Tuesday, February 14, 2017

அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு!

Edapaadi Palanisamy
அ.தி.மு.க-வின் சட்டமன்ற கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூவத்தூரில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலா தலைமையில் நடைபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று சசிகலாவுக்கு எதிராக தீர்ப்பு வரவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், அ.தி.மு.க-வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.

சசிகலாவுக்கு எதிராக தீர்ப்பு! பன்னீர்செல்வம் முக்கிய அறிக்கை




சொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் சசிகலாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், அமைச்சர்கள், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதல்வர் பன்னீர்செல்வம் முக்கிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "எனது அன்புக்குரிய கழக அமைச்சர்களே, கழக சட்டமன்ற உறுப்பினர்களே உங்கள் அனைவருக்கும் அன்பான வேண்டுகோள், கடந்த 07.02.2017 அன்றிரவு, உங்கள் அன்பு சகோதரன் ஆகிய நான், ஜெயலலிதா நினைவகத்தில் பிரார்த்தனை செய்துவிட்டு, பின்னர் ஜெயலலிதாவின் ஆன்மா எனக்கு அளித்த மானசீக உத்தரவின் பேரில், எனது மனதில் அடக்கி வைத்திருந்த சில உண்மைகளை செய்தியாளர்கள் மூலம் தங்களுக்கும், நாட்டு மக்களுக்கும் தெரிவித்தேன். இதனைத் தொடர்ந்து எனது நிலைப்பாட்டிற்கு மாநிலம் முழுவதும் கட்சி வேறுபாடின்றி அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, எம்ஜிஆரால் துவக்கப்பட்டு, ஜெயலலிதாவால் கட்டிக்காத்து, வளர்க்கப்பட்டு வந்த நமது மாபெரும் அஇஅதிமுக இயக்கத்தைச் சேர்ந்த சுமார் ஒன்றரைக் கோடி உறுப்பினர்களும் ஒட்டுமொத்தமாக தொடர்ந்து ஏகோபித்த ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ஜெயலலிதா மறைந்த அன்று இரவு உங்கள் அனைவராலும் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு, கனத்த இதயத்துடன் முதலமைச்சராக பதவியை ஏற்று, உங்கள் அனைவரின் ஒத்துழைப்போடு ஜெயலலிதா வழியில், கடந்த இரண்டு மாதங்களாக அனைத்து தரப்பினரும் பாராட்டும் வகையில், ஜெயலலிதாவின் ஆட்சியை அவர் இல்லை என்ற குறை பொதுமக்களுக்கு தெரியாதவாறு தொடர்ந்து நடத்தி வந்தோம். ஜெயலலிதா ஆட்சியை அனைத்து தரப்பினரும் பாராட்டி வந்தனர். நாம் யாரும் எதிர்பாராத வகையில் நடந்த ஒரு சில நிகழ்வுகளால் கடந்த சில நாட்களாக ஜெயலலிதாவின் ஆட்சி மீதமுள்ள ஆண்டுகளுக்கு தொடர்வதில் தற்காலிக இடையூறு மட்டுமே ஏற்பட்டுள்ளது. எனவே, தற்காலிகமாக ஏற்பட்டுள்ள இடையூறை நீக்கி, நாம் அனைவரும் ஒன்றுமையுடன் இருந்து கழகத்துக்கு எவ்வித ஊறும் ஏற்படாமல் காத்து ஜெயலலிதாவின் நல்லாட்சி தொடர தேவையானவற்றை நம் மனசாட்சிபடி உடனடியாக மேற்கொள்ள வேண்டியது நமது அனைவரின் கடமையாகும். இதுவே மானசீகமாக ஜெயலலிதாவுக்க நாம் செலுத்தும் நன்றி கடனாகும்.

