Wednesday, January 8, 2020


அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்

Added : ஜன 07, 2020 23:24


சென்னை : அரசின், 'சி, டி' பிரிவு பணியாளர்களுக்கு, 3,000 ரூபாய் பொங்கல் போனஸ் வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

முறையான காலமுறை சம்பளம் பெறும், அனைத்து, 'சி, டி' பிரிவு அரசு பணியாளர்கள், உள்ளாட்சி பணியாளர்கள்.மேலும், அரசு மானியம் பெறும், கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் ஆகியோருக்கு, உச்சவரம்பாக, 3,000 ரூபாய் போனஸ் வழங்க, அரசு உத்தரவிட்டு உள்ளது.கடந்த, 2018 ஏப்ரல், 1 முதல், 2019 மார்ச், 3 வரை, ஓராண்டு முழுவதும் பணிபுரிந்து, தற்போது பணியில் உள்ள பணியாளர்கள் அனைவரும், தற்காலிக மிகை ஊதியத்தொகை முழுவதையும் பெற தகுதியுடையவர்கள்.

மாத அடிப்படையில், நிலையான ஊதியம் பெற்று வந்த பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், குறு அங்கன்வாடி பணியாளர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றுவோருக்கு, சிறப்பு தற்காலிக மிகை ஊதியமாக, 1,000 ரூபாய் வழங்கப்படும்.ஓய்வு பெற்றவர்களில், 'சி, டி' பிரிவு பணியாளர்கள், கிராம அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், உதவியாளர்கள்.

மற்றும் ஊராட்சி செயலர்கள், கிராம நுாலகர்கள், துப்புரவுப் பணியாளர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் போன்றோருக்கு, பொங்கல் பரிசுத் தொகையாக, 500 ரூபாய் வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான அரசாணைகளும் வெளியிடப் பட்டுள்ளன.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024