சிங்கிள் செல்லங்கள் காதலர் தினத்தை இப்படியெல்லாம் கொண்டாடலாம்! #ValentinesDay
இந்தக் காதலர் தினம் வந்தாலே பசங்களுக்கு மனசுல உக்கார இடம் இல்லாம பட்டாம்பூச்சி பறக்கும். ஆள் இருக்கவன் பாத்த ஊரையே பாக்காத மாறி ஊர் சுத்தப் போவான். இல்லாதவன் எதாவது கிடைக்குமா.. நாமும் யார் கண்ணுக்காவது அஜித், விஜய், சிவா மாதிரித் தெரிஞ்சு நமக்கு ‘ஓகே’ சொல்ல மாட்டார்களானு சுத்திப் பார்ப்பான்.
ஆனா பெத்தவங்களுக்கு மனசு அன்றைக்குத்தான் பக் பக்னு - இருக்கும். காலேஜ் இருந்தாலும் பயம்.. இல்லாட்டியும் பயம். காலேஜ் இருந்தா ‘காலேஜுஜ்குத்தான் போனாளா.. இல்ல கட் அடிச்சுட்டு வெளில போய்ட்டாளோ’ அப்டின்னு சந்தேகப்பட்டு மணிக்கு ஒரு முறை போன் பண்ணி கேட்கும் அளவுக்கு பயம். கல்லூரி இல்லாவிட்டால் வெளியில் கடைக்கு தனியே அனுப்பக் கூட பயப்படுவார்கள். ஆஃபீஸில் உயர் அதிகாரிகளைக் கூட எளிதில் தாண்டி வந்து விடுவார்கள். வருடத்தின் இந்த நாளைத் தாண்டுவது பெரிய வேலையாக இருக்கும் பெற்றோருக்கு.
காதலி இருப்பவனுக்கு அவர் மேல் அன்பைப் பொழியும் தினமாய் அது அமையும். அன்றைக்கு ஒரு நாளாவது சண்டை ஏதும் இன்றி இருப்போம் என்று சபதம் ஏற்று நடக்கும் கூட்டம் உண்டு. இது ஒரு ரகம். இது ஒரு 35% இருப்பாங்கனு வெச்சுப்போம்.
காதலர் தினத்தன்று புதிதாய் மலரும் காதல்கள் மற்றொரு ரகம். ‘வாழ்வில் இந்த நாளுக்காகக் காத்திருந்தோம்’ என்று வசனம் பேசி காதலை வெளிப்படுத்தும் ரகம் இது. இது ஒரு 20%.
மிஞ்சி இருக்கும் 45% ‘ஐயம் சிங்கிள்’ என்று காலரை தூக்கி விட்டுக்கொண்டு கெத்தாக சுற்றும் நம் 'வருத்தப்படாத வாலிபர் சங்க' உறுப்பினர்கள்.
‘இருக்கவனுக்கு ஒரு காதல். இல்லாதவனுக்கு எங்கெங்கும் காதல்’ என்று மிடுக்காய் வசனம் பேசிச் சுற்றும் யுவன்- யுவதிகளை கொஞ்சம் கவனிப்போம்.
அன்பு மொத்தத்தையும் ஒருவரிடம் கொட்டாமல் எல்லாருக்கும் பகிர்ந்து அளிக்கும் சோசியலிஸ்ட் நாங்கள்.
கணியன் பூங்குன்றனார் சொன்ன `யாதும் ஊரே ; யாவரும் கேளிர்` எங்களிடம் இருப்பதைப் பார்க்கலாம்.
நாங்கள் ஆள் இல்லை என்பதை சமாளிக்கச் சொல்லவில்லை... அந்தத் தொல்லை எங்களுக்கு இல்லை. எங்கள் அன்பிற்கும் மகிழ்ச்சிக்கும் அணை கிடையாது என்பதை காட்டத்தான் சொல்கிறோம்.
இவர்கள் எப்படி காதலர் தினத்தைக் கொண்டாடுவார்கள்?
வாலன்டைன் சாகும்போது அன்பை பரிமாறிக் கொள்ளச் சொன்னார். சரி... ஒருவரிடம் மட்டும் எந்த அன்பை குவியுங்கள் என்று குறிப்பிட வில்லையே!
1. எப்பொழுதும் விற்கும் 5 ரூபாய் பூ வாலன்டைன்ஸ் டே அன்று 50 ரூபாயாம். அப்படி வீண் செலவு செய்து ஒருவரை மகிழ்விப்பதை விட 50 ரூபாய்க்கு மிட்டாய் வாங்கி பக்கத்து வீட்டு குழந்தைக்கு கொடுக்கலாம். அழகாக செல்பிக்கு போஸ் கொடுக்கும்.
2. கல்லூரில எப்படியும் பாதிப் பேர் மதியம் ஓடிருவாங்க. பிறகு நம் இனம்தான். ஜாலியா உக்காந்துருப்போம். எல்லாம் சேர்ந்து சந்தோசமா இருக்கலாம். கடைசி வருடம் படிக்கும் மாணவர்கள்னா... வாலன்டைன்ஸ் டே அன்று நம்ம நண்பர்களுக்கு.." மச்சி.. ஐ லவ் யூடா.. ஐ மிஸ் யூடீ" கூடச் சொல்லலாம். தப்பில்லைங்கறேன்.
3. அப்பா அம்மாக்கு லவ் யூ சொல்லலாம். அன்பா நாலு வார்த்தை பேசி அவங்களுக்கு ஆறுதலை இருக்கலாம். நாம சிங்கிளா இருக்கறதப் பார்த்து ‘அப்பாடா’னு நெனைக்கற ஜீவன் அவங்கதானே.. பாவம்!
4. சமூகத்து மேல காதல் இருக்கவங்க இன்னிக்கு சமூக சேவை கூட செய்யலாம். மாற்றுத் திறன் மாணவர்கள் பள்ளில போய் அவங்களுடன் இருக்க நேரம் ஒத்துக்கலாம். உண்மைய சொல்ல போனா அவங்களுக்குத்தான் இப்ப அன்பும், காதலும் தேவைப்படுது. ஒருபடி மேல சொல்லணும்னா ஆதரவற்றோர் இல்லம், முதியோர் இல்லத்துக்கு போலாம். இந்த உலகத்திலேயே அன்புக்காக அதிகம் ஏங்குபவர்கள் இவர்கள் தான்.
5. புத்தகக் காதலர்கள், சேமித்த பணத்தில் ஒரு புத்தகம் வாங்கிக் கொள்ளலாம். அதை காதலர் தினத்தன்று வாங்கிய புத்தகம் என்று குறிப்பிட்டு, பொக்கிஷமாய் வைத்துக்கொள்ளலாம். காதலர் தினத்துக்கு லோன் அப்ளை பண்ணிக் கொண்டாடறதுக்கு இது எவ்வளவோ பெட்டர் பாஸ்!
இப்படி இன்னும் இன்னும் நிறைய செய்யலாம். வேற என்னென்ன செய்யலாம் என்று நீங்களும் சொல்லுங்க பார்ப்போம்!
No comments:
Post a Comment