காலத்தின் சதியினால் ஜெயலலிதா நம்மிடையே இருந்து தொடர்ந்து பணியாற்ற இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் ஜெயலலிதாவின் நல்லாட்சி தொடர வேண்டுமென்ற காரணத்தினாலேயே நமக்கு வாக்களித்து நம்மை வெற்றி பெற செய்தனர். தற்போது ஜெயலலிதா நம்மிடையே இல்லாத சூழ்நிலையில், பொதுமக்கள், குறிப்பாக கழக வெற்றிக்காக அல்லும், பகலும் கண் அயராது உழைத்த நமது கழக கண்மணிகள் அனைவரும் எதை விரும்புகின்றனர் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். அவர்களின் விருப்பத்திற்கு மதிப்பளித்து, அவர்கள் காட்டும் வழியிலேயே செல்வதுதான் சட்டமன்ற உறுப்பினர்களாகிய நமது அனைவரின் கடமையாகும். இதுவே நமது மாநிலத்திற்கும் நலம் சேர்க்கும். ஜெயலலிதாவின் நல்லாட்சித் தொடர அவர்கள் அனைவரது ஆதரவும் நமக்கு இன்றியமையாததாகும்.

எனவே, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் தற்போதுள்ள ஒட்டுமொத்த சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு எந்தவிதமான முடிவு எடுத்தால், அது கழக ஒற்றுமைக்கும், ஜெயலலிதாவின் நல்லாட்சித் தொடர்வதற்கும், மாநிலத்திற்கும் நன்மை அளிக்கும் என்பதை உணர்ந்து அதற்கேற்றவாறு நல்ல முடிவு எடுத்து செயல்பட வேண்டும் என்று உங்கள் அனைவரையும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். மேலும், தற்காலிகமாக நமக்கிடையே ஏற்பட்ட சில கசப்பான நிகழ்வுகளை மறந்து நாம் அனைவரும் எப்போதும் போல ஒற்றுமையுடன் இருந்து அவரவருக்குரிய முக்கியத்துவத்துடன் தொடர்ந்து செயல்படுவதில் எவ்வித தயக்கமும் இருக்காது என்பதை நான் இத்தருணத்தில் உங்கள் அனைவருக்கும் உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், நம் எதிரிகள், நாம் பிளவுபடுவதை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். அதற்கு நாம் இடமளிக்கக் கூடாது. அவ்வாறு இடமளிப்பவர்களை ஜெயலலிதாவின் ஆன்மா என்றும் மன்னிக்காது. ஜெயலலிதா தங்கள் வாழ் நாள் முழுவதும் எக்கொள்கைக்காக வாழ்ந்தார்களோ, அதை தொடர்ந்து கடைப்பிடித்து, அவர் விட்டுச் சென்ற பணிகளை நாம் ஒற்றுமையுடன் தொடர்ந்து மக்களுக்கு ஆற்றிட அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன். ஜெயலலிதாவின் புகழையும், எம்.ஜி.ஆரின் புகழையும் என்றென்றும் அழியாது காத்து மேன்மேலும் ஓங்க செய்திட கழகக் கண்மணிகளும் பொதுமக்களும் முழுமையாக ஒத்துழைப்பு நல்கிட அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

ஆளுநர் வித்யாசாகர் ராவ் கையில் இனி முடிவு! - வெங்கையா நாயுடு


சொத்துக்குவிப்பு மேல்முறையீடு வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, 'இன்று உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்துள்ளது. தற்சமயத் தேவை என்பது, தமிழக மக்களுக்கு விருப்பத்துக்கு ஏற்றபடி நிலையான அட்சியை நிறுவுவது மட்டுமே. ஆளுநர் வித்யாசாகர் ராவ் இந்த விஷயம் குறித்து முடிவெடுப்பார்' என்று பதிவு செய்துள்ளார்.

தீர்ப்பு எதிரொலி... அடுத்த முதல்வரை கை காட்டினார் சசிகலா!


உச்ச நீதிமன்றத்தில் சசிகலா குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதால் அடுத்த முதல்வராக செங்கோட்டையனை அவர் கை காட்டி இருப்பதாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன.

