Saturday, February 25, 2017

ஸ்டேட் வங்கியுடன் 5 வங்கிகள் இணைப்பு

பாரத ஸ்டேட் வங்கி, இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி. இவ்வங்கியின் துணை வங்கிகளான, ஸ்டேட் பாங்க் ஆப் ஐதராபாத்; ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர்; ஸ்டேட் பாங்க் ஆப் பிகானீர், ஸ்டேட் பாங்க் ஆப் மைசூரு மற்றும் ஸ்டேட் பாங்க் ஆப் பாட்டியாலா போன்றவற்றை, முற்றிலுமாக ஸ்டேட் வங்கியுடன் இணைத்துவிட, மத்திய அரசு முடிவெடுத்தது.
 அதற்கு, அந்த துணை வங்கிகளின் ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 'வாடிக்கையாளர்களுக்கு பிரச்னை ஏற்படும், வேலைவாய்ப்பு குறையும்' என்பது உள்ளிட்ட காரணங்களை கூறி, துணை வங்கிகளின் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், 'பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்பட்டால், அவற்றின் மூலதனம் உயரும். மேலும் சர்வதேச வங்கியாக, பாரத ஸ்டேட் வங்கி உயரும்' என, மத்திய அரசு கருதுகிறது. இந்நிலையில், ஏப்ரல், 1ல் இருந்து, மேற்கண்ட ஐந்து துணை வங்கிகளும், பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைக்கப்பட உள்ளதாக, ஸ்டேட் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024