பிறந்தநாளில் குப்பையில் கிடந்த ஜெயலலிதா படம்!
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை அதிமுகவினர் தமிழகம் முழுவதும் கொண்டாடி வந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் அவரது படம் குப்பையில் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்போது மராமத்துப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால், ரப்பீஸ் மற்றும் பழைய பொருட்களை கொட்டுமிடத்தில் ஜெயலலிதாவின் படத்தையும், அருகில் மற்ற மர சாமான்களுடன் ஒரு துடைப்பத்தையும் பணி ஆட்கள் போட்டிருந்தார்கள்.
ஜெயலலிதா பிறந்த நாளான இன்று, அதிமுகவினர் தமிழகம் முழுவதும் இனிப்புகள் வழங்கிக் கொண்டாடி வந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இப்படியொரு காட்சியைக் கண்ட அப்பகுதி மக்கள், அதிர்ச்சியுடன் பார்த்து சென்றனர்.
செ.சல்மான், படம்: சே.சின்னதுரை
Dailyhunt
No comments:
Post a Comment