அ.தி.மு.க உள்கட்சி பூசலில் சசிகலாவுக்கு தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டு வருகிறது. அதில் முக்கியமாக சொத்துக்குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளி என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது பன்னீர்செல்வம் தரப்புக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் கூவத்தூரில் தங்கியிருக்கும் எம்.எல்.ஏ.க்களிடம் சசிகலா நேற்று ஆலோசனை நடத்தினார். அதில் தீர்ப்பு குறித்தும் அவர் உருக்கமாக பேசி உள்ளார். 'தீர்ப்பு எனக்கு பாதகமாக வந்தாலும் அக்கா காட்டிய வழியில் நாம் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்' என்று தெரிவித்துள்ளார். அப்போது, சசிகலாவின் கண்கள் கலங்கின. அதற்கு சசிகலாவின் விசுவாசி எம்.எல்.ஏ.க்கள் 'தீர்ப்பு நிச்சயம் நமக்கு சாதகமாகத்தான் வரும்' என்று தெரிவித்துள்ளனர். இதையடுத்து சசிகலாவும், கட்சியின் மூத்த நிர்வாகிகளும் ஆலோசனை நடத்தினர். சட்ட நிபுணர்களுடனும் அவர் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனையில் ஒருவேளை தீர்ப்பு எனக்கெதிராக வந்தால் அடுத்து என்ன செய்யலாம், யார் அடுத்த முதல்வர் என்று ஆலோசனை நடத்தப்பட்டது. அதில் கொங்கு மண்டலத்திலிருந்து ஒருவரை முதல்வராக தேர்வு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சாய்ஸில் சசிகலாவால் அவைத்தலைவராக நியமிக்கப்பட்ட செங்கோட்டையனை சசிகலாவும், மன்னார்குடி தரப்பும் கை காட்டி இருக்கிறது. செங்கோட்டையன் முதல்வர் என்றதும் அவருக்கு எதிரணியில் இருப்பவர்கள் வருத்தம் அடைந்துள்ளனர். இருப்பினும் அதை வெளிக்காட்டவில்லை. இந்த சூழ்நிலையில் உச்சநீதிமன்றத்தில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சசிகலாவும், அவரது தரப்பினும் கடும் வருத்தத்தில் உள்ளனர். இக்கட்டான இந்த நேரத்தில் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்று சசிகலா தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் கூவத்தூரில் தங்கி இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் பன்னீர்செல்வத்தின் அணிக்கு செல்லப்போவதாக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியானது. அவர்களிடம் சசிகலா தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் உள்விவரம் தெரிந்தவர்கள் சொல்கின்றனர். தீர்ப்பு வருவதற்கு முன்பே அசம்பாவித சம்பவங்கள் நிகழாமலிருக்க கூவத்தூரில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரிசார்ட்டில் தங்கி இருக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கு எதுவும் பிரச்னை ஏற்படாமலிருக்க போலீஸார் தயார் நிலையில் இருக்கின்றனர். ரிசார்ட்டுக்குள் இருக்கும் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்.எல்.ஏ.க்களை அங்கிருந்து மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் கூவத்தூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சசிகலாவின் ஆதரவாளர் எம்.எம்.ஏ. ஒருவர் கூறுகையில், "தீர்ப்பு எங்களுக்கு வருத்தம் அளித்தாலும் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். எங்களிடம் ஒற்றுமையில்லை என்ற தகவலை பன்னீர்செல்வத்தின் தரப்பு பரப்பி வருகிறது. எந்த சூழ்நிலையிலும் சின்னம்மா தலைமையில் செயல்படுவோம்" என்றார்.

பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் கூறுகையில், "ரிசார்ட்டுக்குள் இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் வெளியே வருவதாக சொல்லியும் அவர்களை சசிகலா தரப்பு கட்டாயப்படுத்தி வைத்துள்ளது. எம்.எல்.ஏ.க்களை சுதந்திரமாக வெளியில் விட வேண்டும். ரிசார்ட்டுக்குள் எம்.எல்.ஏ.க்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு முழு பொறுப்பை சசிகலா ஏற்க வேண்டும். அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமலிருக்க போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் சசிகலாவுக்கு மெஜாரிட்டி கிடைக்காது. முதல்வராக பன்னீர்செல்வமே தொடருவார்" என்றனர்.

