளும் பலம் இழந்த நிலையில், மே மாதம், மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.டாக்டர்கள் பரிசோதனையில், தசைகளை வலு இழக்கச் செய்யும், 'குல்லியன் பாரி சிண்ட்ரோம்' எனும் நோய், சிறுவனை பாதித்து இருப்பது தெரிந்தது. 'இம்முனோகுளோபுலின், மீத்தைல் பிரட்னிசலோன்' போன்ற விலையுர்ந்த மாத்திரைகள் வழங்கப்பட்டன.இதற்கிடையே, நோயால், சுவாசிக்கும் திறன் பாதிக்கப்பட்டு, சிறுவனுக்கு செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது.
சுவாசத் தொற்றுக்கான விலை உயர்ந்த ஆன்டிபயாடிக் மருந்துகள் கொடுக்கப்பட்டன. டியூப் மூலம், மூக்கு வழியாக உணவு அளிக்கப்பட்டது. 'பிசியோதெரபி' பயிற்சியும் வழங்கப்பட்டது.இப்படி, ஏழு மாதங்கள் செயற்கை சுவாசம் தொடர்ந்தது. உடல் நலனில் முன்னேற்றம் இருந்ததால், டிசம்பரில் படிப்படியாக செயற்கை சுவாசம் அளிப்பது நிறுத்தப்பட்டது.தற்போது, சிறுவனால் தானாக சுவாசிக்க, உணவு உட்கொள்ள, நடக்க முடிகிறது. இரண்டரை வயது சிறுவனுக்கு இத்தனை மாதங்கள் செயற்கை சுவாசம் அளிக்கப்படுவது மிகவும் அரிதானது.
சிகிச்சை அளித்த பல்வேறு துறைகளின் டாக்டர்களை, டீன் சங்குமணி பாராட்டினார்.ரூ.1.5 கோடி சிகிச்சை இலவசம்அரிய நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன், நல்ல நிலைக்கு திரும்பி, வீட்டிற்கு செல்ல தயாராகி விட்டான். ஏழு மாதங்கள், செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது, தென் மாநிலங்களிலேயே இதுதான் முதல் முறை. இச்சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் மேற்கொண்டிருந்தால், 1.50 கோடி ரூபாய் செலவாகி இருக்கும். ஆனால், முதல்வரின் காப்பீட்டு திட்டத்தில், சிறுவனுக்கு இலவசமாக மேற்கொள்ளப்பட்டது.சங்குமணி, டீன், மதுரை அரசு மருத்துவமனை.

No comments:
Post a Comment