Saturday, February 25, 2017



தமிழகத்தி ல் இன்று சற்று கூலான சூரியன்.. சீக்கிரம் கொளுத்த ரெடியாகிறது!

சென்னை: வெப்பம் அதிகம் தகிக்கும் மாவட்டங்களான சேலம், கரூர் ஆகிய மாவட்டங்களில் சதம் அடித்த வெயில் இன்று குறைந்துள்ளது.

தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருபவமழை பொய்த்ததால் ஆங்காங்கே வறட்சி ஏற்பட்டு விவசாயப் பயிர்கள் காய்ந்து போதிய விளைச்சல் இல்லாமலும், முதலீடு செய்ய தொகை கூட கிடைக்காததாலும் விரக்தி அடைந்த 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் உயிரை மாய்த்து கொண்டனர்.

இதனால் மாசி மாதத்திலேயே இத்தனை வறட்சி நிலவுகிறது. மழையின்றி இதே நிலை தொடர்ந்தால் இன்னும் பங்குனி, சித்திரை ஆகிய மாதங்களில் எந்த அளவுக்கு வறட்சியும், வெப்பமும் வாட்டி எடுக்கும் என்று மக்கள் கவலை அடைந்துள்ளனர்.


இந்நிலையில் பருவநிலை மாற்றத்தின் எதிரொலியாக இந்தியா முழுவதும் இந்த ஆண்டு காலநிலை வழக்கத்துக்கு மாறாக மாறிவிட்டன. ஜம்மு- காஷ்மீர், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், தில்லி உள்ளிட்ட மாநிலங்களில் கடுங்குளிர் நிலவியது. ஜம்முவிலோ நீர் நிலைகள், தண்ணீர் குழாய்கள் ஆகியன ஐஸ்கட்டிகளாக மாறியது.


தமிழகத்தை பொருத்தவரை சேலம், கரூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக வெப்பம் அதிகரித்து வந்தது. கடந்த சில நாள்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்பம் தகித்து காலை 7 மணிக்கே சூரியன் சுள்ளென்று ஜன்னல் புறமாக எட்டி பார்த்தது. இதனால் சேலம், கரூர், நாமக்கல், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பநிலை 99 டிகிரி பாரன்ஹிட்டை தாண்டியது.


இந்நிலையில், சதம் அடித்த வெப்பம் இன்று சற்று கூலாகி 83 முதல் 87 டிகிரி பாரன்ஹிட் வரை மட்டும் உள்ளது. கரூரில் இன்றைய வெப்பநிலை 84.2 டிகிரி பாரன்ஹிட்டாகவும், மலைகள் சூழ்ந்த வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் முறையே 87.8, 86 டிகிரியாகவும், சேலத்தில் 86 டிகிரியாகவும், அரியலூர், திருச்சி ஆகியவற்றில் 82.4 டிகிரியாகவும் உள்ளது.

சென்னையை பொருத்தவரை 84.2 டிகிரி பாரன்ஹிட்டாக உள்ளது. இதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். வானிலை மையத்தின் அறிக்கையின்படி, சென்னையில் வரும் நாள்களில் தற்போதுள்ள வெப்பநிலை ஒன்று அல்லது இரண்டு டிகிரிகள் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது.


தற்போது குடிசை வீடுகளிலும் ஏசி, பிரிட்ஜ் உள்ளிட்ட சாதனங்கள் காணப்படுகின்றன. ஏசிகளில் இருந்து வெளியேறும் வாயுக்களால் வளி மண்டலங்கள் மாசு அடைந்துள்ளது. இதற்காக பருவநிலை மாற்றம் தொடர்பாக மாநாடுகள் நடைபெற்று உலக வெப்பமயமாக்கலை தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.




No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024