-எஸ்.மகேஷ்

Sasikala's conviction in wealth case upheld by Supreme Court

NEW DELHI: Long-time Jayalalithaa aide Sasikala's conviction was upheld today in the disproportionate assets case by a Supreme Court bench, nixing any possibility of her becoming Tamil Nadu chief minister.

She and the other accused will be soon taken into custody for serving out the remaining four years of her sentence.They will also have to pay a fine of Rs 10 crore each.

"Amma's purity destroyed by traitors", tweeted the AIADMK in Tamil.

Late Tamil Nadu chief minister Jayalalithaa was also named in the lawsuit, but the case against her stands abated with her demise.

The verdict disqualifies Sasikala from becoming a legislator, and consequentially she can't be chief minister either. This also gives caretaker Tamil Nadu CM O Panneerselvam a huge boost in staking claim to be the legitimate successor to Jayalalithaa, who passed away in December.

Sasikala had staked the claim to be Tamil Nadu chief minister over Panneerselvam.

The two separate judgements were today delivered by a two-judge Supreme Court bench comprising Justices Amitava Roy and Pinaki Chandra Ghosh. Justice Ghose authored the main judgment that ran into around a thousand pages. He himself described it as "fatty judgment". Justice Roy wrote a separate "thin" concurring judgment.

The legal proceedings in the DA case against Jayalalithaa and Sasikala go back two decades. The apex court had transferred the trial to Bengaluru after a DMK member, K Anbazaghan, moved court alleging that the trial may not be free and fair if it continued in Chennai when the main accused was chief minister.

The Bengaluru trial court convicted Jayalalithaa on September 27, 2014, and awarded her four years imprisonment along with Rs 100 crore fine, with Rs 10 crore fine on the other three. The conviction disqualified her as an MLA requiring her to step down as CM. But she returned as CM after Karnataka HC on May 11, 2015 acquitted her, Sasikala and the others in the DA case.

மரணத்தால் சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து ஜெயலலிதா விடுவிப்பு!



சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. ஜெயலலிதா மரணம் அடைந்ததால் அவரை வழக்கில் இருந்து உச்ச நீதிமன்றம விடுதலை செய்தது.

1991-1995 வரையிலான காலகட்டத்தில், வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடி சொத்து சேர்த்ததாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரின் பெயர்கள் சொத்து குவிப்பு வழக்கில் சேர்க்கப்பட்டன. இந்த வழக்கு விசாரணையை கர்நாடகாவுக்கு உச்ச நீதிமன்றம் மாற்றியது. அதன் அடிப்படையில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா கடந்த 2015 செப்டம்பர் 27-ம் தேதி அளித்த தீர்ப்பில், ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் தலா 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், ஜெயலலிதாவுக்கு 100 கோடியே 1 லட்ச ரூபாயும், சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தலா 10 கோடியே 10 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி, கடந்த 2015 மே 11-ம் தேதி அளித்த தீர்ப்பில், ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசும், திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்தவராய் ஆகியோர் முன்னிலையில் கடந்த 2015 பிப்ரவரி 23 முதல் இறுதி வாதம் நடைபெற்று வந்தது. கர்நாடக தரப்பில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே மற்றுடம் அரசு மூத்த வழக்கறிஞர் ஆச்சார்யா, ஜெயலலிதா தரப்பில் மூத்த வழக்கறிஞர் நாகேஸ்வர ராவ், சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் சார்பில் மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்டே ஆகியோர் வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் வழக்கின் மீதான தீர்ப்பை நீதிபதிகள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 7-ம் தேதி, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், கர்நாடக அரசு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் துஷ்யந்த் தவே, நீதிபதி பினாகி சந்திரகோஷ் அடங்கிய அமர்வில் ஆஜராகி, சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு இதுவரை தீர்ப்பு வெளியிடப்படவில்லை. இந்த வழக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த வழக்காகும் என்றார். இதைக்கேட்ட நீதிபதிகள், ஒரு வாரம் பொறுத்திருங்கள் என்று அறிவித்திருந்தார். அதன்படி ஒரு வாரம் கழித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்தவராய் இன்று தீர்ப்பளித்தனர்.

