நடிகர் தவக்களை காலமானார்!
நடிகர் தவக்களை உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 42. வடபழனியில் உள்ள அவரது வீட்டில் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளார். பாக்யராஜின் முந்தானை முடிச்சு படம் மூலம் அறிமுகமான தவக்களை ஆண்பாவம், கமலின் காக்கிச் சட்டை உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவரின் இறுதிச் சடங்கு நாளை நடக்கிறது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தவக்களையின் இயற்பெயர் சிட்டிபாபு. அவருக்கு குழந்தைகள் இல்லை.
No comments:
Post a Comment