Monday, February 27, 2017

5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான ஆதார் பதிவு: அரசு உரிய தகவல்களை தெரிவிக்காததால் பெற்றோர் அவதி

ச.கார்த்திகேயன்

அரசு 5 வயதுக்கு உட்பட்ட குழந்தை களுக்கான ஆதார் பதிவு தொடர்பாக உரிய தகவல்களை தெரிவிக்காததால் பெற்றோர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தமிழகத்தில் இதுவரை 6 கோடி பேருக்கு ஆதார் பதிவு செய்யப்பட்டுள்ளது. 5 வயதுக்கு மேற்பட்டோருக்கு அரசு இ-சேவை மையங்களில் செயல்பட்டு வரும் ஆதார் நிரந்தர மையங்கள் மூலமாக ஆதார் பதிவு செய்யப்படுகிறது.

தற்போது குடும்ப அட்டை களில் குழந்தைகள் உள்பட அனைவரின் ஆதார் விவரங் களையும் அளிக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில், 5 வயதுக்கு உட்பட்ட குழந் தைகளுக்கு ஆதார் பதிவு செய்ய என்னென்ன ஆவணங்கள் தேவை? யாரை? எங்கு? அணுகுவது என்பது குறித்து அரசால் எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள், தங்கள் குழந்தைகளின் ஆதார் விவரங் களை நியாயவிலைக் கடைகளில் பதிவு செய்ய முடியாமல், அங்கு கிடைத்து வந்த பொருட்கள் முழுமையாக கிடைக்காதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆதார் நிறுவ னமான யூஐடிஏஐ இடம் அங்கீ காரம் பெற்ற சில தனியார் நிறுவனங்கள், எந்தவித அறி விப்பும் இன்றி, ஆங்காங்கே 5 வயதுக்கு உட்பட்ட குழந் தைகளுக்கு ஆதார் பதிவு செய்து வருகின்றனர்.

இந்த பதிவு, சம்மந்தப்பட்ட பகுதியில் எத்தனை நாட்கள் நடைபெறும் என்ற விவரங்களை பொதுமக்களுக்கு தெரிவிக் காததால், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் அளவுக்கு பெற்றோர்கள் குழந்தைகளுடன் குவிந்து விடுகின்றனர்.

இது தொடர்பாக வியாசர் பாடியைச் சேர்ந்த அசோக் கூறும்போது, சில தினங்களுக்கு முன்பு எங்கள் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் பதிவு நடைபெற்றது. அது தொடர்பாக எந்த அறிவிப்பும் இல்லை. முகாம் ஒருநாள் மட்டுமே நடைபெறும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் அங்கு அதிக அளவில் கூடிவிட்டனர். அதனால் குழந்தைகள் நெரி சலில் சிக்கி அழும் நிலை ஏற்பட்டது.

பொதுமக்கள் தங்கள் குழந் தைகளுக்கு ஆதார் பதிவு செய்ய விரும்புகின்றனர். ஆனால் எங்கு செல்வது என்றே தெரிய வில்லை. அதனால் பெற்றோர் அவதிப்படுகின்றனர்.
எனவே அரசே ஆதார் பதிவை மேற்கொள்ள வேண்டும். ஆதார் பதிவு செய்யும் நேரம், நாள் குறித்து முன்கூட்டியே அரசு அறிவிக்க வேண்டும் என்றார்.

இது தொடர்பாக யூஐடிஏஐ நிறுவனத்தின் துணை இயக்குநர் அசோக் லெனினிடம் கேட்டபோது, யூஐடிஏஐ தலைமையகம் சார்பில் நாடு முழுவதும் சில தனியார் நிறுவனங்களுக்கு, 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் பதிவு செய்யும் உரி மத்தை வழங்கியுள்ளது. அவர் கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் எடுத்து வருகின்றனர்.

இதற்கிடையில் தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை மூலமாக பல நிறுவனங் களுக்கு, 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் பதிவு செய்யும் உரிமம் வழங்கப் பட்டுள்ளது. அவர்கள் மார்ச் மாதம் பணிகளைத் தொடங்குவார்கள். அப்போது அவர்கள் முறையான அறிவிப்பை செய்து, ஆதார் பதிவு மேற்கொள்வார்கள் என்றார்.

இது தொடர்பாக அரசு கேபிள் டிவி நிறுவன மேலாண் இயக்குநர் ஜெ.குமரகுருபரனிடம் கேட்டபோது, தமிழகத்தில் மொத்தம் 5 வயதுக்கு உட்பட்ட 67 லட்சம் குழந்தைகள் உள்ள னர். எங்கள் சார்பில் 3 தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அவர்கள் மார்ச் 2-வது வாரம் முதல் முறையாக அறிவிப்பு செய்து, பள்ளிகள், அங்கன்வாடி மையங் களில் குழந்தைகளுக்கு ஆதார் பதிவு மேற்கொள் வார்கள்.

மாவட்ட வாரியாக பணிகள் ஒதுக்க அந்தந்த மாவட்ட ஆட்சி யர்களுக்கும், சமூகநலத்துறை அலுவலர்களுக்கும் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப் பட்டுள்ளன என்றார்.

குழந்தைகளுக்கு ஆதார் எடுப்பது எப்படி?
5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைப் பொருத்தவரை அவர்களின் கை விரல் ரேகை, கருவிழிப் படலம் ஆகியவை பதிவு செய்யப்படாது. குழந்தைகளின் பிறப்புச் சான்று, பெற்றோரின் ஆதார் எண் ஆகியவை டேப்லெட் கணினியில் பதிவு செய்து, அதன்மூலம் குழந்தைகளின் படம் எடுக்கப்பட்டு, பின்னர் ஆதார் அட்டை வழங்கப்படும். குழந்தை 5 வயதை நிறைவுசெய்த பின், அந்த குழந்தையின் கை விரல் ரேகை, கருவிழிப் படலம் பதிவு செய்யப்படும்

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024