Tuesday, February 28, 2017

ஏப்ரல் 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் ரோமிங் கட்டணம் ரத்து: ஏர்டெல் அதிரடி அறிவிப்பு

By DIN  |   Published on : 27th February 2017 07:01 PM  |  
bharti-airtel
சென்னை: ஜியோ வருகைக்குப்பின் தொலைத்தொடர்பு சந்தையில் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள வோடபோன், ஏர்டெல், ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் புதுப்புது சலுகைகளை அறிவித்து வருகின்றன.
இந்நிலையில், முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் இந்தியா முழுவதும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கால் மற்றும் டேட்டாவுக்கான ரோமிங் கட்டணத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. மேலும், வெளிநாடு செல்லும் வாடிக்கையாளர்களுக்கு சலுகை விலையில் ரோமிங் கட்டணங்களை வழங்கவும் ஏர்டெல் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “நாங்கள் உள்நாட்டு ரோமிங் கட்டணத்தை முழுவதுமாக ரத்து செய்ய முடிவு செய்துள்ளோம்” என தெரிவித்துள்ளது. 

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024