அப்போது, அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. மேலும், மூன்று பேரும் நான்கு வாரத்தில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதா விடுவிப்பு

ஜெயலலிதா மரணம் அடைந்ததால் அவரை வழக்கில் இருந்து உச்ச நீதிமன்றம விடுதலை செய்தது.

சிங்கிள் செல்லங்கள் காதலர் தினத்தை இப்படியெல்லாம் கொண்டாடலாம்! #ValentinesDay


இந்தக் காதலர் தினம் வந்தாலே பசங்களுக்கு மனசுல உக்கார இடம் இல்லாம பட்டாம்பூச்சி பறக்கும். ஆள் இருக்கவன் பாத்த ஊரையே பாக்காத மாறி ஊர் சுத்தப் போவான். இல்லாதவன் எதாவது கிடைக்குமா.. நாமும் யார் கண்ணுக்காவது அஜித், விஜய், சிவா மாதிரித் தெரிஞ்சு நமக்கு ‘ஓகே’ சொல்ல மாட்டார்களானு சுத்திப் பார்ப்பான்.

ஆனா பெத்தவங்களுக்கு மனசு அன்றைக்குத்தான் பக் பக்னு - இருக்கும். காலேஜ் இருந்தாலும் பயம்.. இல்லாட்டியும் பயம். காலேஜ் இருந்தா ‘காலேஜுஜ்குத்தான் போனாளா.. இல்ல கட் அடிச்சுட்டு வெளில போய்ட்டாளோ’ அப்டின்னு சந்தேகப்பட்டு மணிக்கு ஒரு முறை போன் பண்ணி கேட்கும் அளவுக்கு பயம். கல்லூரி இல்லாவிட்டால் வெளியில் கடைக்கு தனியே அனுப்பக் கூட பயப்படுவார்கள். ஆஃபீஸில் உயர் அதிகாரிகளைக் கூட எளிதில் தாண்டி வந்து விடுவார்கள். வருடத்தின் இந்த நாளைத் தாண்டுவது பெரிய வேலையாக இருக்கும் பெற்றோருக்கு.

காதலி இருப்பவனுக்கு அவர் மேல் அன்பைப் பொழியும் தினமாய் அது அமையும். அன்றைக்கு ஒரு நாளாவது சண்டை ஏதும் இன்றி இருப்போம் என்று சபதம் ஏற்று நடக்கும் கூட்டம் உண்டு. இது ஒரு ரகம். இது ஒரு 35% இருப்பாங்கனு வெச்சுப்போம்.

காதலர் தினத்தன்று புதிதாய் மலரும் காதல்கள் மற்றொரு ரகம். ‘வாழ்வில் இந்த நாளுக்காகக் காத்திருந்தோம்’ என்று வசனம் பேசி காதலை வெளிப்படுத்தும் ரகம் இது. இது ஒரு 20%.

மிஞ்சி இருக்கும் 45% ‘ஐயம் சிங்கிள்’ என்று காலரை தூக்கி விட்டுக்கொண்டு கெத்தாக சுற்றும் நம் 'வருத்தப்படாத வாலிபர் சங்க' உறுப்பினர்கள்.

‘இருக்கவனுக்கு ஒரு காதல். இல்லாதவனுக்கு எங்கெங்கும் காதல்’ என்று மிடுக்காய் வசனம் பேசிச் சுற்றும் யுவன்- யுவதிகளை கொஞ்சம் கவனிப்போம்.



அன்பு மொத்தத்தையும் ஒருவரிடம் கொட்டாமல் எல்லாருக்கும் பகிர்ந்து அளிக்கும் சோசியலிஸ்ட் நாங்கள்.

கணியன் பூங்குன்றனார் சொன்ன `யாதும் ஊரே ; யாவரும் கேளிர்` எங்களிடம் இருப்பதைப் பார்க்கலாம்.

நாங்கள் ஆள் இல்லை என்பதை சமாளிக்கச் சொல்லவில்லை... அந்தத் தொல்லை எங்களுக்கு இல்லை. எங்கள் அன்பிற்கும் மகிழ்ச்சிக்கும் அணை கிடையாது என்பதை காட்டத்தான் சொல்கிறோம்.

இவர்கள் எப்படி காதலர் தினத்தைக் கொண்டாடுவார்கள்?

வாலன்டைன் சாகும்போது அன்பை பரிமாறிக் கொள்ளச் சொன்னார். சரி... ஒருவரிடம் மட்டும் எந்த அன்பை குவியுங்கள் என்று குறிப்பிட வில்லையே!

1. எப்பொழுதும் விற்கும் 5 ரூபாய் பூ வாலன்டைன்ஸ் டே அன்று 50 ரூபாயாம். அப்படி வீண் செலவு செய்து ஒருவரை மகிழ்விப்பதை விட 50 ரூபாய்க்கு மிட்டாய் வாங்கி பக்கத்து வீட்டு குழந்தைக்கு கொடுக்கலாம். அழகாக செல்பிக்கு போஸ் கொடுக்கும்.

2. கல்லூரில எப்படியும் பாதிப் பேர் மதியம் ஓடிருவாங்க. பிறகு நம் இனம்தான். ஜாலியா உக்காந்துருப்போம். எல்லாம் சேர்ந்து சந்தோசமா இருக்கலாம். கடைசி வருடம் படிக்கும் மாணவர்கள்னா... வாலன்டைன்ஸ் டே அன்று நம்ம நண்பர்களுக்கு.." மச்சி.. ஐ லவ் யூடா.. ஐ மிஸ் யூடீ" கூடச் சொல்லலாம். தப்பில்லைங்கறேன்.

3. அப்பா அம்மாக்கு லவ் யூ சொல்லலாம். அன்பா நாலு வார்த்தை பேசி அவங்களுக்கு ஆறுதலை இருக்கலாம். நாம சிங்கிளா இருக்கறதப் பார்த்து ‘அப்பாடா’னு நெனைக்கற ஜீவன் அவங்கதானே.. பாவம்!

4. சமூகத்து மேல காதல் இருக்கவங்க இன்னிக்கு சமூக சேவை கூட செய்யலாம். மாற்றுத் திறன் மாணவர்கள் பள்ளில போய் அவங்களுடன் இருக்க நேரம் ஒத்துக்கலாம். உண்மைய சொல்ல போனா அவங்களுக்குத்தான் இப்ப அன்பும், காதலும் தேவைப்படுது. ஒருபடி மேல சொல்லணும்னா ஆதரவற்றோர் இல்லம், முதியோர் இல்லத்துக்கு போலாம். இந்த உலகத்திலேயே அன்புக்காக அதிகம் ஏங்குபவர்கள் இவர்கள் தான்.

5. புத்தகக் காதலர்கள், சேமித்த பணத்தில் ஒரு புத்தகம் வாங்கிக் கொள்ளலாம். அதை காதலர் தினத்தன்று வாங்கிய புத்தகம் என்று குறிப்பிட்டு, பொக்கிஷமாய் வைத்துக்கொள்ளலாம். காதலர் தினத்துக்கு லோன் அப்ளை பண்ணிக் கொண்டாடறதுக்கு இது எவ்வளவோ பெட்டர் பாஸ்!

இப்படி இன்னும் இன்னும் நிறைய செய்யலாம். வேற என்னென்ன செய்யலாம் என்று நீங்களும் சொல்லுங்க பார்ப்போம்!

NEWS TODAY 17.08.2026